கேன் வாட்டர் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து!
'கேன் வாட்டர்' குறித்து கூறும், பொது நல மருத்துவர், பார்த்தசாரதி: பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கும் தண்ணீரை வாங்கி குடிக்கும் பழக்கம், இன்று அதிகரித்து வருகிறது. கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் மேல் ஒட்டியிருக்கும் லேபிளில், 'பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்' என்று எழுதியிருக்கும் வாசகத்தை, யாரும் பார்க்கக் கூட மாட்டார்கள். அதுபோலத் தான், வீடுகளில் உபயோகிக்கும் தண்ணீர் கேன்களும்.கேன்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைத் தான், இன்று பெரும்பாலானோர் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்படும் தண்ணீருடன், புற்றுநோயை உருவாக்கக்கூடிய, 'டை எத்தில் ஹைட்ரக்சின் அமைன்' என்ற ரசாயனப் பொருள், எளிதாக கலந்து விடுகிறது. கேன்களில் நிரப்பப்பட்ட தண்ணீரைக் குடிக்கும் போது, பிளாஸ்டிக்கின் வேதிப்பொருள் உடலுக்குள் ஊடுருவி, 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பை அதிகமாக்குகிறது. இதனால், இதைப் பருகும் ஆண் குழந்தைகள், வளர வளர அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாறு உடலுக்குள் செல்லும் ரசாயனத்தால் ஆண் மலட்டுத்தன்மை, இனப் பெருக்கக் குறைபாடுகள், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கேன் தண்ணீரை உபயோகிப்பதைத் தவிர்ப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீரை, காய்ச்சிக் குடிப்பதே சிறந்தது. தண்ணீரைக் கொதிக்க வைக்கும் போது, 99.9 சதவீத பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கும் கொதிக்க வைத்தல் பற்றிய சரியான புரிதல் இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து லேசாகச் சூடு வந்ததுமே, அடுப்பை அணைத்து விடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, குமிழிகள் வரும் போது, அந்தக் கொதி நிலையிலேயே, 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின், அந்த நீரை ஆற வைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும்.
சிறந்த கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி மேலும் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் Tamil News
ReplyDelete