'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'
Advertisement
பதிவு செய்த நாள்
24டிச2017
03:59
சென்னை : ''குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்' என, மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி விமலா கூறினார்.
மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில், 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை, ரஷ்யன் கலாசார மைய அரங்கில், நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பி.எஸ்.ராகவன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கலைமகள் ஆசிரியர், கிழாம்பூர் சங்கர சுப்ரமணியன், மூத்த பெருமக்கள் ஆதரவு மன்ற தலைவர் வி.ஜி.சந்தோஷம், செயலர் சுபராஜ் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.எஸ்.ராகவன் பேசிய
தாவது:
நாம், சமுதாயத்தின் அவலங்கள் குறித்து, எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சமுதாயத்தை, நல்ல முறையில் வழி
நடத்தும் பணியில், முதியவர்கள் ஈடுபட வேண்டும்.
குறை கூறுவதை விட்டு, இருளை சபிக்காமல், ஒரு சிறிய மெழுகுவர்த்தியையாவது ஏற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் அனைவரும், சிறு சிறு முயற்சி மேற்கொண்டால், இந்த சமூகத்தை நல்ல வழியில் கொண்டு வர முடியும் என்பதை, முதியவர்கள் உணர
வேண்டும்.
இவ்வாறு அவர்
பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசியதாவது:
புத்தகம் ஒரு சிறந்த நண்பன். 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தகத்தை படிப்பதற்கு முன்னதாக, நான் எழுதிய தீர்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த புத்தகத்தை படித்த பின், மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் எழுதும் தீர்ப்பிற்கு, மிகப்பெரிய மாறுபாடு இருக்கும்.
முதியோர் இல்லங்கள் அதிகரிக்க, இளைஞர்கள் காரணமா; இல்லை இளைஞர்களுக்கு பண்பாடுகளை போதிக்க மறந்த முதியவர்கள் காரணமா என்ற கேள்வி எழுகிறது.
முதியவர்களிடம் தான் குழந்தைகள் வளர வேண்டும். தாத்தா, பாட்டியை முதியோர் இல்லத்திலும், குழந்தைகளை
போடிங்கிலும் விடுகின்றனர்.
முதியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சொத்தெழுதி கொடுக்கும் போது, என்னை ஆயுட்காலம் முழுவதும் பராமரிக்க வேண்டும் என, ஒரு வரி எழுதுகின்றனர்.
இந்த கடமையை பிள்ளைகள் மீறினால், அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது என, முதியவர்கள் வழக்கு தொடர முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு, முதியவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை அழைத்து வந்திருக்க வேண்டும். அவர்கள் தான், முதியவர்களை எப்படி நடத்த வேண்டும் என, கற்க வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment