[New post] யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    27 Nov at 10:36 PM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)

    by Tamil and Vedas
    Written by S.NAGARAJAN


    Date: 28 NOVEMBER 2017

    Time uploaded in London- 5-36 am



    Post No. 4439
    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.


    தமிழ் இலக்கிய இன்பம்
    யமகம் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். அதில் யமகம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    யமகவந்தாதியின் பட்டியல்!
    ச.நாகராஜன்
    1
    தமிழின் ஏராளமான சிறப்புகளில் ஒன்று மடக்கு அல்லது யமக அணியாகும்.
    நூற்றுக் கணக்கான யமகப் பாடல்களைத் தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது.
    இது சாதாரண விஷயமல்ல.
    ஆழ்ந்த பொருள் தரும் அகன்ற சொல் வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
    இதைக் கொண்டுள்ள தமிழ் மொழி உண்மையிலேயே உலகின் அதிச்ய மொழி.
    சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான யமகப் பாடல்கள் உள்ளன.தெலுங்கிலும் உண்டு.


    2
    2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி. இடம் : சென்னை.
    சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற அருமையான ஒரு நூலைக் கண்டேன்.படித்தேன்.
    முனைவர் பா. முனியமுத்து அவர்களின் ஆய்வு நூல் இது.
    அவருக்கு உவமைப் பித்தன் என்ற புனைப்பெயரும் உண்டு.
    நூலைப் படித்த மகிழ்ச்சியில் எனது இயல்பான வழக்கத்தையொட்டி அவரைப் பாராட்ட விழைந்தேன். தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன்.
    “முனியமுத்து அவர்கள் இருக்கிறாரா?”
    ஒரு பெண்மணி பதில் அளித்தார்: “இல்லீங்க”
    “எப்ப வருவார்?”
    “என்ன விஷயங்க?”
    “அவரது அருமையான் நூலான ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற நூலைப் படித்தேன். அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இந்த போன். அவர் எப்ப வருவார்?”
    “ஓ. ரொம்ப சந்தோஷங்க. அவர் இப்ப இல்லீங்க. இப்படி யாராவது பாராட்ட மாட்டார்களா என்று அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தாருங்க.”
    ஒரு சின்ன மௌனம்.
    அந்த அம்மையார் முதலில் சொன்ன ‘இல்லீங்க’ என்பதற்கும் இரண்டாவது தரம் சொன்ன ”இப்ப இல்லீங்க” என்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது.
    என் மனம் கனத்தது. சோகம் இழையோட, “அவரைப் பாராட்டத் தான் இந்த போன்” என்று சொன்னேன்.
    “ரொம்ப தேங்க்ஸ்ங்க”
    போன் உரையாடல் முடிந்தது.
    சற்று நேரம் ஒன்றுமே ஒடவில்லை. அந்தப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழுக்கு அரிய சேவை செய்த நல்ல மனிதர்.
    முனியமுத்து அவர்களின் புகழ் வாழ்க!


    3
    தனது ஆய்வு நூலில் அவர், மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்களின் பட்டியலை மிகுந்த சிரமத்தின் பேரில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் நூல்கள் இயற்றப்பட்ட காலமும் இருக்கிறது.
    அந்தப் பட்டியல் அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பிராக்கட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் எந்த நூற்றாண்டில் நூல் இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
    அகர வரிசைப் பட்டியலில் இறுதியில் உள்ள இரண்டு நூல்கள் எனது ஆய்வின் விளைவாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
    முனியமுத்து போன்றோரின் ஆய்வைத் தமிழ் உலகம் நல்ல முறையில் அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரவேண்டும். இனியேனும் நல்லோரை இனம் கண்டு உரிய முறையில் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே பாராட்டுவோம்.
    4
    இதோ பட்டியல்:
    மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்கள் - அகர வரிசை
    1) அழகர் யமகவந்தாதி -
    2) இரத்தினகிரியமகவந்தாதி - கந்தசாமி சுவாமிகள் - (19)
    3) கடம்பர் யமகவந்தாதி - பேரம்பலப் புலவர் - (19)
    4) கணபதி யமகவந்தாதி - கந்தசாமி சுவாமிகள் - (19)
    5) கந்தர் யமகவந்தாதி - அருணகிரிநாதர் - (15)
    6) கல்வளை யமகவந்தாதி - சின்னத்தம்பிப் புலவர் - (19)
    7) கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி -சுப்பையா-(19)
    8) சித்திர யமகவந்தாதி - தொழுவூர் வேலாயுத முதலியார் - (19)
    9) சிவகிரி யமகவந்தாதி -பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்-(19)
    10) தன்னை யமகவந்தாதி - கார்த்திகேயப் புலவர்- (19)
    11) தன்னை யமகவந்தாதி - திரிகூட ராசப்பக் கவிராயர்- (19)
    12) தன்னை யமகவந்தாதி  முருகேசையர்-(19)
    13) திரிச்சிராமலை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை -(19)
    14) திருக்கடவூர் யமகவந்தாதி - தலைமலை கண்ட தேவர்-(19)

    15) திருக்குருகூர் யமகவந்தாதி - வேலாமூர் கிருட்டிணமாச்சாரியார்-(20)
    16) திருக்குற்றால யமகவந்தாதி -திரிகூட ராசப்பக் கவிராயர்-(18)
    17) திருக்கோட்டற்றுப் பதிற்றுப் பத்து யமகவந்தாதி - செய்குத்தம்பி பாவலர் - (20)
    18) திருச்சிற்றம்பல யமகவந்தாதி -சபாபதிப் பிள்ளை நாவலர்(19)
    19) திருச்செங்காட்டங்குடி யமகவந்தாதி - நல்லூர்த்தியாகன்
    20) திருச்செந்தில் யமகவந்தாதி - தண்டபாணி அடிகளார்-(19)
    21) திருச்செந்தில் யமகவந்தாதி -சிவச்சம்பு புலவர்(இலங்கை)(19)
    22) திருச்செந்தில் யமகவந்தாதி - இராமசாமி ஐயர்-(19)
    23) திருச்செந்தூர் கரித்துறை யமகவந்தாதி - அருணாசலப் பிள்ளை-(19)

    24) திருத்தணிகை யமகவந்தாதி - சொக்கலிங்க தேசிகர்-(19)
    25) திருத்தில்லை யமகவந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)
    26) திருப்புடை மருதீசர் யமகவந்தாதி - தலைமலை கண்ட தேவர்-(19)
    27) திருநெல்வேலி யமகவந்தாதி - தண்டபாணி அடிகளார்-(19)
    28) திருப்போரூர் யமகவந்தாதி - புரசை சபாபதி முதலியார்-(19)
    29) திருப்பெருந்துறை ஆத்மநாதர் யமகவந்தாதி - மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் - (17)
    30) திருமீதினத்துப் பதிற்றுப்பத்து யமகவந்தாதி - அ.கா.பிச்சை இபுராகீம் புலவர்-(19)
    31) திருமதீனத்து யமகவந்தாதி - (19)
    32) திருமயிலை யமகவந்தாதி - தாண்டவராயக் கவிராயர்
    33) திருமயிலை யமகவந்தாதி - நெல்லையப்பக் கவிராச பண்டிதர்
    34) திருவரங்கத்து யமகவந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (17)

    35) திருவல்லிக்கேணி யமகவந்தாதி -
    36) திருவல்லிக்கேணி யமகவந்தாதி- தண்டபாணி அடிகளார்-(19)
    37) திருவாமாத்தூர் யமகவந்தாதி - தண்டபாணி அடிகளார்-(19)
    38) திருவாலவாய் யமகவந்தாதி - சொக்கலிங்கச் செட்டியார்-(20)
    39) திருவானைக்கா யமகவந்தாதி - தண்டபாணி அடிகளார்-(19)
    40) திருவானைக்கா யமகவந்தாதி - சிங்காரவடிவேல் வ்ண்ணியமுண்டார்
    41) திருவேகம்பர் யமகவந்தாதி - சிவஞான முனிவர்
    42) திருவேரகம் யமகவந்தாதி - வேலையர் (20)
    43) திருவேரக யமகவந்தாதி - சிவச்சம்புப் புலவர்-(19)
    44) திருவேரக யமகவந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)
    45) தில்லைகற்பக வினாயகர் யமகவந்தாதி - சிதம்பரம் செட்டியார்-(19)
    46) தில்லை யமகவந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

    47) துறைசை யமகவந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)
    48) நகுலேசர் யமகவந்தாதி -அப்துல் காதர் நயினார் அலீம் -(19)
    49) நெல்லை யமகவந்தாதி -
    50) பட்டீச்சுர யமகவந்தாதி - அப்பாப்பிள்ளை-(19)
    51) பத்மநாபப்பெருமாள் யமகவந்தாதி-தண்டபாணி அடிகளார்-(19)
    52) பழநி யமகவந்தாதி - தண்டபாணி அடிகளார்-(19)
    53) பழநி யமகவந்தாதி - பாலசுப்பிரமணியன்
    54) புலியூர் யமகவந்தாதி - மயில்வாகனப் புலவர்-(18)
    55) புலியூர் யமகவந்தாதி - கணபதி ஐயர், இலங்கை
    56) புல்லை யமகவந்தாதி - ரா.இராகவையங்கார்-(20)
    57) மதுரை யமகவந்தாதி - இராமநாதன் செட்டியார் அ. வயினாகரம் - (19-20)
    58) மதுரை யமகவந்தாதி - சொக்கநாதக் கவிராயர்-(17)
    59) மதுரை யமகவந்தாதி - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
    60) மதுரை  யமகவந்தாதி - ஆறுமுகம் பிள்ளை-(19)

    61) மருதாசலக் கடவுள் யமகவந்தாதி - கந்தசாமி சுவாமிகள்-(19)
    62) மருதூர் யமகவந்தாதி - தலைமலைக் கண்ட தேவர்-(19)
    63) மாவை யமகவந்தாதி -பொன்னம்பலம் பிள்ளை,இலங்கை(19)
    64) யமகவந்தாதி - மழலை சுப்பிரமணிய பாரதியார்-(19)
    65) திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி - சிவப்பிரகாச சுவாமிகள்
    66) திருவாவடுதுறை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை(19)

    5
    எத்தனை அற்புதமான பாடல்களை தமிழ் கொண்டிருக்கிறது என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.
    இந்தப் பட்டியலில் அபிராமி அந்தாதி, கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி போன்ற அந்தாதி நூல்கள் சேர்க்கப்படவில்லை.
    யமக அந்தாதி இல்லாத அந்த அந்தாதி நூல்களுக்கு ஒரு தனிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தயாரித்துக்  கொண்டிருக்கிறேன்.