உதைப்பது போல் கை, கால்களை ஆட்டலாம்சிறப்பு பகுதிகள் செய்தி
சிறப்பு பகுதிகள் செய்தி
சொல்கிறார்கள்
சொல்கிறார்கள்
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
டாக்டர் ஜோஸ்: நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால், முதுகில் உள்ள தசைகளுக்கு இயக்கம் இல்லாமல் போகிறது. ஆகையால், முதுகில் உள்ள தசைகள் செயல் இழந்து, இறுக்கமற்றதாக மாறிவிடுகிறது. இதனால், முதுகுத்தண்டு மற்றும் தண்டுவடத்தில் வளைவு ஏற்படு கிறது. முதுகில் உள்ள நரம்பு சேதம் அடைவதால், கால்களுக்கு செல்லும் நரம்பில் பிரச்னை ஏற்பட்டு, மூட்டு வலி, கண்டைச்சதை வலி, தொடை வலி ஏற்படும்.இப்படி நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால், தோலோடு ஒட்டியிருக்கக் கூடிய தசைகள் தளர்வதால், 'யூரிட்டர்' எனக்கூடிய சிறுநீர்ப்பைக்கு, சிறுநீரை அனுப்பக்கூடிய குழாய், நேராக இல்லாமல் வளைய ஆரம்பிக்கும். இதனால், சிறுநீரகப் பிரச்னை, சிறுநீர்க்கல் போன்றவை ஏற்படும். மேலும், 30 வயதுக்குக் கீழ் உள்ள இளைஞர்களுக்கு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. இளம்பெண்கள் எனில், கருப்பையில் உள்ள குழாய்களுக்கு, ரத்தம் செல்வதில் தடை ஏற்படுகிறது.இதுதவிர, மன மகிழ்ச்சியை தரக்கூடிய, 'எண்டார்பின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால், இளம் வயதிலேயே முதுமையுடன், பல நோய்களும் வந்து விடுகின்றன. ஒரு நாளைக்கு ஒவ்வொருவரும், ஆறு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர்ப் பையின் கொள்ள ளவான, 300 - 600 மி.லி., அளவுக்கு, நீர் சிறுநீர் பையை அடையும் அளவுக்கு டீ, காபி, ஜூஸ் அல்லது நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கச் செல்லும் முன், குறைந்தது, 50 முறையாவது நின்ற இடத்தில் இருந்து குதிக்க வேண்டும். இது, சிறுநீர் பையை சீராக செயல்பட வைப்ப துடன், தசைகளையும் வலுப்படுத்தும், சிறுநீரை, சிறுநீர் பைக்கு கொண்டு வரும் குழாயும் நேராகும். மேலும், இவ்வாறு அதிக நேரம் அமர்ந்து இருப்போருக்கு, உடலில் உள்ள கழிவுகள் சரிவர வெளியேறாமல் உடலில் ஆங்காங்கே தங்கியிருக்கும். அதை அகற்றவும் இந்த முறை உதவுகிறது. அலுவலகத்தில் உள்ளோர் கழிவறைக்கு வெளியில் உள்ள இடத்தில் கூட, இதை செய்யலாம்.இதுதவிர, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நடப்பதுடன், 'ஸ்கிப்பிங்' செய்வது போன்று குதிக்கவும். இப்படி செய்வதால், வேலைப்பளுவில் இருந்து மனம் விடுபடும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். குதிக்க முடியாத சூழலில் இருப்போர், உதைப்பது போல் கால்களை ஆட்ட வேண்டும். கைகளை ஆட்ட வேண்டும். மணிக்கட்டை சுழற்றலாம். இதன் மூலம், 'எண்டார்பின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கலாம்; இது, உடலுக்கு வரும் கெடுதலைப் போக்கும்.நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால், உடல் உழைப்பு குறைவாக இருக்கும் என்பதால், குறைந்த அளவு கொழுப்புள்ள உணவு சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவை அகற்றுவதோடு, சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து காக்கும்.
Advertisement
Advertisement
No comments:
Post a Comment