ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 1 (Post No.5174)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    2 Jul at 10:50 PM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 1 (Post No.5174)

    by Tamil and Vedas
    Written by S NAGARAJAN

    Date: 3 JULY 2018

    Time uploaded in London –   5-49 AM (British Summer Time)

    Post No. 5174

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    சம்ஸ்கிருத செல்வம்


    ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 1

    ச.நாகராஜன்

    சம்ஸ்கிருதத்தில் உள்ள லட்சக்கணக்கான பாடல்களில் உள்ள ஒரு சிறப்பு பல விஷயங்களை எளிதாக மனனம் செய்யுமளவு அவை அடுக்கடுக்காக சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள் நிறைய இருப்பது தான்!

    இப்படி இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து போன்ற எண்ணிக்கையில் உள்ளவற்றை வரிசையாக சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள் தனியே தொகுக்கப்பட்டுள்ளன.

    இங்கு ஐந்து ஐந்தாக உள்ள சில விஷயங்களைப் பார்க்கலாம்.
    அக்ஷய நிதி 5
    அழியாத செல்வங்கள் ஐந்து. அவை எவை?
    சீலம் - ஒழுக்கம்
    சௌர்யம் - வீரம்
    அனாலஸ்யம் - சுறுசுறுப்பு
    பாண்டித்யம் - சிறந்த மேதையாக இருக்கும் படிப்பு
    மித்ர சங்க்ரஹம் - நல்ல நண்பர்களின் இணக்கம்
    Conduct, Valour, Briskness, Scholarship, Association of friends -இந்த ஐந்தும் அழியாத செல்வங்கள். அக்ஷய நிதி.


    சீலம் சௌர்யமனாலஸ்யம் பாண்டித்யம் மித்ரசங்க்ரஹம்|
    அசோரஹரணீ யானி பஞ்சைதான்யக்ஷயோ நிதி||
    - சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம்  158/243
    துதிக்க வேண்டிய அக்னி 5
    பிதா - தந்தை
    மாதா - தாய்
    அக்னி - தீ
    ஆத்மா - ஆத்மா
    குரு - ஆசான்
    இந்த ஐவரும் வணங்கப்பட வேண்டியவர்கள்.


    பஞ்சாக்னயோ மனுஷ்யேன பரிசார்யா: ப்ரயத்னத: |
    பிதா மாதாக்னிராத்மா ச குருச்ச பரதர்ஷப: ||
    • விதுரநீதி 1 -179
    மீமாஸத்தின் அங்கங்கள் (பிரிவுகள்)
    விஷயா - பொருள்
    விஷய - சந்தேகம்
    பூர்வபக்ஷம் - முதல் நோக்கில் தெரிவது
    உத்தரபக்ஷம் - பதில்
    சித்தாந்தம் - முடிவு
    Topic, Doubt,Prima Facie, Reply, Conclusion -ஆகிய இந்த ஐந்துமே மீமாஸ்த்தின் அங்கங்கள்


    விஷயோவிஷயச்சைவ பூர்வபக்ஷச்தயோத்தரம் |
    நிர்ணயச்சேதி பஞ்சாங்க: சாஸ்த்ரேதிகரணம் ஸ்ம்ருதம் ||
    சர்வதர்ஷன் கௌமுதி

    யாகம்
    தேவா - கடவுள்
    ஹவிர்த்ரவ்யம் - யாகத்தின் திரவியங்கள்
    மந்த்ரம் - மந்திரம் (ரிக், யஜுர், சாமம்)
    ரித்விக் - குருக்கள்
    தக்ஷிணா - தக்ஷிணை

    தேவானாம் த்ரவ்ய ஹவிஷாம்ருக்சாமயஜுஷாம் ததா|
    ருக்த்விஜாம் தக்ஷிணானாம் ச சம்யோகே யக்ஞ உச்யதே ||
    பஞ்சாங்கம் (காலண்டர்)
    திதி - நாள்
    வாரம் - வாரம்
    நக்ஷத்ரம் - நக்ஷத்ரம்
    யோகம் - இரு நக்ஷத்ரங்களின் கூட்டில் உள்ள காலம்
    கரணம் - கரணம்

    திதி வார நக்ஷத்ரம் யோக: கரணமேவ ச |
    தத்பஞ்சாங்கமிதி  ப்ரோக்தம் ||
    -சப்தகல்பத்ரும:
    உணர்ச்சியை வெளிப்படுத்தும் உடல் அங்கங்கள்
    சித்தம்  - மனம்
    அக்ஷி    - கண்கள்
    ப்ரு       - கண் இமைகள்
    ஹஸ்தம் - கைகள்
    பாதம்   - கால்கள்
    Mind,Eyes,Eyebrows,Hand, Feet  ஆகிய இந்த ஐந்து உடல் பாகங்களும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுபவை.

    சித்தாக்ஷிப்ரூஹஸ்தபாதைரங்கசேஷ்டாதி சாப்யத: |
    பாத்ராத்யவஸ்தாகரணம் பஞ்சாங்கோபினயோ மத: || -
    மாளவிகாக்னிமித்ரத்திற்கு காதயவேமா எழுதிய பாஷ்யம் 1.6/7

    ஐந்து ஐந்தாக இப்படித் தொகுத்துக் கூறும் பாடல்கள் ஏராளம் உள்ளன. மேலும் சிலவற்றை அடுத்துப் பார்ப்போம்.
    ***
    Comment   See all comments
    Unsubscribe to no longer receive posts from Tamil and Vedas.
    Change your email settings at Manage Subscriptions.