நம்மிடமே இருக்கு மருத்துவம் : பழைய சோறு!
ement
கருத்தைப் பதிவு செய்ய
Advertisement
பதிவு செய்த நாள்
08ஜூலை2018
00:00
நுாறு டிகிரி வெயிலிலும், 100 வயதை நெருங்கும் நம் மூதாதையர்கள், இன்றும் கடின வேலை பார்த்தபடி தெம்பாக தான் இருக்கின்றனர்.
ஆனால், இக்காலதலைமுறையினர் சிறிது துாரம் வெயிலில் சென்று வந்தாலே சோர்ந்து விடுகின்றனர். இதற்கு காரணம், மாறி வரும் நம் உணவு முறை.
வெயில் காலத்தில், சமய சஞ்சீவினியாக முன்னோர் நமக்கு காட்டிவிட்டு போன ஒரு மகத்தான உணவு தான் பழைய சோறு.
இதை, நேயன், பழங்கஞ்சி மற்றும் நீராகாரம், ஏன் ஐஸ் பிரியாணி என்றும் கூறுவர். அகத்தியர் எழுதிய, 'குண வாகடம்' என்ற நுாலில், இந்த பழங்கஞ்சியை பற்றி கூறப்பட்டுள்ளது.
மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி சாப்பிடுவதா என்று முகம் சுளிப்போர், பழைய சோற்றின் மகத்துவத்தை அறிய வேண்டும்.
சோற்றில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது, லாக்டோ பேசிலஸ் பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இது, வயிற்றுக்கு மிகவும் நன்மையை தரும். பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருட்கள் அதிகம் இருப்பதால், எளிதில் ஜீரணித்து, உடலுக்கு சக்தியை தருகிறது.
பழைய சோற்றின் பலன்களை அமெரிக்கன், 'நியூட்ரிஷன் அசோசியேஷன்' விவரித்துள்ளது. இந்த நீராகாரத்தில் வைட்டமின்கள் அதிகம். வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்தினால் மலச்சிக்கல், உஷ்ணம் உட்பட அனைத்து வயிற்று கோளாறுகளும் நீங்கும். 'ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்...' என்ற கூற்றின் அளவிற்கு பழைய சாதம், வாதத்தையும், பித்தத்தையும் போக்கும் தன்மையுள்ளது.
வெயிலில் அலைபவர்கள், பழைய சோற்றை உண்பதால், உடல் வெப்பம் குறையும். சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னை தீரும். நாள் முழுவதும் வெயிலில் வயலில் வேலை பார்க்கும் போது, புத்துணர்ச்சியை தருவது பழைய சோறு.
பழைய சோறு சாப்பிட்டுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராது.
இன்றும் பழையதுடன் இரண்டு சிறிய வெங்காயம் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.
இவ்வாறு உண்பதால் வெங்காயத்தின் தன்மை ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, மாரடைப்பை தடுக்கிறது. நீராகாரத்தை அருந்தி வருவதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுவதுடன், ரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது. வெயில் காலத்தில் நம் உடலில் அதிகரிக்கும் பித்தத்தை சமநிலைப்படுத்தி உடலையும், மனதையும் சாந்தப்படுத்துவதால், முகத்தில் தேஜஸ் கூடும்.
பழைய சோற்றை, ஏறு வெயிலில் அதாவது மதியம் வரை மட்டுமே சாப்பிடுவது சாலச் சிறந்தது. இறங்கு வெயில் எனப்படும் மாலை நேரங்களில் உண்ணக்கூடாது.
பழைய சோறு சாப்பிட்டால் மந்த நிலை ஏற்பட்டு, துாக்கம் வரும் என்று சொல்வதில், உண்மையல்ல. மூளை செல்களை துாண்டி, நன்கு சிந்திக்க வைக்கும்.
குழந்தைகளுக்கு, பழஞ்சோற்றில், ஓரிரண்டு உப்புக்கல்லை சேர்த்து உண்ண கொடுத்தால் அதை விட சிறந்த ஊட்டச்சத்து பாணம் ஏதுமில்லை.
பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிட்டால் உடல் எடை கூடும். மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும். சிலர் பழைய சோற்றுடன் வெந்தயத்தை ஊற வைத்து அல்லது நல்லெண்ணையை ஊற்றி சாப்பிடுவர். இது மூல நோய்க்கு நல்ல மருந்தாகும்.
பழைய சோறுக்கு கைக்குத்தல் அரிசி தான் மிகவும் ஏற்றது. ஆனால், மாறி வரும் நவீன யுகத்தில் கைக்குத்தல் அரிசி கிடைப்பது சிரமம் என்பதால், குக்கரில் சமைத்த சாதத்தையே உண்ணலாம்.
சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதை குறைந்தது ஆறு மணி நேரம் கழித்து உண்ண வேண்டும். அதே போல். ஊற வைத்த பின் பதினைந்து மணி நேரம் கடந்தும் உண்ண கூடாது.
பழஞ்சோற்றை, பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து, பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் முன், நாம் விழித்துக்கொண்டு கார்ன் பிளேக்ஸ், நுாடுல்ஸ் போன்றவற்றை தவிர்த்து, பழைய சோற்றை உண்டு, பயன்பெறுவோம்!