Sunday, September 20, 2015

மனோசக்தியின் வலிமை! -1


மனோசக்தியின் வலிமை! -1

by Tamil and Vedas
Placebo
Written by S.NAGARAJAN
Date : 3 September  2015
Post No. 2119
Time uploaded in London : 5-58 am

.நாகராஜன்

மனமெனும் பெண்ணேவாழி நீ கேளாய்!.... 
 இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே                                        
விரும்புவன்நின்னை மேம்படுத்திடவே                                        
முயற்சிகள் புரிவேன்….”  - மகாகவி பாரதியார்     
                                            
      இடைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சிசெய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியதுஅவர்களேஎதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள்தந்துள்ளன.

இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.
ப்ளேசிபோ என்றால் என்னஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம்.ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வமாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்குசாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார்ஆனால் அதன் நல்லவிளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும்இது தான்ப்ளேசிபோ எபெக்ட்!

பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளிஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமாதர்க்க ரீதியாகநிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்துபார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையேவியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்றுநோயாளி அந்த மாத்திரைதன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்றுநினைப்பதனாலேயே அவர் குணமாகிறார்!

இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள்உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையானசோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர்செய்து பார்த்தனர்.

தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்து ‘விசேஷமான பார்ட்டிஒன்றை அவர்கள் தந்தனர்பார்ட்டி என்றாலே மதுபானம்உண்டல்லவாஅனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்துகொண்டனர்.


வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும்இவர்கள் கொடுத்தபானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான் “பெயருக்கு” இருந்தது.இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்கமுடியாதுஆனால் நடந்தது என்ன?

இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாகநினைத்தனர்ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின்ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது.
 placebo-effect-drug-company
இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள்நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறதுஎன்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராயஆரம்பித்து விட்டன!

வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள்கம்பெனிகள் திவாலாகி விடுமேஉலகின் எண்ணெய் கம்பெனிகளைவிட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள்பதறுவதில் வியப்பே இல்லை!


சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர்.மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலைசெய்யவே முடியவில்லைஅவரிடம் மருத்துவர், “இதோ இது ஒருசர்க்கரைக் கட்டி தான்சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்” என்றுவேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.

ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாகஏதோ கூறுகிறார்தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்றுநினைத்தார்.

விளைவுஅவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள்உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்” என்றுஅவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!


பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்துமருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம்ஆனால் பலசோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன்அவர்கள் PET ஸ்கானர்கள்எம் ஆர்  ஆகியவற்றின் மூலமாக இந்தசிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர்சமீபத்திய ஆய்வு முடிவுகள்ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமானடோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன.நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போதுசரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றுநினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!

இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போதுஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகிவிட்டது.
மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச்செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.


கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர்டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத்தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதுஇதை விளக்க ஒருஉதாரணத்தைக் கூறலாம்இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒருநிழலுருவம் தோன்றுகிறதுஉடனே உங்கள் விழிகள் விரிகின்றன.உடல் எச்சரிக்கை நிலையை அடைகிறதுஉடம்பெல்லாம் வியர்க்கிறது.ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான்என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல்பூரித்து பயம் போயே போய் விடுகிறதுநம்பிக்கை மாறியவுடன்உணர்ச்சிகள் மாறுகின்றனஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டியவிஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்த ‘நம்பிக்கைமாற்றத்தை’ ஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இதுபற்றி இப்படிக் கூறினார்!


ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம்ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டதுலாரா டிப்பிட்ஸ் என்றபெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி.அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடுசெய்தனர்வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில்இல்லைஅது மூளையில் இருக்கிறது” என்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச்செல்கிறதுஅதை மூளை வலி என்று “எடுத்துக் கூறுகிறது”! என்கிறார்அவருடைய மருத்துவர்.
எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறதுஎது வலியைநீக்குகிறது என்பதையும் அவர்  ஆராய ஆரம்பித்தார்மனச் சித்திரங்கள்ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.


ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால்கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும் போதே பாதி வலி போய்விடுகிறதுஇது அதிசயமாக இருக்கிறது” என்றார் லாரா.
ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூடமனோசக்தி  உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கானவாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர்அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது!
ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவதுமனோசக்தியின் மூலமாகத் தான்!

நன்றி பாக்யா 28-8-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை
written by my brother S Nagarajan for Bhagya magazine.

Sunday, September 13, 2015

நிம்மதியான வாழ்க்கைக்கு 20 வழிகள்!
நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும். கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. அதேப்போல நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் நாமும் நிம்மதியாக வாழலாம். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.

2. நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.

3. மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல், உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.

4. மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.

5. இருப்பதை கொண்டு திருப்தி கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தை அதிகப்படுத்துங்கள்.

7. நீங்கள் விரும்பியதை உங்களுடைய நண்பருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

8. உங்களை நேசித்துப் பழகுங்கள்.

9. அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் சஞ்சலப்படாதீர்கள்.

10. உங்களுடைய இலக்கில் தெளிவாக இருங்கள். அதை அடைய எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

11. மலர்ந்த முகத்துடன் பேசுங்கள்.

12. எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்துப் பழகுங்கள்.

13. கடந்த காலத்தை மறந்து, நிகழ் காலத்தில் வாழப் பழகுங்கள்.

14. நல்ல உடைகளை அணியுங்கள்.

15. கடினமான விஷயங்களை, இலகுவாக்கி செய்யுங்கள்.

16. எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.

17. சிறு சிறு தோல்விகளை படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. அடுத்தவர்களாக மாற நினைக்காதீர்கள்.

19. எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுய மரியாதையை இழக்காதீர்கள்.

20. அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.

natri saleem
உங்கள் மதிப்பை நீங்கள் உயர்த்திக்கொள்ளுங்கள்!
நாம் சிலரிடம் மரியாதையாக நடப்போம். அவர்கள் நம்மை அலட்சியத்துடன் 'நம்மை விட்டால் இவனுக்கு வேறு வழி இல்லை' என்பது போல் நம்மை சீண்ட மாட்டார்கள். இவவுலகில் அவரவருக்கு ஒரு மரியாதை உண்டு என்பதை அறியாதவர்கள் பலர் உள்ளனர். நமது விண்ணப்பத்தை கண்டு கொள்ளாமல் 'நான் ரொம்ப பிசி நான் எப்போது கவனிப்பேனோ அப்போதுதான் உனக்கு செய்வேன் என்பது போல் நடந்து கொள்வர். அதேசமயம் உண்மையிலேயே அவர்கள் கண்ணியதமானவர்களாக இருந்தால் நமக்கான முறை வரும் வரை பொறுமை காக்கவேண்டும்.

மதிப்பு, மரியாதை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் அவசியமான ஒன்று. மதிப்பு என்பதை ஆங்கிலத்தில் (Value) வேல்யூ என்று சொல்கிறோம்.  முக்கியத்துவம் என்றும் கொள்ளலாம்.

மதிப்பு

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. அது பணமாகவோ, கலை நயமாகவோ, அதன் உபயோகத்தாலோ இருக்கலாம். உதாரணமாக,  கடும் வெயில்; சாலையோர கரடுமுரடாக உள்ளது. நடந்து செல்ல வேண்டிய நிலை. இதுவரை வெறும் காலில் வெளியில் நடந்ததே இல்லை. செருப்புகள் இரண்டும் அறுந்துவிட்டன. அணிந்து நடக்கவோ முடியாது. இந்த நிலையில் செருப்பின் மதிப்பு (Value) என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையில் கையில் பத்தாயிரம் கொடுத்தாலும் ஒரு செருப்பு கிடைக்காதா என்றுதான் மனம் ஏங்கும். 

எனவே, எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு உயிரையும் மிகச் சாதாரணமாக மதிப்பிட்டு, ஒதுக்கவோ, உதாசீனப்படுத்தவோ கூடாது.

மனித மதிப்பு

நம்மிடம் மனம் என்கின்ற சிந்திக்கின்ற, யூகித்து அறிகின்ற ஆறாவது அறிவு உள்ளது. இதை நாம் அனைவரும் முதலில் உணர வேண்டும். இன்று சமுதாய நிகழ்வுகளைக் கேட்கும்போது, பார்க்கும் போது, பரவலாக, குறிப்பாக இளைஞர்கள் மனித நேயத்தை மறந்து தற்காலிக திருப்திக்காக தவறான செயல்கள் செய்வதை அறிகிறோம்.

ஏன், இவர்கள் தங்கள் மதிப்பை அறியாததால்தான். இதற்குக் காரணம் இவர்களது பெற்றோர்கள். பொது வாக மனிதர்கள் மற்றவர்கள் மீது வைத்துள்ள அபிப்ராயங்களை மதிப்பு எனக்கூறலாம். குடும்பம் என்றால் பெற்றோர் குழந்தைகள்; கணவன் மனைவி இவை தான் அடிப்படை உறவுகள். இவர்களுக்கிடையிலுள்ள உறவு மேலும் வலுப்பட்டு அன்புடையதாக இந்த அபிப்ராயங்கள் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இது மாறாது; மாறக்கூடாது.

சரியும் மதிப்பு

அப்படி, தன் நெருங்கிய உறவுகளிடம் இவர் இப்படித்தான் என்று குறைபட்டுக் கொண்டு, இவரிடம் நேரில் தன் அபிப்ராயத்தை சரியான திருத்தத்துக்கு கூறாமல் விடுபவர்களை நாம் காண்கின்றோம். இதனால் உறவுகளின் மத்தியில் இவரது மதிப்பு சரியும்.

இதுபோல் சரிந்துவிட்ட மதிப்பை உயர்த்துவதென்பது மிகச் சிரமம். பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமலேயே பெரிய மாற்றுக்கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால், இவர் என்ன தான் முயன்று, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முழுமையான திருப்தியை குடும்பத்தாரும் உறவுகளும் அடையமாட்டார்கள்.

மதிப்பின் நிலைமாறுமா?

ஆம். மாறும். உயரும் அல்லது தாழும். அழகான, நல்ல வேலைப்பாடமைந்த பொருள் உள்ளது. அதற்கென ஒரு காலம் உள்ளது. நாளாக, நாளாக அதனது இருப்புத் தன்மை குறைந்து கொண்டே வரும்.
இளமைப்பருவத்தில் காண்பித்த திறமை உத்வேகம் முதுமையில் குறைவது போன்றதே இது. மறைவுக்குப் பின்னும் மதிப்பால் உயர்ந்த மனிதகுலச் செம்மல்கள் பலரை அறிவோம்.

மதிப்பை அறிதல்

ஒருவரது மதிப்பை எப்படி, எப்போது அறிய முடியும் என்றால், அவர் இல்லாத போது. அவரைப் பற்றிய விமர்சனங்கள், அபிப்ராயங்கள், கருத்துக்கள் மூலமாக. 

மக்களில் பெரும்பாலானவர்கட்கு எதற்கு எப்போது மதிப்பு கொடுப்பது எனத் தெரிவதில்லை. உதாரணமாக ஒருவர் தங்க நகை அணிந்து சாலையில் நடந்து செல்கிறார். அவரை மறித்து நகையைப் பிடுங்க முயற்சிக்கின்றனர். உயிரே போனாலும் நகையை விடமாட்டேன் என்றஉறுதியோடு போராடுகிறார். கும்பல்தான் வெற்றி பெற்றது; இவர் பிணமானார். என்ன தெரிகிறது?

உணர்ச்சி வேகம், பொருளாசை, உயிரைப் பற்றிய அறியாமை அருமையான வாழ்க்கை அவரைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது. சமயோசிதமாய் சிந்தித்து செயல்படுவதற்கு ஆறாவது அறிவு இருப்பதையே மறந்து விடுகிறோம். எதற்கு, யாருக்கு, எப்போது, எப்படி மதித்து தரவேண்டும் என்பது மிக முக்கியம்.
செயல்பாடு

அதேபோல் பிறர் கோணத்தில் நமது மதிப்பு சரியாமல் இருக்க என்றும் ஒரே மாதிரியான செயல்பாடும் முக்கியம். சிலரிடம் நமது மதிப்பை உயர்த்திக் காண்பிக்க தேவையில்லாத முயற்சிகள் செய்வர். பின்னர் உண்மை நிலை தெரியும்போது கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றப்பட்ட கலசம், திடீரென கீழே விழுந்த கதையாகிவிடும்.

ஒவ்வொருவரிடமும் என்ன உள்ளது? என்ன தேவை? இந்த இரண்டும் முக்கியம். இருப்பதை பண்புகள், குணங்கள், செல்வங்கள் என்று கூறலாம். தேவைகளை வேண்டுதல்கள் என்று கூறலாம். அதனால்தான் நாம் இது வேண்டும், அது வேண்டும் என்று எப்போதும் வேண்டிக் கொண்டே இருக்கிறோம்.

வேண்டுதல் எந்த அளவு முக்கியமானதோ, அதைவிட மேலானது இருப்பதை தக்கவைத்துக் கொள்வது, நல்ல குணங்களை, பண்புகளை நாளும் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வருவதால் மட்டுமே அவைகளை தக்க வைக்க முடியும்.

தியாகம்


பலர், தனி மனித வழிபாட்டின் காரணமாக உணர்ச்சி வயப்பட்ட நிலையில் உயிரையும் தியாகம் செய்யுமளவுக்குச் செல்வதை ஊடகங்கள் வழி பார்க்கிறோம். அந்த அளவுக்கு மதிப்பு மிக்கவர்களா என்ற வினாவும் எனலாம். மதிப்பு இங்கு முன்னிலைப்படுத்தாமல் உணர்ச்சியே பிரதானமாக இருப்பதால், திடீரென, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர்.

ஓர் உதாரணம் மூலம் தெளிவு பெறலாம். உலக நன்மைக்காகப் பாடுபட்டு வரும் நல்ல சிந்தனையாளர் ஒருவர், அவரது செயல்களால், நல்ல பழக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் என இருவர் ஆற்றில் படகில் செல்கின்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது. ஒரு லைஃப் பெல்ட் மட்டும் உள்ளது. படகு கவிழும் சூழல் உருவாகிவிட்டது.
அந்த நல்ல சிந்தனையாளர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டுமென்று உடன் உள்ளவர், லைஃப் பெல்டை அவருக்கு கொடுத்து விடுகிறார். இதுதான் தியாகம். கிடைத்தற்கரிய வாழ்க்கையை உலக நலன் கருதி சிந்தித்துச் செயல்படுதல். இதற்கு அடிப்படையாக அமைந்தது அந்தச் சிந்தனையாளரது நற்பண்புகள் மீது இவர் கொண்ட மதிப்பு.

மரியாதை (Respect)

இதை கண்ணியம் என்றும் கௌரவம் என்றும் கூடக் கூறலாம். தோற்றத்தில், ஆடையில் கூட பிறரிடம் நம்மீது மரியாதையை உண்டாக்க முடியும். இது நிரந்தரமில்லாதது; மாறிவிடும் இயல்பு கொண்டது. மனித குலத்தின் மாண்புகளில் ஒன்று இந்த மரியாதை. அறிமுகமில்லாத ஒருவர் தொடர்பு கூட, உடனே அவர்மீது ஒரு மரியாதையை உண்டாக்கும். பழகப் பழக இந்த மரியாதையானது மதிப்புக்காக மாறுகிறது அல்லது அவர் தொடர்பை விட்டு விடுகிறோம்.

நல்ல பண்புகள் உள்ளவர்கள் பிறர் என்ன நினைப்பார்களோ என எண்ணி கவலைப்படாமல், தாங்களே நன்றாகச் சிந்தித்து, துன்பமில்லாத வகையில் செயல்படுவதால், மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல. பிறரிடமிருந்து தானாக வர வேண்டும். “எனக்கு அவர் உரிய மரியாதை அளிக்கவில்லை’ எனச் சில சமயம் நாம் நினைப்பதுண்டு.

(Give and Take Respect) மரியாதை என்பது கொடுப்பதால் பெறமுடியும் அல்லது தன் தோற்றத்தால், பேச்சால், செயலால் மட்டுமே பெறமுடியும் என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். ஆறறிவில்லாத தாவரம் உள்ளிட்ட உயிரினங்கள் கூட, தம்மீது அன்பு, அக்கறை காட்டுவோரிடம் தமது நன்றியை வெளிப்படுத்துவதை நாம் அறிவோம்.

வாழ்க்கை

வாழ்க்கை என்பதன் இருப்பிடம் குடும்பம். எனவே, குடும்பத்தில் மரியாதைகள் காலப்போக்கில் மதிப்பாக மாறவேண்டும். சிலர் குறைபட்டுக் கொள்வார்கள். “என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” என்று இங்கு மதித்தல் என்பது மதிப்பு (Value) ஆகாது. அங்கீகாரம் என்று கூறலாம். தன் இருப்பை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை அப்படிக் கூறுகின்றனர்.

அழைப்பிதழ் பெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறோம். கூட்டம் அதிகம். அழைத்தவரைச் சந்திக்க வாய்ப்பில்லை. நிகழ்வு முடிந்து திரும்பும்போது மனதுள் நெருடல். வீடுதேடி வந்து அழைத்தவர்கள் சரியாக மதிக்கவில்லை; உபசரிக்கவில்லை என்று இது தேவையில்லை. நிகழ்வின் முக்கியத்துவம் கருதி நம் முக்கியத்துவத்தை நாம் விட்டுக்கொடுக்கவேண்டும்.

சிறுவயதுக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்பிக்க வேண்டிய ஒன்று – பிறருக்கு மரியாதை அளிப்பது; வயதுக்கு மரியாதை பணிவாய் பேசுவது; அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்பது; தெளிவுக்காக சந்தேகங்கள் கேட்பது போன்றவை 

கல்விக்கு மரியாதை

இன்று கல்வி என்றாலே, வேலைக்கானது என்றாகிவிட்டது. எனவே, எந்தத் துறையைத் தேர்வு செய்கிறோமோ, அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் தேவையான தகவல்கள் பெற, இந்த மரியாதை உதவும்.

அனுபவசாலிகளை மரியாதையுடன் போற்றவேண்டும். அவர்களது அனுபவங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமைய வாய்ப்புண்டு. மரியாதையில் போலி மரியாதை என்று ஒன்று உண்டு. நேரில் பார்த்தால், மிகவும் பவ்யமாய் செயல்படுவர்; பிறகு தரக்குறைவாய் பேசுவர். தமிழில் “கூழைக்கும்பிடு” என்றசொல் உள்ளது. காரியம் ஆக வேண்டுமென்றால் காலையும் பிடிப்பார்கள். முடிந்தபின் காலை வாரிவிடவும் தயங்கமாட்டார்கள்.

தன்னம்பிக்கையுள்ளவர்கள் இதுபோன்று கூழைக்கும்பிடு ஆசாமிகளாக மாறமாட்டார்கள். அதே நேரம் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்து ஏங்கவும் மாட்டார்கள். இவர்கள் தங்கள் மதிப்பை (Value) நன்கு உணர்ந்துள்ளதால், அதற்கேற்றவாறு செயல்படுவார்கள். 

இந்த வாழ்க்கையில் நமது தோற்றம், பேச்சு, செயல்கள் எல்லாம் மற்றவர்கள் மனதில் நம்மீது முதலில் மரியாதையை உருவாக்க வேண்டும். காலப்போக்கில் இது மதிப்பாக மாறவேண்டும்.-