Saturday, May 28, 2016

156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட விவசாயிகள் - மற்ற மாநில ரகங்களை மீட்கவும் ஏற்பாடு

156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட விவசாயிகள் - மற்ற மாநில ரகங்களை மீட்கவும் ஏற்பாடு
Advertisement
 
 
Advertisement
 
 

 
Advertisement
தமிழகத்தில், சாகுபடி செய்யப்பட்டு வந்த, 156 பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் மீட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நெல் ரகங்களை மீட்கும் முயற்சியும் துவங்கி உள்ளது.

தமிழகத்தில், காலம் காலமாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இந்த நெல் ரகங்கள், 60 நாள் முதல், 200 நாள் வரை விளையும் பயிர்களாக உள்ளன. பாரம்பரிய நெல்லில், பல நோய்களை குணப்படுத்தும் சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
ஆனால், 'மகசூல் அதிகமாக கிடைக்கிறது' என்று, விதை நிறுவனங்கள் விளம்பரப்
படுத்தியதால், பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதை, தமிழகத்தின் பெரும் பகுதி விவசாயிகள் மறந்து விட்டனர்.
இப்போது, பருவநிலை மாறுதல்களால், புதிய ரக நெல் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிக மழை பெய்தாலும், அதிக வெயில் அடித்தாலும், புதிய ரக நெல் பயிர்களில் போதிய மகசூல் கிடைப்பதில்லை.அதே நேரத்தில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கு ரசாயன மருந்து பயன்படுத்தும் தேவை குறைவு. மேலும், பொதுமக்களிடமும், பாரம்பரிய ரக அரிசியை பயன்படுத்தும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இதனால், மீண்டும் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தும் மனநிலைக்கு தமிழக விவசாயிகள் திரும்ப துவங்கி உள்ளனர்.
இதற்கு உதவும் வகையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், 156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளனர். அவற்றை, மாநிலம் முழுவதும் உள்ள, 27 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளனர்.இத்துடன், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் நடவடிக்கையும் துவங்கி உள்ளது. இதில், 52 ரகங்கள் தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, 'நமது நெல்லை காப்போம்' என்ற இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் கூறியதாவது:பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் சொந்த தேவைக்காக பாரம்பரிய நெல்லை தொடர்ச்சியாக சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து, 156 பாரம்பரிய நெல் ரகங்களை கொஞ்சம், கொஞ்சமாக சேகரித்து, அவற்றை மீட்டுள்ளோம்.
இவ்வாறு, 'மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, சீரக சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, துாயமல்லி, ஆத்துார் கிச்சிலி சம்பா, கொட்டார சம்பா, பூங்காறு, குள்ளக்காரு, சிங்கினிக்காரு, பூம்பாலை, காட்டு யானம், ஒத்தடையான்' உள்ளிட்ட, 156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளோம்.
புதிய ரக நெல்லை பயிரிட, ஒரு ஏக்கருக்கு, விதை, ரசாயன உரம், என, 15 ஆயிரம் ரூபாய் தேவை. இவற்றில் உற்பத்தியாகும், 30 மூட்டை நெல்லை விற்பனை செய்தால், 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.ஆனால், ரசாயன உரத் தேவை இல்லாமல், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட, 8,000 ரூபாய் செலவாகிறது. ஆனால், 20 மூட்டை நெல் தான் கிடைக்கும். ஒரு மூட்டை, 1,500 ரூபாய் என விற்பனை செய்தாலும், 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.மேலும், ஒவ்வொரு பாரம்பரிய ரக நெல்லுக்கும், சிறப்பு மருத்துவ குணம்உள்ளது.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த 'மாப்பிள்ளை சம்பா, குள்ளக்காரு, காட்டுயானம்' ஆகிய அரிசியைசாப்பிடலாம்
திருமணத்திற்கு முன் ஆண்கள், 'மாப்பிள்ளை சம்பா'வையும்; திருமணத்திற்கு பின் பெண்கள், 'கருப்பு கவுனி'யையும் சாப்பிட வேண்டும்
மகப்பேறு காலத்தில்,'பூங்காறு' அரிசியையும்; குழந்தை பிறந்தவுடன், 'பால் குடவாலை'
அரிசியையும் சாப்பிடலாம்
குழந்தை முதல் முதலாக சாப்பிடும்போது,'வாடன் சம்பா'அரிசியை கொடுக்கலாம்
காய்ச்சல் ஏற்படும்போது, அனைவரும், 'இலுப்பை சம்பா' அரிசியை கஞ்சியாக
சாப்பிடலாம்
சித்த மருந்துகள் தயாரிக்க,'கறுங்குறுவை' நெல் பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மத்திய அரசின் உணவு ஆராய்ச்சி நிலையத்தில், இதை ஆய்வு செய்து நிரூபித்துள்ளோம். பெரும்பாலான விவசாயிகள், பாரம்பரிய அரிசியை உற்பத்தி செய்து விற்காமல், அதை, விதை நெல்லாகவும், அவல், மாவு போன்று மதிப்பு கூட்டி விற்பனை செய்து லாபம் பார்க்க துவங்கி உள்ளனர்.
இது தெரியாத விவசாயிகள் தான் புதிய ரக நெல்லை பயிரிட்டு, பெரிய லாபம் இல்லாமல்,
நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்க, அரசு சிறப்பு திட்டங்களை வகுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment