Friday, February 2, 2018

எண்ணெய் குளியல் அவசியம் thanks to dinamalar.com


சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : பிப் 03, 2018 
Advertisement
சொல்கிறார்கள்

எண்ணெயை நேரடியாக சூடுபடுத்த கூடாது!
எண்ணெய் குளியல் அவசியம் குறித்து கூறும், சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் நிவேதனா: எண்ணெய் குளியல், நம் உடலில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துகிறது. பாரம்பரிய முறையில் இது, 'அப்யங்கா' என, அழைக்கப்படுகிறது. உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும் போது, அது சருமத்துக்குள் ஊடுருவி, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதனால், ரத்த நாளத்தில் அடைப்புகள் உருவாவது தடுக்கப்படும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பை கரைத்து, ஆரோக்கியம் அளிக்கிறது. அழகைப் பராமரிக்க தேங்காய் எண்ணெய்; கபம், வாதம், பித்தத்தை கட்டுக்குள் வைக்க நல்லெண்ணெய்; தசைகள், மூட்டுகளின் வலிமைக்கு, முன்னோர், விளக்கெண்ணெயை பயன்படுத்தி வந்துள்ளனர்.எண்ணெய் குளியலுக்கு உகந்தது, அதிகாலை நேரம். அந்த நேரத்தில் சூரிய ஒளி உடலில் படுவதால், ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், உடலுக்கு வைட்டமின், 'டி' கிடைக்கிறது.எண்ணெயை நேரடியாக சூடுபடுத்தக் கூடாது. ஒரு பாத்திரத்தில், தண்ணீரை சுட வைத்து, எண்ணெய் பாத்திரத்தை அதில் வைத்து சூடு செய்யலாம். எண்ணெய் தேய்த்து, 45 நிமிடம் முதல், ஒரு மணி நேரத்துக்குள் குளித்து விட வேண்டும்.எண்ணெய் குளியலுக்கு, மிதமான சூட்டில் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் சேர்ந்த ஷாம்பு மற்றும் சோப்புகளை தவிர்த்து, இயற்கையான அரப்பு, சீயக்காய், கடலை மாவு, பயத்த மாவு பயன்படுத்தி குளிக்கலாம். எண்ணெய் குளியலின் பின், பசி எடுக்கும். ஆனால், எளிதில் ஜீரணமாகும் உணவுகளை அளவாக சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடக் கூடாது; பால், மோர், தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்; அன்று தாம்பத்தியமும் கூடாது. எண்ணெய் குளியலுக்கு வழியாக கிடைத்த பிராண சக்தியை, உடல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணெய் குளியல், ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது; உடல் தசை மற்றும் எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது; விந்தணுக்களின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது; குழந்தையின்மை பிரச்னைக்கான வாய்ப்புகளை குறைக்கிறது; மன அழுத்தத்தையும் நீக்குகிறது.வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் என்பதை வழக்கமாக்கி கொள்ளலாம். எண்ணெய் குளியலின் போது, பாதத்தில் இருந்து நீர் ஊற்றி குளிக்க வேண்டும். காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள், நோய்வாய் பட்டவர்கள், அடிபட்டு, உள் காயம் பட்டவர்கள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், நாள்பட்ட நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடலில் வலி இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்றே, எண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment