Monday, July 30, 2018

பேராண்மை என்பது தறுகண் thanks to tamil and vedas.com


Yahoo/Inbox
பேராண்மை என்பது தறுகண்- வள்ளுவர் குறள்! (Post No.5269)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    29 Jul at 10:14 AM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    பேராண்மை என்பது தறுகண்- வள்ளுவர் குறள்! (Post No.5269)

    by Tamil and Vedas
    Compiled by London swaminathan
    Date: 29 JULY 2018

    Time uploaded in London – 17-13  (British Summer Time)

    Post No. 5269

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

    ஆகஸ்ட் மாத 2018 நற் சிந்தனை காலண்டர்
    விளம்பி ஆண்டு ஆடி- ஆவணி, 2018
    இந்த மாத நற் சிந்தனை காலண்டரில் வீரதீரசூரர் பற்றிய 31 பொன்மொழிகள் இடம் பெறுகின்றன


    பண்டிகை நாட்கள்-ஆகஸ்ட் 3- ஆடிப் பெருக்கு, 5- ஆடிக் கிருத்திகை, 11- ஆடி அமாவாசை, 13- ஆடிப்பூரம், 14- நாக சதுர்த்திநாக பஞ்சமிசுதந்திர தினம், 21- ஆவணி மூலம், 24- வரலஷ்மி விரதம், 25- ஓணம்ரிக் உபாகர்மா, 26- ரக்ஷா பந்தன்யஜூர் உபாகர்மா, 27- காயத்ரீ ஜபம்

    சுப முகூர்த்த நாட்கள்- 23, 29, 30.
    அமாவாஸை-11; பௌர்ணமி-26; ஏகாதஸி விரதம்- 7, 22
     

    ஆகஸ்ட் 1  புதன் கிழமை
    வீரர்களும் சூரர்களும் பாதியில் எதையும் கைவிட மாட்டார்கள்- கதா சரித் சாகரம்
    ஆகஸ்ட் 2  வியாழக் கிழமை
    சிங்கம் மேக கர்ஜனையைக் கேட்டு எதிரொலிக்கும்; நரிகள் ஊளையிடுவதைக் கேட்டு ஒலிக்காது- சிசுபாலவதம்.
    சிங்கம் பசித்தால் தேரையைக் கொல்லுமா?--தமிழ்ப் பழமொழி

    ஆகஸ்ட் 3  வெள்ளிக் கிழமை
    தைரியசாலிகளுக்கோ, முயற்சியுடையவர்க்கோ அடைய முடியாதது ஏதுமில்லை- கதா சரித் சாகரம்

    ஆகஸ்ட் 4  சனிக்கிழமை
    சில்லறைகளைப் புறக்கணிப்பது பெரியோரின் பெருமையை அதிகரிக்கும் - கதா சரித் சாகரம்

    ஆகஸ்ட் 5  ஞாயிற்றுக் கிழமை
    நெருக்கடியிலும் நிம்மதியாக இருப்போர்க்கு செல்வம் தானாக வரும்- கதா சரித் சாகரம்

    ஆகஸ்ட் 6  திங்கட்கிழமை
    அபாயகாலத்திலும் பிரகாசிக்கும் புத்தியுடையோரே தீரர்கள்-- கதா சரித் சாகரம்

    ஆகஸ்ட் 7  செவ்வாய்க் கிழமை
    எந்த வீரனாவது பாதியில் ஒரு பணியைக் கைவிடுவானா?- கதா சரித் சாகரம்

    ஆகஸ்ட் 8  புதன் கிழமை
    வீரர்களுக்கு சுலபமில்லாதது ஏதேனும் உண்டோ? - கிராதார்ஜுனீயம்

    ஆகஸ்ட் 9  வியாழக் கிழமை
    தீரர்களே அபாயத்தைக் கடப்பர்; பலவீனம் உள்ளோர் கடப்பதில்லை-
    தீராஸ்தரந்தி விபதம் ந து தீன சித்தாஹா
    ஆகஸ்ட் 10  வெள்ளிக் கிழமை
    வளமை என்பது வீரத்தைப் பொறுத்தது; துக்கம் உடையோரிடம் இருந்து அது பறந்தோடிப் போகும்- பாரத மஞ்சரி
    துக்கிப்யோ ஹி பலாத்யந்தே தைர்யாயத்தா விபூதயஹ

    ஆகஸ்ட் 11  சனிக்கிழமை
    நிலையான புத்தியுடையோருக்கு எதையும் துறப்பது கடினமில்லை- பாகவத புராணம்
    துஸ்த்யஜம் கிம் தீராத்மனாம்

    ஆகஸ்ட் 12  ஞாயிற்றுக் கிழமை
    என்னைமுன் நில்லன் மின் தெவ்வீர்- பகைவர்களே! என் தலவன் முன் போர் என்று வந்து நிற்காதீர்கள்- குறள் 771

    ஆகஸ்ட் 13  திங்கட்கிழமை
    தீரர்களே ஆபத்துகளைக் கடப்பார்கள்- காதம்பரி
    தீரா ஹி தரந்த்யாபதம்

    ஆகஸ்ட் 14  செவ்வாய்க் கிழமை
    தைரிட்யசாலிகளும் கற்றோரும் கூட தவறு செய்வர் (ஆனைக்கும் கூட அடி சறுக்கும்)
    தீரோபி வித்வானபி விமுஹ்யதி- ப்ருஹத் கதா மஞ்சரி

    ஆகஸ்ட் 15  புதன் கிழமை
    அபாயம் என்னும் கடலைக் கடக்க உதவும் பாலம் திட உறுதி- ப்ருஹத் கதா மஞ்சரி
    தைர்யம் விபஸ்த்ஸ்பாரஜஜலதேஹே சேதுஹு

    ஆகஸ்ட் 16  வியாழக் கிழமை
    வீரத்தால் விளையாதது என்ன?
    தைர்யேன சாத்யதே ஸர்வம் --கதா சரித் சாகரம்

    ஆகஸ்ட் 17  வெள்ளிக் கிழமை
    சாதனைகளுக்கு உதவுவது தீரம்
    தைர்யம் ஸர்வத்ர ஸாதனம்

    ஆகஸ்ட் 18  சனிக்கிழமை
    உயார்ந்தோரின் செல்வம் தைர்யம்-
    தைர்யதனா ஹி சாதவஹ—காதம்பரி

    ஆகஸ்ட் 19  ஞாயிற்றுக் கிழமை
    துணிவின்றி பயத்திலிருந்து விடுதலை பெற முடியாது -- யோக வாசிஷ்டம்
    ந ஸ்வதையாத்ருதே கஸ்சிதப்யுதரதி ஸங்கடாத்

    ஆகஸ்ட் 20  திங்கட்கிழமை
    பேராண்மை என்பது தறுகண்- அஞ்சா நெஞ்சத்தை ஆண்மை என்று சொல்வர்- குறள் 773

    ஆகஸ்ட் 21  செவ்வாய்க் கிழமை
    கொந்தளிப்பிலும் அமைதியாக இருப்போரே வீரதீரர்கள்- குமார சம்பவம்
    விகாரஹேதௌ ஸதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாம்ஸி த ஏவ தீராஹா

    ஆகஸ்ட் 22  புதன் கிழமை
    வீரர்கள் முன் வைத்த கால்களைப் பின்வைப்பதில்லை- நீதி சதகம்  ‘ந நிஸ்சிதார்த்தாத்விரமந்தி தீராஹா’

    ஆகஸ்ட் 23  வியாழக் கிழமை
    பெரியோர்கள், நேர்மையான பாதையிலிருந்து ஒரு  அடி கூட விலகமாட்டார்கள் - நீதி சதகம்
    ந்யாயாத்பதஹ ப்ரவிசலந்தி பதம் ந தீராஹா

    ஆகஸ்ட் 24  வெள்ளிக் கிழமை
    உறுதியானவர்களுடைய மனதை முதிய வயதும் கலக்காது- ப்ருஹத் கதா மஞ்சரி
    வ்ருத்த பாதோ ந சோகேன தீரானாம் ஸ்ப்ருஸதே மனஹ

    ஆகஸ்ட் 25  சனிக்கிழமை
    அச்சமுடையார்க்கு அரண் இல்லை- குறள் 534
    பயமுள்ளவனுக்கு பாதுகாப்பு அரணால் பயனில்லை

    ஆகஸ்ட் 26  ஞாயிற்றுக் கிழமை
    வீர சூரனானாலும் முன்படை வேண்டும்- தமிழ்ப் பழமொழி
    ஆகஸ்ட் 27  திங்கட்கிழமை
    வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?--தமிழ்ப் பழமொழி

    ஆகஸ்ட் 28 செவ்வாய்க் கிழமை
    ஒலித்தக்கால் என்னாவாம் உவரி எலிப்பகை- கடல் போல எலிகள் என்னும் பகைவர் ஒலித்தால் என்ன பயம்? -763

    ஆகஸ்ட் 29   புதன் கிழமை
    தானை தலை மக்கள் இல்வழி இல்- படைத் தலைவர் இல்லாவிடில் படைக்குப் பெருமை இல்லை- குறள் 770

    ஆகஸ்ட் 30 வியாழக் கிழமை
    உறின் உயிர் அஞ்சா மறவர்- போர் வந்தால் அஞ்சாது போர் புரிபவர் மறவர்- குறள் 778

    ஆகஸ்ட் 31  வெள்ளிக் கிழமை
    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்  -- தன் கையில் இருந்த வேலை யானை மீது எறிந்து கொன்று வருபவன்  -- குறள் 774

No comments:

Post a Comment