Saturday, July 30, 2016

Health Tips

 From Dinamalar  Varamalar

பதிவு செய்த நாள்

31ஜூலை
2016 
00:00
* சீரகத்தை, வாழைப்பழத்துடன் பிசைந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த மூலம் தீரும்.
* சீரகத்துடன், உப்பைச் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தாலோ அல்லது வெறும் சீரகத்தை மென்று தின்றாலோ வயிற்று வலி நீங்கி, செரிமானம் ஏற்படும்.
* சீரகத்துடன், கற்கண்டை கலந்து மென்று தின்றால், இருமல் போகும்.
* சீரகப் பொடியோடு, தேன் கலந்து சாப்பிட்டால், விக்கல் அகலும்.
* சீரகத்தை அரைத்து உடம்பில் பூச, அரிப்பு நிற்கும்.
* சீரகப் பொடியோடு, எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால், பித்தம் அகலும்.
* நல்லெண்ணெயில், சீரகத்தை போட்டு காய்ச்சி, தலைக்கு தேய்த்து குளித்தாலும், பித்தம் நீங்கும்.
* சீரகப் பொடியோடு தேன், உப்பு மற்றும் நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், விஷம் முறியும்.
* சீரகத்தை வறுத்து, சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட, பசி கூடும். சீரகத்தை மிளகு பொடியோடு கலந்து, காய்ச்சி வடிகட்டி குடித்தால், அஜீரணம், மந்தம் நீங்கும்.
Advertisemen

Thursday, July 28, 2016

Vinayagar Agaval

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55
 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! 

அன்பின் கடலில் நதியாவோம் from dinamalar

ஆய்வுஜூலை 29,2016






உறவுகளின் உரசல்களில் இன்று பூமி புண்பட்டுப் போயிருக்கிறது. தந்தை சொல் மிக்கமந்திரமில்லை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை என்று புகழப்பட்ட பெற்றோர்-- பிள்ளைகள் உறவு தலைமுறை இடைவெளியால் இன்று தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எப்படி உறவுகளை உடையாமல் காப்பது? சினேகத்தோடு சில பரிந்துரைகள்..

வெளிப்படையாய் இருங்கள் :அடி நாக்கில் நஞ்சையும் நுனி நாக்கில் அமுதையும் வைத்துக்கொண்டு உறவுகளைப் பேணமுடியாது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதாதிருங்கள். எல்லோரையும் அப்பாவியாய் நம்பிவிடுவதும் எல்லோரையும் எப்போதும் சந்தேகப்படுவதும் ஆபத்தானது என்று உணருங்கள்.

எடை போடும் இயந்திரமா நாம்?
அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழுக்களாகத்தான் இருக்கும். அதனால் யாரையும் துப்பறிய நினைக்காதீர்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தரம்குறைய விமர்சிக்காதீர்கள், காரணம் எடை போடும் இயந்திரங்கள் அல்ல நாம். முழுமையான மனிதர்கள் என்று இந்த உலகில் யாரும் கிடையாது. ஒவ்வொருவரின் குறையையும் கருத்தில்கொண்டு பழகத்தொடங்கினால் யாரிடமும் நட்பு பாராட்ட முடியாது.
எனவே ஜாதி மத இன பேதங்கள் இன்றி அனைவரிடமும் இயல்பாகப் பழகுங்கள்.கணவன் மனைவியின் நடத்தையைச் சந்தேகப்படுவதும், மனைவி கணவனைக் குறைத்துப்பேசுவதும் பெரும்விரிசலை உருவாக்கிவிடும்.

குடும்பமானாலும் அலுவலகமானாலும் 'நானே பெரியவன்' என்ற தன்முனைப்பு நம்மைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும். நீங்கள் மற்றவர் துணையின்றித் தனியாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் உங்களைப்பற்றியே உயர்வாகப் பேசிக்கொண்டே இருக்காமலும், மற்றவர்களைத் துச்சமாகக் கருதாமலும் அவர்கள் சொல்வதையும் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். எல்லாப் பிரச்னைகளும் தீர்க்கக்கூடியதே என்று உணருங்கள். அவராக நீங்கள் மாறி அவர்கள் கோணத்தில் பிரச்னைகளைப் பார்த்து அவர்கள் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது :நாம் செய்வது தவறு என்று யாரேனும் சுட்டிக்காட்டினால், எடுத்த எடுப்பில் அதை நியாயப்படுத்த முயலாமல், பொறுமையாக அவர்கள் சொன்ன கருத்தை யோசித்துப் பாருங்கள். நாம் செய்வது தவறு என்று நம் மனம் சொன்னால் அதை உடன் திருத்திக்கொள்ள முயலுங்கள். பெரியவர்கள் சொல்வதை எடுத்தெறிந்து பேசிவிட்டு, இறுதியில் பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பதைவிடப் பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், வாழ்க்கை வசப்படும்.

இறைக்க இறைக்க ஊறும் மணற்கேணி; அதைபோல் அன்பு சுரக்கசுரக்க பலப்படும் மனிதஉறவுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமக்கு ஏதாவது காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக மட்டும் அடுத்தவர்களைத் தொடர்பு கொள்ளாமல், எப்போதும் அனைவரிடமும் தொடர்பில் இருங்கள். நம் உறவினர்கள், நண்பர்கள், உடன்பணிபுரிவோர், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை, அவர்களின் பிறந்தநாள், மணநாள் ஆகியவற்றை உங்கள் அலைபேசியின் நினைவூட்டல் பகுதியில் சேமித்து வைத்துக்கொண்டு அந்த நாட்கள் வரும்போது செய்தியனுப்பாமல் நேரில் சந்தித்து வாழ்த்துங்கள். வாழ்த்தும்போதுதான் நாம் வளர்கிறோம்.
நா காக்க
எப்போதும் நல்ல சொற்களையே பயன்படுத்துங்கள். ஒருவரைப்பற்றி மற்றவர்களிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். நாம் பேசும் பயனற்ற பேச்சுதான் நம் அமைதியைக் குலைக்கும் கொடுமையான ஆயுதம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்த பூந்தோட்டமே என்பதை உணருங்கள். சங்கடங்களை, சவால்களைச் சந்தோஷமாய் எதிர்கொள்ளுங்கள்.நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நொந்துகொள்ளவேண்டாம், எல்லோருக்கும் நடந்தது தான் நமக்கும் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே நடந்த தவறுகளைப் பழிபோட மனிதர்களைத் தேடாதீர்கள். தெரியும் என்றால் பெற்றுக்கொள்வதும் தெரியாதாதென்றால் கற்றுக்கொள்வதும் நம் இயல்பாக இருக்கட்டும்.
அடுத்தவர்களுக்கு நியாயமாய் கிடைக்கவேண்டியதை அநியாயமாய் தட்டிப்பறித்தால் நமக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போகும் என்று புரிந்துகொள்ளுங்கள். இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது. அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்று உணருங்கள்.

மனம் திறந்து பேசுங்கள் :ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் மறுபேச்சு என்று இல்லாமல் எல்லோரிடமும் மனம்விட்டுப்பேசுங்கள். கடுங்காற்று மழையைக் கெடுக்கும், கடுஞ்சொல் உறவைக் கெடுக்கும். எனவே கண்டதை எல்லாம் எதிரே கண்டவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்காமல்
இனிமையாகப் பேசுங்கள். உங்கள் புன்முறுவல் பலரது புண்களை ஆற்றும் அருமருந்து என்பதைப் புரிந்துகொண்டு முகமலர்ச்சியோடு சக மனிதர்களோடு நன்றாகப் பழகுங்கள்.

பரந்த மனம் :முன்முடிவுகளோடு எதையும் அணுகாதீர்கள். காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப்போல் நம் பார்வையே எல்லாவற்றுக்கும் காரணமாய் அமைகிறது. குறுகிய சுயநல எண்ணங்கள் நம்மை வீழ்த்திவிடும். பாரம் சுமக்கிறவனுக்குத்தான் அதன் பாடுதெரியும், எனவே பரந்த மனதோடும் திறந்த இதயத்தோடும் சக மனிதர்களின் துயரங்களையும் அவர்களின் பாடுகளையும் எதிர்கொள்ளுங்கள்.

எல்லோரையும் திருத்தி விடலாம் என்ற நினைப்பு நம்மை வருத்திவிடலாம். நல்லோர் நட்பு நன்மையே தரும். தீயோர் நட்பு நம்மையும் தீயுக்குள் இறக்கிவிடும்.எனவே நட்பு கொள்வதில் நாம் செலுத்தும் கவனம் உறவுகள் சிதையாமல் நம்மைக் காக்கும்.\
அன்பு செலுத்துங்கள் :அன்பு அரூப வரம், அன்பு ஒரு பெருங்கருணை,அன்பு ஓர் அழகிய தவம், அன்பு சிவம், அன்பு ஒரு கொண்டாட்டம். கணவன் மனைவி, குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர் மாணவர்,மாமியார்- மருமகள், மாமனார் -மருமகன் என்று பேதமில்லாமல் அனைவரும் அன்பின் கடலில் நதிகளாய் கலக்கலாம். அன்பில் அன்பைத் தவிர ஏதுமில்லை. அன்பில் பேதமில்லை. இவருக்கு நாம் உதவினால் இவர் இப்படி மாற்றுதவி செய்வார் என்று நாம் செலுத்துவதற்குப் பெயர் அன்பு இல்லை, அது நாகரிக வணிகம். எனவே எல்லோர் மீதும் எதிர்பாராமல் அன்பு செலுத்துங்கள். 'அன்பிற் சிறந்த தவமில்லை' என்கிறான் மகாகவி பாரதி.

ஆகவே நண்பர்களே...
உலகம் மிகப் பெரிய உறவுக்கூடம். அதில் வாழ நமக்குக் கிடைத்ததோ நற்பேறு. சிட்டுக்
குருவிகள் கூட நமக்குச் சின்ன உறவினர்களே. கரையும் காகத்திற்கும் கத்திஅழைத்து உணவிட்ட சமுதாயம் நம் சமுதாயம். உறவுகள் இறைவன் எழுதிய உயிர்க் கவிதைகள். உறவுகள் காட்டி குழந்தைகளை வளர்ப்போம். விட்டுக்கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவர்களின் தோல்வி விட்டுக் கொடுக்காததால் வந்தது. ஒரு சிறுபுன்னகை நம் அலுவலக நண்பரின் நெடுநாள் பகையை நீக்கும். ஒரு சிறு ஆறுதல் சொல் நம் பலநாள் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும். ஒரு சிறு சினேகக் கைகுலுக்கல் நடைபெறவிருந்த பெரிய போரை நிறுத்தும். மாதத்தில் ஒரு நாள் ஆதரவற்றோர் இல்லம் செல்வோம்..உறவாய் நாங்கள் உடன் இருக்கிறோம் எனக் கரம்பற்றி உணர்த்துவோம். ஆம்! பிரார்த்தனை செய்யக் கூடிய உதடுகளைவிடச் சேவை செய்யும் கரங்கள் உன்னதமானவை. உறவெனும் சிறகு பூட்டி பறப்போம் வாழ்வெனும் வானில்.
- பேராசிரியர்
சௌந்தர மகாதேவன்,
திருநெல்வேலி. 99521 40275

Wednesday, July 27, 2016

திருப்பாவை


திருப்பாவை பாசுரம் 1
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.
நேர் இழையீர் - அழகிய ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே; பறை - விருப்பம்;
ஏல் - கேள்; ஓர் - இதை நினைப்பாயாக; ஏலோர் - பாதத்தை நிறைத்து கிடக்கும் சொல்;
எம்பாவாய் - எம்முடைய பாவையே - காமன்(மன்மதன்) மனைவி ரதி என்றும் கொள்ளலாம்.
"மேல் காமனை நோற்கையாலே அவன் மனைவியான ரதியை சொல்லியதாகவும் ஆகும்"
Pasuram 1 - English Translation
It's Margali month, moon replete and the day is proper
     We shall bathe, girls of Ayarpadi prosperous
Will you move out? You wealthy adorn'd fine jewels;
     Narayana, son of relentless Nandagopala,
Whose job wielding a sharp spike ever alert and
     The lion cub of Yasoda with eye gracious
And the lad with dark complexion, handsome eye
     And face sunny bright pleasant as moon
     Sure shall grant us the desire soon
     To the esteem of this earth as a boon;
     Oblige, involve, listen and consider, our damsel.

2. The acts forbidden and those to be followed.

திருப்பாவை பாசுரம் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
     செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
     செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
     உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.
தீக்குறள் - கோள் சொற்கள்; உய்யும் ஆறு எண்ணி - வாழும் வழியை நினைத்து
Pasuram 2 - English Translation
You who enjoy life on earth, listen!
     The rituals for deity go through we duteous;
Chant the foot of the Supremo who had
     Reposed in stealth on the ocean milky;
Bathe we early; relish not ghee or milk
     Nor would kemp, nor adorn with flower beauteous;
Grace not with eyeliner; nor bid deeds forbidden;
     Nor go around ear kiss tale or malicious gossip
     Help the worthy and poor utmost by gift or alms toss'd
     With mind pleasant, study the chores engross'd;
     Listen and consider, our damsel.

3. Blessings the country would achieve.

திருப்பாவை பாசுரம் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
     நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
     ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
     தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
     நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.
பூம் குவளைப் போது - அழகிய நெய்தல் மலர்; கயல் உகள - கயல் மீன்கள் துள்ள;
Pasuram 3 - English Translation
Should we sing the name of the magnanimous
     Outgrown and meted the world and assent
To bathe for deity, rain it shall, pour country over
     Thrice monthly with no despair;
Shall facilitate tall growth of fine paddy crop.
     Carp to jump amidst like aquabatic feat,
Spotted bee to perch on lily fair and
     Donor cows to stand still, with udders thick,
     Allow milking to fill vessels copious;
     To ordain never vanishing wealth bounteous;
     Listen and consider our damsel.
திருப்பாவை பாசுரம் / Pasuram 4-6

4. Rain dear to Andal--exposition of Vishistadvaita

திருப்பாவை பாசுரம் 4

ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
     ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
     பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
     தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
     மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
ஆழியுள் - சமுத்திரத்திற்குள்; ஆர்த்து - இடி இடித்து;
ஆழிமழைக் கண்ணா - கடல்போல் கருணை உள்ளம் படைத்த தலைவனான வருணனே,
         கண் பொன்றவனே; அண்ணனே;
கைகரவேல் - ஒழிக்கக் கூடாது; ஆழி - சக்கரம்; வலம்புரி - பாஞ்ச ஜன்ய சங்கு;
சார்ங்கம் - சாரங்க வில்; தாழாது - கால தாமதம் செய்யாமல்;
Pasuram 4 - English Translation
Oh! Rain! Gracious alike ocean, pupil of my eye;
     Thou shalt never flout this attitude
Enter sea, emerge replete, ascend a mass dark in space;
     Colour a la form of Lord Eternal, Let lightning flash
Thunder shoot as wheel and dextrogyral
     In the hands of Padmanabha, His arms a fortitude;
Brook no delay, force a cloud burst;
     Pour down as would darts from Sarnga lash
     To facilitate life on earth bright;
     And the Margali bath to our delight;
     Listen and consider, our damsel.

5. Cow girls eternally in crime. Could they succeed and achieve their objective?

திருப்பாவை பாசுரம் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
     தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
     தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
     வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
     தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.
மாயன் - மாய வித்தை செய்பவன்; மந்திரக் காரன்; மறைந்திருப்பவன்;
         ஏமாற்றுபவன்; விநோதன்; மாய நிறமுடையவன்; மேகவண்ணன்;
மன்னு - நிலைத்துள்ள; புகுதருவான் நின்றனவும் - பின்பு ( நம்மை அறியாமல் ) வருபவையும்;
Pasuram 5 - English Translation
The elusive son of blooming North Mathura;
     Riverman de facto of grand Yamuna pure;
Appear'd in Ayar tribe a glow lamp and
     Brought sanctity to mother's womb;
If we reach pure, shower fine flower and
     Worship Him, Damodara the Lure;
With song in lips, mind engross'd,
     The sins committed deliberate or inadvertent
     In the past, present and future entire
     Shall be burnt a refuse in bonfire;
     Prithee, listen and consider, our damsel.

6. Awakening a mate who is new for Bhagwath matter.

திருப்பாவை பாசுரம் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
புள்ளும் - பறவைகளும்; சிலம்பின - கூவிக் கொண்டுள்ளன; கலக்கு அழிய - கட்டுக் குலையும்படி
Pasuram 6 - English Translation
Behold! Birds clanged; whitish conch
     At the abode of eagle's king is blaring;
Won't thou listen? Lassie arise!
     Poison, He sucked from devil' s breast
Kicked deftly the treacherous cart, to a shatter
     On the serpent alighted in ocean had set sleeping;
Kept this seed in mind, monks and yogis
     Arise gently and Hari they mumble;
     This chant pierces the mind as a rumble;
     Awakens and enthuses like a roar to assemble
     Listen and consider, our dams


திருப்பாவை பாசுரம் 7
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
     பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
     வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
     நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
     தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.


கீசுகீசு - கீச்சு கீச்சு, கிருஷ்ணா கிருஷ்ணா; ஆனைச்சாத்தன் - வலியன்; பரத்வாஜ பறவை;
காசும் - அச்சுத் தாலி; பிறப்பும் - முளைத்தாலி; கைபேர்த்து - கை அசைத்து; தேசம் - தேஜஸ்;


Pasuram 7 - English Translation
Can't thou listen to the kingcrow mingled all around?
     The clatter--'Keesu Keesu', a medley
Gurgling noise of curd by churndash
     Hands moving see-saw, to alter,
Of Ayar women with tresses fragrant and
     Coins clanking in their necklace seedy;
Thou devilish lass, our chief, conceive;
     As we sing Narayana moorthy Kesava
     Shouldst thou lie-along well orient'd?
     Lay open thou radiant
     Listen and consider our damsel.
8. "A girl beloved to Krishna and could conquer Him" -- is aroused.


திருப்பாவை பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
     மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
     கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
     ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.
மாவாய் - குதிரை வடிவு கொண்ட கேசியின் வாயை;
மல்லர் - சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்யுத்தம் செய்பவர்களை;
மாட்டிய - அழியச் செய்த; ஆ ஆ என்று அருள் - ஆ ஆ என்று இரங்கி;



Pasuram 8 - English Translation
Orient sky is pale; the buffalo
     Before gives milk plods to graze the field, Lo!
Girls go abreast in gang and the remnant
     Are told to await to have thee;
We call at thee astand; girl zealot!
     If we pray, procure the desire our vow
By reaching the Divine among Divine and sing
     Him who had split snout of the devil
     Kill'd wrestlers and quell'd;
     He shall hearken our welfare and spell;
     Arise, listen and consider, our damsel.
9. "It is the duty of Krishna to seize me and to own me".


திருப்பாவை பாசுரம் 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
     தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
     மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
     ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
     நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.
அனந்தல் - (களைப்பினால்) உறங்குகிறாளா? ஏமப்பட்டாள் - காவலில் இடப்பட்டாள்;


Pasuram 9 - English Translation
Mansion studded with pure precious stones
     Wicks of light all around gleaming
Asleep a couch perfume afloat;
     Thou, uncle's daughter, unlock the door bedeck'd;
Auntie, would you arouse her?
     Is your daughter dumb, deaf, lazy and dreaming?
Accurs'd to a grand sleep with a sentry?
     Extol Him as Madhava,
     Great Hypnotist, Mukuntha,
     And so forth chant the Vaigunta;
     Listen and consider, our damsel.


திருப்பாவை பாசுரம் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
     மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
     போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
     தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
     தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!

நோற்று - நோன்பு நோற்று; கூற்றத்தின் - யமனுடைய;
ஆற்ற அனந்தல் - எல்லையற்ற சோம்பல்; அருங்கலம் - அரிய ஆபரணம் போன்றவள்;
தேற்றமாய் - கூந்தலையும் உடையையும் திருத்திக் கொண்டு;


Pasuram 10 - English Translation
You lady would fast until enter Heaven;
     If one wouldn't open entry, should she not speak?
Adorn'd fragrant basil crown, Narayana virtuous
     Bestows the desire on our prayer;
Of yore consigned Kumbakarna to death.
     Has that demon, lost in contest peak,
Handed the grand sleep over unto thee?
     Lazy to the core
     Thou shalt precious decor
     Trimmed and dressed, open the door;
     Listen and consider, our damsel.
11. “If Krishna wants me, let Him fast to achieve me”.

திருப்பாவை பாசுரம் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
     செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
     புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
     முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
     எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!

கற்றுக் கறவை - கன்று போல உள்ள இளம் பசுக்கள்;
செற்றார் - தகுதியற்ற முறையிலும் கர்வத்தினாலும் மோதுகின்ற எதிரிகள்; செரு - போர்;
புற்று அரவு அல்குல் - புற்றுக்குள் நுழையும் பாம்பின் குறுகிய பாகத்தைப் போன்ற இடை,
புனமயில் - காட்டு மயில்; சிற்றாது - அசைத்து கொடுக்காமல்; எற்றுக்கு - எதற்காக;
உறங்கும் பொருள் - உறங்கும் நோக்கம்;


Pasuram 11 - English Translation
Thou, daughter of a cowherd, who
     Sans a single guilt, milks many a milk-cow
Daunts arrogance, preempt stuns at its precincts;
     Thy girdle seems a serpent in pit;
Wild jungle peacock, start!
     All neighbour mates have arrived now
Entered thy courtyard in grace
     And sing the name of cloud colour'd yet
     Creeper gold! Unperturb'd and mute
     Drowsest thou; what for, our pet?
     Beloved bride, listen and consider, our damsel.
12. A girl whose brother doing 'Kainkaryam' to
         Krishna is awakened.

திருப்பாவை பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி
     நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
     பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
     மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
     அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்

தென் இலங்கை - தெற்கு திசையிலுள்ள இலங்கை, அழகிய செல்வத்துடைய இலங்கை;

Pasuram 12 - English Translation
Young buffalo yearns for calf, mumbles;
     Milk dribbles from udder and home a mire wet;
Thou, sister of a fair and wealthy, with a snow hail
     Over the head, as we clench thy entrance
We pray Him the Delight of our mind,
     He by His wrath had let
The monarch of Lanka South trounced;
     Shalt arise now the very least
     What a grand sleep thou acquiesce
     Residents all aware and muse,
     Open thy mouth! Listen and consider, our damsel.

பாப்பா paatu

2. பாப்பாப் பாட்டு
 
 ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!

Sunday, July 24, 2016

வல்லினம் மெல்லினம் இடையினம்

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற.  19 
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன.  20  
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள.  21  

இது தொல்காப்பியம், எழுத்ததிகாரம்.

Thirukkural-திருக்குறள் 825: 309 183 ,176, 74, 318, 0837 1019, 0785, 0195, 0523, 0434, 0617. 0824, 0605, 0657, 0335, 0248.132,501,793,957,413,653,624,655, 831,959,230,182.

குறள் அதிகாரம் : பேதைமை

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
( குறள் எண் : 837 )

குறள் விளக்கம் :
மு.வ : பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
சாலமன் பாப்பையா : அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.


குறள் அதிகாரம் : நாண் உடைமை

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் 
நாணின்மை நின்றக் கடை.
( குறள் எண் : 1019 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா : ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.


குறள் அதிகாரம் : நட்பு
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
( குறள் எண் : 785 )

குறள் விளக்கம் :
மு.வ : நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா : ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்


குறள் அதிகாரம்: பயனில சொல்லாமை
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

( குறள் எண் : 195 )

குறள் விளக்கம் :
பொருள்:பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.


குறள் அதிகாரம் : சுற்றம் தழால்
 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
( குறள் எண் : 523 )

குறள் விளக்கம் :
மு.வ : சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா : சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.




குறள் அதிகாரம் : குற்றம் கடிதல்
 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.
( குறள் எண் : 434 )

குறள் விளக்கம் :
மு.வ : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

குறள் அதிகாரம் : ஆள்வினை உடைமை
 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
( குறள் எண் : 617 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
சாலமன் பாப்பையா : சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.


குறள் அதிகாரம் : கூடா நட்பு
 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
( குறள் எண் : 824 )
குறள் விளக்கம் :
மு.வ : முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
சாலமன் பாப்பையா : நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.




குறள் அதிகாரம் : மடி இன்மை

 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

( குறள் எண் : 605 )
குறள் விளக்கம் :
மு.வ : காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
சாலமன் பாப்பையா : காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.


குறள் அதிகாரம் : வெகுளாமை

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.
( குறள் எண் : 302 )

குறள் விளக்கம் :
மு.வ : பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
சாலமன் பாப்பையா : பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.


குறள் அதிகாரம் : வினைத்தூய்மை

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.
( குறள் எண் : 657 )

குறள் விளக்கம் :
மு.வ : பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
சாலமன் பாப்பையா : பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது


குறள் அதிகாரம் : அறிவுடைமை
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
( குறள் எண் : 429 )

குறள் விளக்கம் :
மு.வ : வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா : நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.



குறள் அதிகாரம்: நிலையாமை

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
( குறள் எண் : 335

குறள் விளக்கம் :
பொருள்:நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.



குறள் அதிகாரம் : அருள் உடைமை

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
( குறள் எண் : 248 )

குறள் விளக்கம் :
மு.வ : பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
சாலமன் பாப்பையா : பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.


குறள் அதிகாரம் : ஒழுக்கம் உடைமை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
( குறள் எண் : 132 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
சாலமன் பாப்பையா : எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்


குறள் அதிகாரம் : தெரிந்து தெளிதல்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
( குறள் எண் : 501 )

குறள் விளக்கம் :
மு.வ : அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
சாலமன் பாப்பையா : அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.


குறள் அதிகாரம் : நட்பு ஆராய்தல்

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

( குறள் எண் : 793 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.


குறள் அதிகாரம் : குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மத?க்கண் மறுப்போல் உயர்ந்து.
( குறள் எண் : 957 )

குறள் விளக்கம் :
மு.வ : உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்


குறள் அதிகாரம் : கேள்வி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
( குறள் எண் : 413 )

குறள் விளக்கம் :
மு.வ : செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையா : செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்


குறள் அதிகாரம் : வினைத்தூய்மை
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்.
( குறள் எண் : 653 )

குறள் விளக்கம் :
மு.வ : மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா : உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.


குறள் அதிகாரம் : இடுக்கண் அழியாமை

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
( குறள் எண் : 624 )

குறள் விளக்கம் :
மு.வ : தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா : செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.


குறள் அதிகாரம் : இன்னா செய்யாமை

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
( குறள் எண் : 318 )

குறள் விளக்கம் :
மு.வ : தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
சாலமன் பாப்பையா : அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

அதிகாரம்: அன்புடைமை

குறள்:74

பொருள்:அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.


குறள் அதிகாரம் : வெஃகாமை

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
( குறள் எண் : 176 )

குறள் விளக்கம் :
மு.வ : அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
சாலமன் பாப்பையா : அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

குறள் அதிகாரம் : புறங்கூறாமை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
( குறள் எண் : 183 )

குறள் விளக்கம் :
மு.வ : புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.
சாலமன் பாப்பையா : காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.


குறள் அதிகாரம் : வெகுளாமை

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.
( குறள் எண் : 309 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
சாலமன் பாப்பையா : உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.


குறள் அதிகாரம் : கூடா நட்பு

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
( குறள் எண் : 825 )

குறள் விளக்கம் :
மு.வ : மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
சாலமன் பாப்பையா : மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது



குறள் அதிகாரம் : வினைத்தூய்மை

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
( குறள் எண் : 655 )

குறள் விளக்கம் :

மு.வ : பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா : என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது


குறள் அதிகாரம் : பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
( குறள் எண் : 831 )

குறள் விளக்கம் :
மு.வ : பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா : அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்


குறள் அதிகாரம் : குடிமை
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
( குறள் எண் : 959 )

குறள் விளக்கம் :
மு.வ : இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

சாலமன் பாப்பையா : நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

குறள் அதிகாரம் : ஈகை

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை.
( குறள் எண் : 230 )

குறள் விளக்கம் :
மு.வ : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சாலமன் பாப்பையா : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.



குறள் அதிகாரம் : புறங்கூறாமை
 அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
( குறள் எண் : 182 )
குறள் விளக்கம் :

மு.வ : அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

சாலமன் பாப்பையா : அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு


குறள் அதிகாரம் : பண்புடைமை

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
( குறள் எண் : 999 )

குறள் விளக்கம் :
மு.வ : பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

சாலமன் பாப்பையா : நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.






Saturday, July 23, 2016

சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்

 
 


பதிவு செய்த நாள்

24ஜூலை
2016 
00:00
சமரசம் என்ற வார்த்தைக்கு, சமாதானம் செய்து வைத்தல் என்கின்றன, அகராதிகள். இதை, நாம் சற்றே வித்தியாசமான கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்ப்போம். எப்படியும் வாழலாம் என்பது பலரது கொள்கை; இப்படித்தான் வாழ வேண்டும் என்று முறையாக வாழ்வோரை, சல்லடை போட்டு அரித்தெடுக்க வேண்டியுள்ளது.
எப்படியும் வாழலாம் என்பதை, ஒருவர் தன் மனசாட்சி சொல்வதை, காலடியில் போட்டு மிதிக்கிற செயலாக கருதலாம்.
உச்ச நீதிமன்றத்திற்கு கூட கிடைக்காத, அருமையான நீதிபதி, நம் மனசாட்சி தான். அதை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கை பின்பற்றுவோர், எத்தகைய செயலையும், நியாயப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
தவறுகள் மற்றும் குற்றங்களின் முதல் ஊற்றுக்கண் இது தான். ஒரு தவறை செய்ய முற்படும் போது, உடனே உள்ளேயிருந்து, 'அடேய்... வேணாம்டா பாவம்... அப்புறம் மாட்டிக்கின்னு முழிப்பேடா... வம்பு, வழக்குன்னு ஆகி அசிங்கப்படுவேடா...' என்கிறார், நம் மன சாட்சியார்.
'நீ கம்முன்னு கெட... உன்னை எவன் கேட்டான்...' என்று மனசாட்சியை அடக்குவது தான், சமரசம் செய்து கொள்வது என்பது! அதாவது, நியாயத்திற்கு எதிரான சமாதானங்கள்.
'அவன், என்னை ஏமாற்றினான்; எனவே, நான் அவனை ஏமாற்றுவதில் என்ன தவறு...' என்பதும், மனசாட்சியை அடக்க பார்க்கும் சமாதானமே!
'அவன் தன் குணத்தை காட்டிட்டான்; இதற்காக, நான் ஏன் இறங்கி போக வேண்டும்...' என்று எதிர் கேள்வி எழுப்புவது, மனசாட்சிக்கு உரமூட்டும் செயல்.
நீங்கள் அறிந்த உதாரணம் தான். நாய் குரைக்கிறது என்பதற்காக, நாமும் அதை பார்த்து குரைக்க முடியுமா... நாய், நாயாக தான் நடந்து கொள்ளும்; ஆனால், மனிதன், நாயின் தரத்திற்கு இறங்கி போகலாமா!
'அவன், எனக்கு தபாலில் தானே அழைப்பு அனுப்பினான்; நான், ஏன் நேரில் போய் அழைக்க வேண்டும்...' என்று கேட்பது, நியாயத்தின் குரல் அல்ல; மனசாட்சியை அடகு வைக்கும் குரல். இது, ஒரு தவறான சமரசமே!
'அவனுக்கு பண்பாடு தெரியலை... நான் அப்படி அல்ல, முறையாக அழைப்பேன்...' என்பது மனசாட்சியின் குரல்.
'நியாயமான காரணம் சொல்லி, முதலாளியிடம் முன்பணம் கேட்டேன்; அவர் தரலை. எனவே, ஒரு பொய் காரணத்தை சொல்லி, பணம் வாங்கப் போறேன்...' என்று அணுகுவது, நம்மை நாம் சமரசம் செய்து கொள்ளும் தவறான அணுகுமுறையே!
'எங்கப்பா என்னை கோபிச்சுக்கிட்டாரு; எனவே, இந்த முறை நான் அவரை அழைக்கப் போறதும் இல்ல; போய் பாக்கப் போவதும் இல்ல...' என்று ஒரு மகன் குதித்தால், அங்கே சமரசம் தலை தூக்கி விட்டது என்று பொருள்.
'அப்பா என் நன்மைக்கு தான் சொன்னாரு; ஆனா, அதை கோபமாக சொல்லிட்டாரு. என்னை கண்டிக்க, இந்த உலகத்தில அவருக்கு இல்லாத உரிமையா... அது வேறு; இது வேறு. நான் எப்போதும் போல, அவரிடம் நடந்து கொள்வேன்...' என்பது தான் மனசாட்சியின் பார்வை.
சமரசப் பார்வைகளில் நஷ்டம் பிறருக்கு இது, என தப்பு கணக்கு போடுகிறோம். அது உண்மையல்ல; நஷ்டம் நமக்கே!
அரிசியில், கல்லை கலந்து விற்கிற கலப்படம்; ஒரு காலத்தில் எடுபட்டது; ஏற்க தக்கதாகவும் இருந்தது. இன்று அது நடவாது; வியாபாரம் படுத்து விடும்.
மிளகில், பப்பாளி விதையை கலந்து விற்போரும் உண்டு. இவர்கள் பிடிபடவும் மாட்டார்கள்; வியாபாரமும் படுத்து விடாது. இவர்களை, 'காம்ப்ரமைஸ்' காரர்கள் என்பேன். 'இது என்ன பெரிய தவறு... எல்லாம் மிளகு என்றால் கட்டுபடியாகாது...' என்பவர்கள் இவர்கள். ஆனால், காலம் இவர்களை காட்டி கொடுத்து, வியாபாரத்தை படுக்கச் செய்து விடும்.
சமரசம் என்பது, தரத்திலிருந்து இறங்கி போவது, தாழ்ந்து பேசுவது, தம் செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவது. இது நீண்ட, நெடிய, இனிய பயணத்திற்கு ஒருபோதும் உதவாது.
ராக்கெட் பயணத்திற்கு ஆசைப்பட்டு, கட்டை வண்டி பயணத்திற்கு தள்ளப்படுவோரின் வரலாறுகளை ஆராய்ந்தால், பெரும்பாலும், இவர்கள் எப்படியும் வாழலாம் எனும், 'காம்ப்ரமைஸ்' ரகத்தவர்களாகவே இருப்பர்.
மாறாக, இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற முடிவிற்கு வந்து விட்டால், அவர்கள், எப்படி எப்படியோ வாழுமளவு உயர்த்தப்படுவர் என்பதே உண்மை!

லேனா தமிழ்வாணன்

Friday, July 22, 2016

ஔவையாரின் 'மூதுரை'; ஔவையாரின் 'நல்வழி'

ஔவையாரின் 'மூதுரை'  – 17

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

விளக்கம்.

நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.
(கருத்து – இன்பக் காலத்தும், துன்பக் காலத்தும் இசைந்து சேர்ந்து இருப்போரே சிறந்த சுற்றத்தார் ஆவார் என்பதாம்.)

-------------------
ஔவையாரின் 'நல்வழி'

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...

Sunday, July 17, 2016

Thirukkural-திருக்குறள்: 0660,0995, 0209, 0757, 0173, 0204.0427,0092, 0117, 1021, 0253, 1049, 0112, 0956, 0442,1060, 0439, 0464, 0196, 0116, 0970, 0422, 0943, 0128, 0538, 0994, 1025


குறள் அதிகாரம் : வினைத்தூய்மை

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
( குறள் எண் : 660 )

குறள் விளக்கம் :
மு.வ : வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா : தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.


குறள் அதிகாரம் : பண்புடைமை

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
( குறள் எண் : 995 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

சாலமன் பாப்பையா : விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.

குறள் அதிகாரம் : தீவினை அச்சம்

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.
( குறள் எண் : 209 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா : தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.காரம் : நாணுத் துறவு உரைத்தல்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
( குறள் எண் : 1140 )

குறள் விளக்கம் :
மு.வ : யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
சாலமன் பாப்பையா : நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!





குறள் அதிகாரம் : பொருள் செயல்வகை

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
( குறள் எண் : 757 )

குறள் விளக்கம் :
மு.வ : அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.
சாலமன் பாப்பையா : அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

குறள் அதிகாரம் : வெஃகாமை
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
( குறள் எண் : 173 )

குறள் விளக்கம் :
மு.வ : அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
சாலமன் பாப்பையா : அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்



குறள் அதிகாரம் : தீவினை அச்சம்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
( குறள் எண் : 204 )

குறள் விளக்கம் :
மு.வ : பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
சாலமன் பாப்பையா : மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.



குறள் அதிகாரம் : அறிவுடைமை

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
( குறள் எண் : 427 )

குறள் விளக்கம் :
மு.வ : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
சாலமன் பாப்பையா : அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்



குறள் அதிகாரம் : இனியவை கூறல்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
( குறள் எண் : 92 )

குறள் விளக்கம் :
மு.வ : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா : முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது



குறள் அதிகாரம் : நடுவுநிலைமை

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
( குறள் எண் : 117 )

குறள் விளக்கம் :
மு.வ : நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
சாலமன் பாப்பையா : நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்


குறள் அதிகாரம் : குடி செயல்வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
( குறள் எண் : 1021 )

குறள் விளக்கம் :
மு.வ : குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா : வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

குறள் அதிகாரம் : புலால் மறுத்தல்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்.
( குறள் எண் : 253 )

குறள் விளக்கம் :
மு.வ : ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
சாலமன் பாப்பையா : கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

குறள் அதிகாரம் : நல்குரவு

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
( குறள் எண் : 1049 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
சாலமன் பாப்பையா : யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

குறள் அதிகாரம் : மெய் உணர்தல்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
( குறள் எண் : 356 )

குறள் விளக்கம் :
மு.வ : கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
சாலமன் பாப்பையா : பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.


குறள் அதிகாரம் : புறங்கூறாமை
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.
( குறள் எண் : 189 )

குறள் விளக்கம் :
மு.வ : ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
சாலமன் பாப்பையா : பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!


குறள் அதிகாரம் : நடுவுநிலைமை
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
( குறள் எண் : 112 )

குறள் விளக்கம் :
மு.வ : நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா : நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்


குறள் அதிகாரம் : குடிமை

சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
( குறள் எண் : 956 )

குறள் விளக்கம் :
மு.வ : மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா : குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்



குறள் அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

( குறள் எண் : 442 )

குறள் விளக்கம் :

மு.வ : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்
.
சாலமன் பாப்பையா : வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக


.குறள் அதிகாரம் : இரவு

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

( குறள் எண் : 1060 )
குறள் விளக்கம் :
மு.வ :   இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

சாலமன் பாப்பையா :
 பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.


குறள் அதிகாரம் : குற்றம் கடிதல்
 வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
( குறள் எண் : 439 )

குறள் விளக்கம் :
மு.வ : எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
சாலமன் பாப்பையா : எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.


குறள் அதிகாரம் : சூது
 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
( குறள் எண் : 936 )

குறள் விளக்கம் :
மு.வ : சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
சாலமன் பாப்பையா : சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.


குறள் அதிகாரம் : தெரிந்து செயல்வகை
 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.
( குறள் எண் : 464 )

குறள் விளக்கம் :
மு.வ : இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
சாலமன் பாப்பையா : தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.


குறள் அதிகாரம் : பயனில சொல்லாமை

 பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
( குறள் எண் : 196 )

குறள் விளக்கம் :
மு.வ : பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா : பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.


குறள் அதிகாரம் : நடுவுநிலைமை

 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
( குறள் எண் : 116 )

குறள் விளக்கம் :
மு.வ : தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா : தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.


குறள் அதிகாரம் : மானம்

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
( குறள் எண் : 970 )

குறள் விளக்கம் :
மு.வ : தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
சாலமன் பாப்பையா : தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.



குறள் அதிகாரம் : அறிவுடைமை
 சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
( குறள் எண் : 422 )

குறள் விளக்கம் :
மு.வ : மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா : மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு



குறள் அதிகாரம் : மருந்து
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
( குறள் எண் : 943 )

குறள் விளக்கம் :
மு.வ : முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
சாலமன் பாப்பையா : முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி


குறள் அதிகாரம் : அடக்கம் உடைமை
 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
( குறள் எண் : 128 )

குறள் விளக்கம் :
மு.வ : தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
சாலமன் பாப்பையா : தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.




குறள் அதிகாரம் : பொச்சாவாmi
 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
( குறள் எண் : 538 )

குறள் விளக்கம் :
மு.வ : சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.
சாலமன் பாப்பையா : உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை


குறள் அதிகாரம் : பண்புடைமை
 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
( குறள் எண் : 994 )

குறள் விளக்கம் :
மு.வ : நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
சாலமன் பாப்பையா : நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.


குறள் அதிகாரம் : குடி செயல்வகை

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
( குறள் எண் : 1025 )

குறள் விளக்கம் :
மு.வ : குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
சாலமன் பாப்பையா : தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.