Monday, July 30, 2018

ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271 thanks to tamil and vedas.com


 ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271
Yahoo/Inbox

  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    30 Jul at 2:13 AM

    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271

    by Tamil and Vedas
    Written by London swaminathan
    Date: 30 JULY 2018

    Time uploaded in London – 9-12 am  (British Summer Time)

    Post No. 5271

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    அயோத்தியில் புறப்பட்டு, இலங்கைத் தீவுக்கு வந்து விட்டு, மீண்டும் அயோத்திக்குப் போன ராம பிரான் 5113 நாட்களுக்கு நடந்து உலக சாதனை படைத்தான். அவன் சென்ற இடமெல்லாம் புனிதமானது; அவன் தொட்டதெல்லாம் பொன் ஆனது; அவன் கண் பட்ட இடமெல்லாம் அருள் சுரந்தது. இந்தியாவில் எங்கு சென்றாலும், இது ராமர் வந்த இடம், இது பஞ்ச பாண்டவர் வந்த இடம் என்று சொல்லுவதில் வியப்பொன்றும் இல்லை.

    நாநிலம் வியக்கும் வீரர் பெரு மக்கள், மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் நடந்து வந்தால், உலகமே வரவேற்காதா! வியக்காதா!

    இதோ ராமனின் 128 மண்டகப்படிகளில் கடைசி கட்டம்; இந்த ஐந்தாவது பகுதியுடன் ராமன் பயணம் நிறைவு பெறுகிறது. அலெக்ஸாண்டர் நடக்க வில்லை; குதிரையில் வந்தான்! ராமன் நடந்தான். ஆதி சங்கரரும், ராமனைப் பின்பற்றி நடந்தார். இமயத்திலிருந்து தமிழ் இலக்கணம் எழுத தென்னகம் வந்த அகஸ்தியர், ஒரு வேளை பல்லக்குகளைப் பயன்படுத்தி இருக்கலாம். ராமனோ என்றும் பாத சாரி! உலக இலக்கியங்களில் இது போல யாரும் இல்லை; ஹோமரின் கிரேக்க கதா பாத்திரங்கள் குதிரையிலும் கப்பலிலும் சென்றனர். இந்து மத வீரகளோ உலகின் மிகப்பெரிய நாட்டை (அக்காலத்தில்) நடந்தே கடந்தனர். அவர்களால் இந்த மண் புனிதம் பெற்றதா? புனித மண் என்பதால் அவர்கள் நடந்தார்களா? சிந்திக்க வேண்டிய விஷயம்!

    106.கபிஸ்தலம் (தஞ்சை வட்டம்)
    ஹனுமார் தாவிச் சென்ற இடம்

    107.பாபநாசம் சிவன் கோவில்
    கர, தூஷண, திரிசிரஸ் என்ற பிராஹ்மண அசுரர்கள்ளைக் கொன்ற பாபம் நீங்க சிவனை ராமன் வழிபட்ட இடம்
    108.கோடிக்கரை (வேதாரண்யம்)

    முதலில் ராமனிடம் எஞ்சினீயர் நீலன் கொடுத்த ப்ளூப்ரிண்ட் படி இங்கிருந்து அணை கட்ட திட்டமிட்டனர். பின்னர் ராமன் அந்த திட்டத்தைக் கைவிட்டு தனுஷ்கோடி சென்றான். அவன் ஒரு ஆலமரத்தடியில் இருந்து ஆலோசானை செய்கையில் பறவைகள் காச்சு மூச்சென்று கத்தின ராமன் உஷ் என்று சொன்னவுடன் அவை அதிசயமாக அடங்கிவிட்டன; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடலில் இது பற்றியுள்ளது. அகநானூறு 70ம் பாடலில் மேல் விவரம் காண்க)


    109.உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில்
    ஸீதா தேவியை மீட்கும் விஷயத்தில் வெற்றி கிடைக்கப் பிரார்த்தித்த இடம்

    110.தேவிப்பட்டணம்/ நவபாஷாணம்
    இங்கு ராமர் நவக்ரஹங்களை வழிபட்டார்.
    111.திருப்புள்ளானி / தர்ப சயனம்

    கடல் பயணத்தில் வெற்றி பெற ராமன் வருண பகவானை பிரார்த்தித்த இடம்

    112.புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவில்
    ஜடாயுவுக்குத் தர்ப்பணம் செய்த இடம்; வடக்கிலும் இப்படி ஒரு ஸ்தலம் உள்ளது. ஆண்டு தோறும் திதி செய்யப்படுவதால் இரண்டும் சரியாக இருக்கலாம்.


    113.சேதுக்கரை

    இங்கு இலங்கைக்கான பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார் ராமபிரான்

    114.தங்கச்சிமடம் வில்லூன்றி தீர்த்தம்

    இங்கே வானரப் படைகளுக்காக ராமர் வில் மூலம் ஒரு ஊற்றை உண்டாக்கினார்.


    115.கந்தமாதன் பர்வத, ராமேஸ்வரம்
    இங்கிருந்து ராமர் கடலின் விஸ்தீரணததைக் கண்டார்.
    116.அக்னி தீர்த்தம்
    ராமர் குளித்த புனித நீர்நிலை

    117.ராமேஸ்வரம் கோவில்
    ராமர் பூஜித்த சிவலிங்கம்
    118.தனுஷ்கோடி
    ராவணனை வென்ற பின்னர்,  விபீஷணன் வேண்டுகோளின் பேரில், பாலத்தைப் பிரித்த இடம்

    119.திரு அப்பனுர்- ராமர் பாலம் மண்
    பாலம் கட்ட ராமர் 14 புனித இடங்களிலிருந்து மண் எடுக்க வேண்டும் என்றும் அதில் அப்பனூர் ஒரு இடம் என்றும் தல புராணம் சொல்லும். ராமர் கொண்டுவந்த 2 யானைகள் இறக்க்வே அவைகளை இங்கு புதைத்ததாகவும் அங்கே இப்பொழுது கண்மாய்கள் இருப்பதகவும் மக்கள் நம்புகின்றனர். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உளது
    மீண்டும் அயோத்தி சென்றபோது
    120.தில்லை விளாகம் கோதண்டராமர் கோவில்

    ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமர் வந்த இடம்.திருவாரூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது (சிதம்பரத்தையும் இப்பெயரால் அழைப்பர்; இது வேறு தலம்).
    இங்கு ராம சரம் என்று பொறிக்கப்பட்ட அம்புடன் கூடிய அழகாக்ன ராம விக்ரஹம் உள்ளது. பங்குனி மாத ராம நவமி உற்சவத்தில் 11ஆவது நாளன்று மான் வஹனத்தில் ராமர் பவனி வருவது ஒரு அரிய காட்சி; வேறெங்கும் இல்லாத புதுமை!
    121.நம்புநாயகி அம்மன் கோவில், ராமேஸ்வரம் தீவு
    முன்னர் தனுஷ்கோடியில் இருந்த கோவில்  கடல் உள்ளே வர வர, இடம் மாற்றப்பட்டு இப்போதுள்ள இடத்துக்கு வந்தது; இங்கு ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததாக தல புராணம் சொல்லும்.

    122.காஞ்சி விஜயராகவப் பெருமாள் கோவில் (திருப்புட்குழி)
    இங்குள்ள ஜடாயு புஷ்கரணியில் ராமர் குளித்ததாக அதீகம்

    123.வடுவூர் கோதண்டராமர் கோவில்

    ராமன் இலங்கைக்குச் செல்லும் போதும் அயோத்திக்குத் திரும்பும் போதும் இங்கு வந்ததாகச் சொல்லுவர். இரண்டும் சாத்தியமே

    124.பதர்ஷா (நந்தி க்ராமம)
    ராமனின் புஷ்பக விமானத்தைக் கண்டு மக்கள் ஆரவாரம், கூதுகலம் அடைந்த இடம்

    125.பரத குண்டம்
    ராமரும் பரதனும் கட்டித் தழுவி ஆனனதம் அடைந்த இடம்

    126.ஜடா குண்டம்

    ராமர் முதலில் தனது தம்பிகளின் முடிகளைச் சுத்தம் செய்து பின்னர் தனது தலை முடியையும் அலம்பிய குளம்.


    வால்மீகி ராமாயணம்ஆங்காங்குள்ள தல புராணங்கள் முதலியவற்றின் அடிப்படையில் டாக்டர் ராமாவ்தார் ஷர்மா தொகுத்த பட்டியல் இதுதமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் நான் சில இடங்களை மாற்றியுள்ளேன். இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு பட்டியலை மேலும் நீட்டலாம். 5113 நாட்களில் ராம லக்ஷ்மணர்கள் இன்னும் பல இடங்களுக்குச் சென்றிருப்பது சாத்தியமே.

    ராமன் நாமம் வாழ்கராமன் புகழ் வெல்க!

No comments:

Post a Comment