Saturday, July 28, 2018

காற்றை சுவாசி ஆயுளை நேசி thanks to dinamalar.com

சொல்கிறார்கள்

Advertisement
  சொல்கிறார்கள்
காற்றை சுவாசி ஆயுளை நேசி!நீண்ட ஆயுளுக்கு வழி கூறும், டாக்டர் ஜோஸ்: மனிதர்களின் முழு ஆயுள், 126 ஆண்டு. ஆனால் அவர்களால், தன் ஆயுளில், 60 சதவீதம் கூட வாழ முடிவதில்லை. அதேசமயம், நாய்களின் ஆயுள், 14 ஆண்டுகளான நிலையில், அவை, முழு ஆயுளும் வாழ்கின்றன. இதற்கு, நாம் காற்றை சுவாசிக்காததே காரணம். தனக்கு தேவையான, 'ஆக்சிஜன்' அளவு காற்றில் குறைவாக இருந்தாலும், வாயை திறந்து நாய் சுவாசித்து, தனக்கு தேவையான ஆக்சிஜனை உள்வாங்கி கொள்கிறது.ஒரு மனிதன் உயிருடன் வாழ, முதலில் தேவையானது, காற்று; இரண்டாவது நீர்; மூன்றாவது வெளிச்சம்; நான்காவது உணவு. வெளிச்சம் இல்லாமல், ஆறு மாதங்களும், உணவில்லாமல், மூன்று வாரங்களும், தண்ணீர் இல்லாமல் சில தினங்களும் வாழலாம். ஆனால், காற்றில்லாமல், எந்த ஜீவராசியாலும் நிமிடக் கணக்கில் கூட வாழ முடியாது.காற்றை அதிகமாக சுவாசித்தால், நீண்ட நாட்கள் நம்மால் வாழ முடியும். குறைந்தபட்சம் உடல் உழைப்பு இல்லாத மனிதருக்கு, ஒரு நாளைக்கு, 15 ஆயிரம் லிட்டர் காற்று தேவைப்படுகிறது. உடல் உழைப்பு அதிகரிக்கும் போது, இதன் அளவும் அதிகரிக்கும். ஒரு நிமிடத்துக்கு நாம், 18 - 20 முறை சுவாசிக்கிறோம். இதுவே சீரான சுவாசமும் கூட. ஒரு சுவாசத்தின் போது, குறைந்தபட்சம், 500 மி.லி., கிடைக்கும். ஒரு நிமிடத்துக்கு, 10 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.இன்று இவ்வளவு நோய் வர முக்கிய காரணமே, நாம் வசிக்கும் வீட்டை, இருக்கும் அறைகளை அடைத்து வைத்திருப்பதே. 'ஏசி' பயன்படுத்தும் போது, அந்த அறையில் உள்ள காற்றை உள்வாங்கி, அதை, 'ரீ சைக்கிள்' செய்து, மீண்டும் அறைக்குள் விடுகிறது. இப்படி தொடர்ந்து நடக்கும் போது, அறையில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைகிறது.காற்றில் நாம் சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மட்டுமே இருப்பதில்லை. 100 மி.லி., காற்றில், 18 - 20 சதவீதம் ஆக்சிஜன், மீதமிருப்பது, நைட்ரஜனும், மற்றவையும் தான். முக்கியமாக, காற்றில் நான்கில் மூன்று பங்கு, நைட்ரஜன் நிறைந்துள்ளது. இந்த நைட்ரஜன் தான், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான, அடிப்படையான புரதத்தை கொடுக்கிறது.ஒரு அடைத்த அறையிலேயே, 18 சதவீதம் தான் சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் இருக்கிறது என்றால், ஒரு மரத்தின் அடியில் மற்றும் வாகன நெரிசலில் நிற்கும் போது, இதன் அளவு இன்னும் குறைவாக இருக்கும்.எந்தவொரு நோயும் வராமல் இருக்க வேண்டுமெனில், நிறைய சுவாசிக்க வேண்டும். மூக்கால் சுவாசிக்கும் காற்று போதவில்லை எனில், வாயை திறந்து சுவாசிக்க வேண்டும். மூடிய அறையில் மேற்புறத்தில், வென்டிலேஷனுக்காக சிறிய அளவில் செவ்வக வடிவ ஓட்டை விட்டு கட்டினால், வெளிக்காற்று உள்புகுந்து, உள்ளேயுள்ள காற்றை வெளியனுப்பும். 'ஏசி' அறையில் உள்ளவர்கள், அவ்வப்போது அறையை திறந்து மூடி, நமக்கு தேவையான ஆக்சிஜனை காற்றில் கொண்டு வரலாம். பிராணாயாமம் மாதிரியான, மூச்சு பயிற்சி செய்யலாம்

No comments:

Post a Comment