Saturday, June 30, 2018

முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம் thanks to tamil and vedas

[New post] முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம்! (post No.5153)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jun. 27 at 1:46 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம்! (post No.5153)

    by Tamil and Vedas
    Tiruchengodu temple sculpture
    Written by S NAGARAJAN

    Date: 27 JUNE 2018

    Time uploaded in London –   8-45 AM (British Summer Time)

    Post No. 5153

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம்!

    ச.நாகராஜன்

    அற்புதமான வரலாறுகளைக் கொண்டது பாரதம். இங்கு தோன்றிய மகான்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். ஆனாலும் அவற்றையெல்லாம் அவர்கள் பெரிது படுத்தி பெருமை கொண்டாடியதில்லை. இறைவனின் திருவிளையாடல்களில் தாங்கள் ஒரு சிறு கருவி என்ற மட்டில் அதற்கு உரிய மதிப்பைத் தந்தனர்.

    ஆனால் அற்புதங்களைப் பார்த்து வியந்தோர் அதைப் பல்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளனர்.
    கொங்கு மண்டல சதகத்தில் வரும் 16ஆம் பாடல் திரு அவிநாசி தலத்தில் நடந்த ஒரு பெரும் அற்புதத்தை விவரிக்கிறது.

    பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
    பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
    ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு
    வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே.

    பாடலின் பொருள் : பிள்ளையைக் கொண்டு வா என்று செந்தமிழ் சுந்தரர் பதிகம் பாட, ஆவென்று பிள்ளையை விழுங்கிய முதலையானது அந்தப் பிள்ளையை கொண்டு வந்த  அவிநாசியை உடையது கொங்கு மண்டலமே.

    வரலாறு: திருநாவலூரர் என்று சிறப்பிக்கப்படும் சுந்தர மூர்த்தி நாயனார் அவிநாசிக்கு எழுந்தருளிய சமயம், ஒரு வீட்டில் மங்கல ஒலியும் அடுத்த வீ ட்டில் அழு குரலும் கேட்டது.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சில சிறுவர்கள் குளக்கரைக்குச் சென்றனர். அங்கிருந்த முதலை ஒரு சிறுவனை விழுங்கி விட்டது.

    அச்சிறுவனுடன் சென்றவனுக்கு இன்று உபநயனம். ஆகவே அந்த வீட்டில் மங்கல ஒலி எழுந்தது. அடுத்த வீட்டிலோ தனது குழந்தை இன்று இருந்தால் அவனுக்கும் இது போல உபநயனம் நடந்து கொண்டிருக்குமே என்று அவன் தாயார் ஓவென்று அழுத வண்ணம் இருந்தார்.

    இதை சுந்தர மூர்த்தி நாயனார்க்கு அங்குள்ளோர் தெரிவித்தனர்.
    மனமிரங்கிய நாயனார் குழந்தையை இழந்த தாயார் படும் துயரத்தைக் கண்டு பொறாதவராக இருந்தார்.
    நேராக குளக்கரைக்குச் சென்று ”காலனைக் குழந்தையைக் கொடுக்கச் சொல்” என்று பதிகம் ஓதி அருளினார். மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் அந்தச் சிறுவனை முதலை கரையில் கக்கிற்று.
    இதை அவிநாசிப் புராணமும் சுந்தர மூர்த்தி தேவாரமும் தனது பாடல்களால் அழகுற விளக்குவதை கீழ்க்கண்ட பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

    உரைப்பாருரையென் றுள்குறவல்லா ருச்சியின்மீதே யொளிவிடுசுடரே
    யரைக்காடரவா வாதியு நடுவு மந்தமுமளவு மல்லவுமானாய்
    புரைக்காடவை சூழ்புக்கொளியூரா புகழவிநாசிப் புண்ணியமுதலே
    கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல் காலனையென்றே கட்டுரை செய்தார்
    • அவிநாசிப் புராணம்
    உரைப்பாருரையிகந் துள்கவல்வார் தங்களுச்சியா
    யரைக்காடரவா வாதியு மந்தமுமானாய்
    புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவிநாசியே
    கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
    • சுந்தரமூர்த்தி தேவாரம்

    இந்தத் திருவிளையாடலில் மகத்தான விஞ்ஞானப் பேருண்மைகள் அடங்கியுள்ளன.
    மூன்று வயது வளர்ச்சியுடன் பாலகன் திரும்பி வந்தான் என்பது ஒரு அரிய செய்தி.
    மல்டிவர்ஸ் - Multiverse- என்னும் அரிய நவீன விஞ்ஞானக் கோட்பாட்டின் படி பல்வேறு பிரபஞ்சங்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கடுக்காக உள்ளன என்பது தெரிகிறது.
    W.Dunne  எழுதிய   “Nothing Dies” என்ற நூல் ‘எதுவும் இறக்காத நிலை’ என்ற கோட்பாட்டை அழகுற விளக்குகிறது.
    பல்லுயிரும் பல்வேறு உலகங்களில் இருப்பதாலேயே, மகத்தான தன் ஆன்மீக சக்தியின் மூலம் மூன்று வயது வளர்ந்த நிலையில் அந்த பாலகனை சுந்தரர் மீட்டார் என்பது வியப்புறும் விஞ்ஞானத்திற்கொத்த ஒரு செய்தியாகும்.
    இந்த அரிய அற்புதத்தை வழங்கிய மண்டலம் கொங்கு மண்டலமே.

No comments:

Post a Comment