Friday, February 2, 2018

தலைமுடி முதல் பாதம் வரை... பனிக்கால அழகுக் குறிப்புகள்! #BeautyTips thanks to vikatan.com

பனிக்காலம் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இனி, தலைமுடியில் தொடங்கி பாதங்கள் வரை ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால், சருமத்தில் வறண்டத்தன்மை, கூந்தலில் பிளவு, பாதங்களில் வெடிப்பு வரிசை கட்டி வரும். இந்தப் பிரச்னைகளைக் கடந்து பனிக்காலத்தை அழகாக்க டிப்ஸ்தருகிறார், பியூட்டிஷியன் வசுந்தரா. 
அழகுக் குறிப்பு1. இந்த சீசனில் எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் லைட் மாய்ஸ்ரைசர், நார்மல் சருமத்துக்காரர்கள் மீடியம் மாய்ஸ்ரைசர், வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ரைசர் எனப் பயன்படுத்தினால், டிசம்பரை சமாளிக்கலாம். 
2. இன்றைய நிலையில் பலரும் பத்து மணி நேரமாவது ஏஸி ரூமில் வேலை செய்யறாங்க. காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இந்த ஏஸி எடுத்துவிடுவதால், தலைமுடியும் சருமமும் சீக்கிரமே வறண்டு போகுது. சின்ன கேபினில் உட்கார்ந்து வேலை பார்க்கிறவங்க நிலைமை இன்னும் கஷ்டம். இதுக்கு தீர்வு, ஹியூமிடிஃபையர் (humidifier) என்ற சின்ன மெஷின். 1500 ரூபாயிலிருந்து கிடைக்கும் இதில், நாலு கப் தண்ணீரை ஊற்றி, ஆன் பண்ணி உங்க கேபினில் வெச்சுடுங்க. இது, காற்றில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறையாமல் பார்த்துக்கும். தண்ணீரை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை மாற்றணும். தண்ணீரோடு சில துளி அரோமா ஆயிலும் விடலாம். 
பியூட்டி டிப்ஸ்
3. குளிரில் அடிக்கடி தண்ணீர் குடிச்சால், அடிக்கடி ரெஸ்ட் ரூம் போகணுமே எனத் தயங்காமல், வழக்கம்போல உடம்புக்குத் தேவையான 2 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை தினமும் குடிக்கணும். 
4. பனிக்காலத்தில் படுக்கிறதுக்கு முன்னாடி, 'ஓவர் நைட் மாய்ஸ்ரைசர்' க்ரீம் போட்டுக்கங்க. மறுநாள் காலையில் எழும்போது முகம் வறண்டுப்போகாமல், கோடுகள் விழாமல் இருக்க இந்த மாய்ஸ்ரைசர் உதவும். 
பியூட்டி டிப்ஸ்
5. கைகள், முட்டி ஆகிய இடங்கள் சட்டுனு சொரசொரப்பாயிடும். இந்த இடங்களில் தேங்காய் எண்ணெய்யையும் பாதாம் எண்ணெய்யையும் சரிசமமா கலந்து அப்ளை செஞ்சு, அரை மணி நேரத்துக்கு அப்புறம் மிதமான சுடுநீரில் வாஷ் பண்ணிடுங்க. வாரத்துக்கு ரெண்டு நாள் இப்படி செஞ்சுட்டிருந்தால், கை, கால் முட்டிகள் மிருதுவாக இருக்கும். 
6. சிலர் இந்த சீசனில் வெயில்தான் குறைச்சலா இருக்கேனு சன்ஸ்கிரீன் லோஷன் யூஸ் பண்ண மாட்டாங்க. அது தப்பு. பனிக்கால வெயிலும் முகத்தைக் கறுப்பாக்கும். 
7. ஒரு துண்டு பப்பாளியுடன், ஒரு துண்டு வாழைப்பழம், 2 டீஸ்பூன் தேன் சேர்த்துப் பிசைஞ்சு, முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணுங்க. தேனும் வாழைப்பழமும் சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். பப்பாளி உங்கள் சருமத்துக்கு பளிச் நிறம் கொடுக்கும். 
8. பொடித்த பாதாம் பவுடருடன், காய்ச்சாத பாலை தேவையான அளவுக்குச் சேர்த்து பேஸ்ட்டாக்குங்க. உடம்பில் சொரசொரப்பா இருக்கும் பகுதிகளில் பேஸ்ட்டைத் தடவி, அரை மணி நேரம் கழிச்சு வாஷ் பண்ணினால், சொரசொரப்பு போயிடும். 
பியூட்டி டிப்ஸ்
9. காம்பினேஷன் சருமம் இருக்கிறவங்க, தயிரையும் மோரையும் சம அளவு கலந்து, பஞ்சினால் தொட்டு முகம் முழுக்க தடவி காயவிடுங்க. கொஞ்சம் நேரம்விட்டு மறுபடியும் என பலமுறை செய்யுங்க. அதிகப்படியா சுரக்கும் எண்ணெய்ப் பசை குறையும். சருமம் வறண்டு போகும் பிரச்னையும் சரியாகும். 
10. சிலருக்குப் பனிக்காலத்தில் உடம்பு முழுக்க தோல் உரிந்து அரிப்பெடுக்க ஆரம்பிக்கும். இவங்க குளிச்சு முடிச்சதும் சுத்தமா துடைச்சுட்டு, பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக்கலாம். இப்படி ரெண்டு நாளைக்குத் தொடர்ந்து செய்தால், சருமம் சாஃப்ட் ஆகி, அரிப்பும் எடுக்காது. 
11. தலைமுடி வறண்டுப் போச்சுன்னா, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை லேசா சூடு பண்ணுங்க. அதோடு முட்டையின் மஞ்சள் கருவை மிக்ஸ் பண்ணி, ஐந்து நிமிடம் தலையில் தடவி, வாஷ் பண்ணிடுங்க. கூந்தல் வறண்டும் போகாது, உடைஞ்சும் போகாது. 
பியூட்டி டிப்ஸ்
12. விட்டமின் 'ஈ' அதிகம் இருப்பது, சருமத்துக்குள் சீக்கிரம் ஊடுருவது என செக்கில் ஆட்டின தேங்காய் எண்ணெய் சிறப்பாக செயல்படும் என உலக அளவிலான பியூட்டிஷியன்கள் ஒப்புக்குறாங்க. ஸோ, தேங்காய் எண்ணெய்யைத் தலை முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிடுங்க. தலைக்கு சீயக்காய்த் தூளும், உடம்புக்குப் பச்சைப்பயிறுப் பொடியும் போட்டு குளியுங்க. வாரத்துக்கு ஒரு தடவை இப்படி செஞ்சா, அந்த வாரம் முழுக்க சருமம் சாஃப்ட்டாக இருக்கும்.
13. இந்த சீசனில் முடி உடையறதும் நுனி பிளவு படறதும் சகஜம். இதைக் கட்டுப்படுத்த கண்டிஷனர் யூஷ் பண்ணுங்க. 
14. பாதவெடிப்பு பிரச்னையும் இந்த சீசனில் ஏற்படும். இதுக்கு, 'சாலி சிலிக் ஆசிட்' கலந்த க்ரீம்களை தடவினால், ஒரு வாரத்தில் பாதவெடிப்புகள் சரியாகிடும். 5. பனியில் உதடுகள் வெடிச்சுப்போனால், கிளிசரின், விட்டமின் 'ஈ' ஆயில் அல்லது வெண்ணெய் தடவுங்க. உதடுகள் மெத்துன்னு இருக்கும்.

No comments:

Post a Comment