Saturday, January 28, 2017

சிறுநீரகக் கல்... ஏன், எதற்கு, எப்படி? நலம் நல்லது-45 #DailyHealthDose thanks vikatan.com

சிறுநீரகக் கல்... ஏன், எதற்கு, எப்படி? நலம் நல்லது-45 #DailyHealthDose

‘சிறுநீரகக் கல்’, `கல்லடைப்பு’ என்பது இன்று சர்வ சாதாரணமாக பலருக்கும் வரும் பிரச்னை ஆகிவிட்டது. `நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம். இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கல் குறித்த வரலாற்றுச் செய்திகளே சான்று! 
சிறுநீரகக் கல்
`கலங்கியதோர் தண்ணீர்தான் குடித்த பேர்க்கும் 
வாட்டமாய் வரம்பு தப்பித் திரிந்த பேர்க்கும் 
வந்து சேரும் கல்லடைப்பு’
 
- என்று பாடினார் யூகி முனிவர். `நான் சிறுநீரகக் கல்லுக்கு அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன்; மருத்துவம் செய்யவே பரிந்துரைப்பேன்’ என்றார் ஹிப்போக்ரட்டஸ். ஆக, நீண்டகாலமாக சிறுநீரகக் கல் என்ற பெருங்கல்லை மனிதன் சுமந்துகொண்டு வந்திருக்கிறான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 
மாசில்லாத, சுடவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடித்தபோது அதிகம் வராத சிறுநீரகக் கல்லடைப்பு பிரச்னை, இப்போது பிளாஸ்டிக் குடுவையில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து, பல தர நிர்ணயக் கட்டுப்பாட்டுடன் தருவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தண்ணீரை அருந்தும் காலத்தில் அதிகரித்துவருகிறது. பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளிலும், துரித உணவிலும், புதுப்புது பன்னாட்டு உணவிலும், பாட்டியின் ஊறுகாய் உணவிலும் எக்கச்சக்கமாகச் சேர்க்கப்படும் உப்புதான் சிறுநீரகக் கல் உருவாகப் பிரதான காரணம். 
சிறுநீரக கல்
இது போதாதென்று, காலையில் வீட்டில் ஒரு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர், மதியம் அலுவலகத்தில் வேறு ஒரு கம்பெனியின் வேறு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர்... இப்படி ஒரே தண்ணீரே பல அவதாரங்களில் நம் உடம்புக்குள் செல்ல, அதற்குப் பரிச்சயம் இல்லாமல் விழிக்கின்றன நம் உடலின் மரபணுக்கள். 
`சுத்தமான தண்ணீர், குடிமக்களின் அடிப்படை உரிமை’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால், அது பாட்டிலில் அடைக்கப்பட்டு விலைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது; குறைந்தபட்சம் அடி பம்ப்பிலோ, தெருமுனைக் குழாயிலோ வர வேண்டும். `குளோபல் வார்மிங்’ எனும் புவி வெப்பமடைதல் பிரச்னை, சுட்டெரிக்கும் கோடை, பனிப் பாறை இளகல், எதிர்பாராத அளவில், எதிர்பாராத இடத்தில் மழை... போன்ற பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்துவது இல்லை. மறைமுகமாக இந்தச் சூழல் இடப்பாடுகள் மனிதனின் சிறுநீரை அதிகரித்தோ அல்லது வற்றவைத்தோ கல் பிரச்னையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. 
நாகரிகம் எனக் கருதியும், அவசரத்துக்கு `ஒதுங்க’ வழியில்லாத வாழ்விடச் சூழலில் சிறுநீரை அடக்கும் பழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது. `சிறுநீர், அடக்கக் கூடாத 14 வேகங்களுள் ஒன்று’ என்கிறது சித்த மருத்துவம். சிறுநீரகக் கல் உருவாவதற்கு, சிறுநீரை அடக்கும் பழக்கமே மிக முக்கியக் காரணம். 
பாதிப்புக்கு ஆளான பெண்
‘கல்லடைப்பு’ என்று மருத்துவர் சொன்னதும் பதறவேண்டியது இல்லை. ‘10 மி.மீ வரையுள்ள கல்லைப் பார்த்து மிரளத் தேவை இல்லை’ என்கிறது இப்போதைய விஞ்ஞானம். வலியைச் சமாளித்து, கல்லைக் கரைக்கும் மருந்தே இதற்குப் போதுமானது. அதே நேரத்தில், `அட... இருந்துட்டுப் போகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லடைப்பு சில நேரங்களில் சிறுநீரகச் செயலிழப்பு வரை கொண்டு சேர்த்துவிடும். 
கல்லைக் கரைக்கும் உணவுகள்...
* இவற்றில் வாழைத்தண்டுக்கே முதல் இடம். 
வாழைத்தண்டு
* சுரைக்காயும் வெள்ளைப் பூசணியும் கற்கள் வராமல் தடுப்பதில் கில்லாடிகள். 
* வெள்ளரி, வாழைத்தண்டு போட்ட பச்சடியும், பார்லி கஞ்சியும் கற்காலத்தின் பொற்கால உணவுகள். 
* பொங்கல் போன்ற விசேஷ நாட்களில், வீட்டு வாசலில் நாம் கட்டும் கண்ணுப்பீளைச் செடி, காலைக் குத்தும் நெருஞ்சி முள் போட்டு, தேநீர் அருந்தினால் கற்கள் கரைந்து வெளியேறும். 
சிறுநீரகக் கல் இருக்கிறது என்பதற்காக, கால்சியம் தவிர்க்க, பால், மோர்... என சுண்ணாம்பு படிந்த சுவர்ப் பக்கமே போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு செய்தி... மிகக் குறைவான கால்சியம்கூட கண்டிப்பாகக் கல்லை வரவழைக்கும். அதிகபட்ச கால்சியம்தான் கூடாதே தவிர, அளவான கால்சியம் கல் நோய் தீர அவசியம். 
சிறுநீரகக் கல் போன்ற நோயில் இருந்து விடுபட மருந்து, மாத்திரைகள் மட்டும் போதாது. அன்பு. அரவணைப்பு, இயற்கையின் மீதான அக்கறை அத்தனையும் தேவை.

Posted Date : 07:32 (27/01/2017) Last updated : 07:31 (27/01/2017) குளிர்பானம்... வயிற்றைக் குப்பையாக்கும்! நலம் நல்லது-59 #DailyHealthDose


குளிர்பானம்... வயிற்றைக் குப்பையாக்கும்! நலம் நல்லது-59 #DailyHealthDose

கோடை காலம் நெருங்கிவருகிறது. கோடையை, இப்போதெல்லாம் அன்றில் பறவை வந்து அறிவிப்பது இல்லை; குளிர்பான கம்பெனிகள்தான் கூவிக் கூவி அறிவிக்கின்றன. உண்மையில், இந்த வெப்ப காலத்தில் நமக்குக் கூடுதல் தண்ணீர்தான் அவசியத் தேவையே தவிர, குளிர்பானம் அல்ல. நம் உடலில் இருந்து கழிவாக வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை, நம் ஊரில் களவாடிய தண்ணீரிலேயே கலந்து, அதில் கூடுதல் சர்க்கரை, உப்புடன் கூடுதல் சுவை ஊட்டியாக குடிப்பவர்களுக்குத் தெரியாத, அடிமைப்படுத்தும் ரசாயன ‘வஸ்து’வைக் கலந்து கொடுக்கும் திரவம், இந்தப் புவியையும் நம்மையும் வெப்பப்படுத்துமே தவிர, குளிர்விக்காது. 
குளிர்பானம்
‘வெளியே போ’ என நம் உடல் விரட்டும் வாயுவை, நன்றாக ஏப்பம் வருகிறது என பிரியாணிக்குப் பிறகு குளிர்பானம் அருந்தும் பழக்கம் இருந்துகொண்டே இருக்கும்வரை, நம்மை ஏப்பமிடும் வணிகமும் இருந்துகொண்டேதான் இருக்கும். குளிர்பானம், ஏப்பம் மட்டும் தராது, ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பில் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டில் இருந்து, ‘ஏன்ஜைனா பெக்டாரிஸ்’ (Angina Pectoris) எனும் இதயவலியையும் தரும் என்கிறது உணவு அறிவியல். 
குளிர்பானம் தவிர்க்க என்ன செய்யலாம்?
* உக்கிரமான கோடை காலத்துக்கு என எண்ணெய்க் குளியலுடன் சம்பா அரிசி வகைகளையும் எள்ளையும் உளுந்தையும் சாப்பிடச் சொல்லிப் பரிந்துரைத்தார்கள் நம் முன்னோர். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில், சூழல் மீது நாம் நடத்தும் வன்முறைகளால், புவியின் வெப்பம் மேலும் மேலும் உயர்ந்துவருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் `மாலத் தீவுகளைக் காணோம்; நியூசிலாந்தைக் காணோம் என்று சொல்லும் நிலை வரலாம்’ என எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் பூமியையும் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது. 
* பதநீர், இளநீர், மோர், நன்னாரி பானங்கள் ஆகியவையே நமக்கான கோடைக் கேடயங்கள். உடல் சோர்வு உடனடியாகத் தீர பானகமோ, கருப்புச் சாறோ போதும். நீர்த்துவம் உடலில் குறைந்து சிறுநீர்ச் சுருக்கு ஏற்படுவதற்கு, லேசான அமிலத் தன்மையுடன் உடலைக் குளிர்விக்கும் புளியைக் கரைத்து பனைவெல்லம் கலந்து உருவாக்கப்படும் பானகம் அருமருந்து. 
பாட்டில் பானங்கள்
* கோடைக்கு புரோபயாட்டிக்காக இருந்து குடல் காக்கும் மோரும், சிறுநீரகப் பாதைத் தொற்று நீக்கும் வெங்காயமும், இரும்பு, கால்சியம் நிறைந்து உடலை உறுதியாக்கும் கம்பங்கூழும் போதும்... எத்தனை உக்கிரமான அக்னி நட்சத்திரத்தையும் சமாளித்துவிடலாம். இந்தப் பொருட்கள், வெம்மையால் வரும் அம்மை நோயையும் தடுக்கும். 
* கோடை காலத்தில் அம்மை, வாந்தி, பேதி, காமாலை, சிறுநீரகக் கல், கண்கட்டி, வேனல் கட்டிகள், வேர்க்குரு... போன்ற வெப்பத்துக்கான பிரதிநிதிகள் விருந்தாளிகளாக வந்து போகலாம். இருந்தாலும், குளியல் முதல் தூக்கம் வரை நாம் க்டைப்பிடிக்கும் சிற்சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் சமாளிக்க முடியும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளியல், மீதி நாள் தலைக்குக் குளியல். எள்ளுத் துவையலுடன், தொலி உளுந்து (முழு உளுந்து) சாதம், கம்பங்கூழ் - சிறிய வெங்காயத்துடன் வாழைத்தண்டு, மோர் பச்சடி, வெள்ளைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங் களி, வெந்தயக் களி, முழு உளுந்து போட்டு ஆட்டிய மாவில் தோசை... எனச் சாப்பிடுங்கள். 
* தர்பூசணிச் சாற்றுடன் மாதுளைச் சாறு கலந்து அருந்தி தாகம் தணிக்கலாம். மோருக்கும் இளநீருக்கும் இணையான கனிமமும் வைட்டமினும் கலந்த பானங்கள் செயற்கையில் கிடைக்காது; அதாவது, குளிர்பானம் அந்த அருமை இல்லாதது. 
* உறங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுங்கள். அக்குள் போன்ற உடலின் மடிப்புப் பிரதேசங்களில் படர்ந்திருக்கும் வியர்வைப் படிமத்தை அழுக்குப் போக தேய்த்துக் குளியுங்கள். 
குளிர்பானம்
பருவத்தை ஒட்டி வாழச் சொன்னது நம் பாரம்பர்யம். பொருளை ஒட்டி வாழச் சொல்வது நவீனம். உணவில் அரை டீஸ்பூன் காரம் அதிகமாகிவிட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிறோம்? ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்களை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும் கொட்டிவிட்டு, உடல் சூடு தணிக்க, `குற்றாலத்துக்குப் போறேன்; குன்னூருக்குப் போறேன்’ என உல்லாச உலா செல்வது நியாயமா? அங்கேயும் போய் வயிற்றைக் குப்பையாக்க, குளிர்பானம் அருந்துவது தகுமா? 
புவி மீதான நம் அக்கறை அதிகரிக்காவிட்டால், நாம் எதிர்பார்க்காத வேகத்தில் அந்த மலை வாசஸ்தலங்களும் மரணித்துவிடும். அதனால், கோடை காலத்தில் கேட்டு வாங்கிப் பருகுவோம் நீர் மோரையும் பானகத்தையும்! குளிர்பானம்..? கோடைக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் அது நமக்கு வேண்டாம். ‘ஆளை விடுறா சாமி...’ என்று அதைத் தலைதெறிக்க ஓடவைப்போம்!

Thursday, January 26, 2017

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள் - Thanks to VIKATAN - Posted Date : 2017/01/25

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்!

மீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எத்தனையோ கதவுகளைத் திறந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, இளைஞர்கள் மத்தியில் கோலா பானங்களின் மேல் ஏற்பட்டிருக்கும் அசூயை. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தாகத்தைத் தணிக்கவும் உடலைக் குளுமைப்படுத்தவும் நம்மூர் பாரம்பர்ய ஆரோக்கிய பானங்கள் பல இருக்கின்றன. அவற்றை அன்றாடம் பருகினால் ஏற்படும் நன்மைகள் பல. பாரம்பர்ய பானங்களில் முக்கிய இடம் வகிப்பது பானகரம். கோயில் திருவிழாக்களில் கோடை காலத்தில் நீர்மோர், பானகரம் வழங்கும் வழக்கம் நம் மக்களிடையே உண்டு. இவற்றோடு சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் பல சிறந்த பானங்களும் கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சிப்படுத்துகின்றன, சில குளிர்காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கின்றன. இந்தத் தமிழர் பாரம்பர்ய பானங்களை எப்படித் தயாரிப்பது, இவற்றைப் பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போமா?
ஆரோக்கிய பானங்கள்

பானகரம்

பானகரம் அம்மன் கோயில் திருவிழாக்களில் பிரபலம்.
கொடம்புளி போட்டு கொதிக்கவைத்த நீரில் நாட்டு வெல்லம், எலுமிச்சைச் சாறு ஆகியவை கலக்கப்படும்.
சமீபகாலமாக, பானகரத்தில் தரமற்ற ஐஸ் கட்டிகள் கலக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும்.
இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், சிறுநீரக கல் பிரச்னை ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

பதநீர்
ஆரோக்கிய பானங்கள் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது.
நம்மூர் கிராமபுறங்களில் கோடை காலங்களில் உடல் உஷ்ணம் தணிக்க அதிகமாகக் குடிக்கப்படும் இயற்கை பானம் பதநீர்.
பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளன.  
சமீபகாலங்களில் போலி பதநீர் தயாரிப்புப் பெருகிவிட்டது. சுக்ரோஸ் பௌடர், தண்ணீரில் கலக்கப்படுகிறது. இதுபோன்ற பதநீர்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உண்மையான பதநீர் குடிக்கும்போது, துவர்ப்புச் சுவை இருக்கும். குடித்து முடித்ததும், இனிக்கும். சுக்ரோஸ் கலந்த பதநீர் குடிக்கும்போதே இனிப்பு தெரியும்.
தமிழ்நாடு பனைபொருள் கார்ப்பரேஷனில் தரமான பதநீர் விற்கப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும், உடல்  உஷ்ணத்தைத் தவிர்க்க பதநீர் அருந்தலாம்.
கர்ப்பக் காலத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படும். மாத்திரைகளைவிட இயற்கையான பதநீர், தாய்க்கும் சேய்க்கும் சிறந்தது.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள், வயோதிகத்தினால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க பதநீர் அருந்தலாம்.
தமிழர் பானங்கள்

நன்னாரி மணப்பாகு டானிக்

 100 கிராம் நன்னாரியுடன் 400 மி.லி நீர் சேர்த்து கொதிக்கவைத்து  100 மி.லி-யாக வற்ற வைக்கவும் . இந்த நன்னாரி கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து பாகு பதத்துக்குக் காய்ச்சி பத்திரபடுத்தவும்.
இதனை காலை, மாலை இருவேளையும் குடித்துவர, பித்தம் நீங்கும். உடல் உஷ்ணம் குறைந்து, உடல் புத்துணர்ச்சி பெறும்.
பாகு, தமிழர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பிரிசர்வேடிவ். பாகு சேர்ப்பதால், உணவுப் பொருட்களை ஆறு மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.

நீர்மோர்

தமிழர் திருவிழாக்களில் பானகரத்தோடு, நீர்மோர் வழங்கப்படும். தாகம், உடல் உஷ்ணத்தைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பானம் இது.
தயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி, வெண்ணெயை வடிகட்டவும். நீர்மோரில் பச்சைமிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக அரைத்த இஞ்சி, மிளகுத் தூள், கடுகு, புதினா சேர்க்கவும். இதனால் செரிமானம் எளிதாகும்.

காயகல்பம்

பஞ்சகோலம்

கொடிவேலி வேர் (Plumbago), சுக்குப் பொடி, திப்பிலிப் பொடி, திப்பிலி வேர்ப் பொடி, மிளகு வேர்ப் பொடி ஆகியவற்றைத் தலா ஐந்து கிராம் எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, 5-6 சிட்டிகை எடுத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்.
இதை காலை, மாலை பருகி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மை உடையது பஞ்சகோலம். மழைக்காலத்தில் ஏற்படும் சளி தொடர்பான நோய்க்கும் இது சிறந்த மருந்தாகும்.

காயகல்பம்

காலை இஞ்சிச் சாறு, மதியம் சுக்குப் பொடி கலந்த நீர், இரவு கடுக்காய்ப் பொடி கலந்த நீர் குடித்துவந்தால் தீராத நோயெல்லாம் தீரும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த முறைக்கு `காயகல்பம்’ என்று பெயர். இது சுக்குமல்லி காபி போன்ற ஓர் ஆரோக்கிய பானம். இதனைப்  பண்டையத் தமிழர்கள் பருகி வந்துள்ளனர்.   
காலநிலைக்குத் தகுந்தாற்போல், உடல் உஷ்ணத்தை அதிகரித்துக்கொள்வதே காயகல்பத்தின் அடிப்படைப் பண்பு.  இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளதால், இவ்வாறு தொடர்ந்து குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இது போன்ற சத்தான ஆரோக்கிய பானங்கள் பருகுவதை நாமும் வழக்கமாக்கி கொள்வோம்

Wednesday, January 18, 2017

Advertisement

பதிவு செய்த நாள்

15ஜன
2017 
00:00
எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து விடுவார்.
என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, நலம் விசாரிக்கும் போதெல்லாம், 'இப்ப பரவாயில்லை... நல்லா தூங்குறேன்; ஒழுங்கா சாப்பிடுறேன்...' என்று, பதில் சொல்வார்.
பொதுவாகவே, நமக்கு மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற உணர்வுக்கு இணையாக, மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் எண்ணமும், அதிகம் உள்ளது.
நம் சுண்டு விரலில் உள்ள, சிறு பிளாஸ்திரியை பற்றி கூட, பார்க்கிற அத்தனை பேரும் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நமக்குள் இருக்கிறது.
சந்தித்து, சிறிது நேரம் ஆகியும், அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கண்களில் படும்படியாக, சுண்டு விரலை காட்டி, அவர்களது கவனத்தை ஈர்க்கும், தவறான போக்கும் சிலரிடம் உள்ளது.
உடல் நல குறைவு என்றதும், நேரில் வந்தோ, தொலைபேசியிலாவதோ விசாரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு.
அது மட்டுமல்ல, அவ்வாறு விசாரிப்பவர்கள் தான் நம் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள்; மற்றவர்கள், அக்கறையற்றவர்கள் என்கிற முடிவிற்கு வந்து, விசாரிக்காதவர்களை கறுப்பு பட்டியலில் தள்ளுகிற மனநிலையும், பலருக்கு உண்டு!
'என் வியாதி பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும்; அதுபற்றி, அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்...' என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதல்லவா, இது, அடிப்படையில் தவறானது.
நம் துன்பம் கண்டு, பிறர் துன்புற வேண்டும் என்கிற எண்ணமே, வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டமாகும்.
ஒரு சினிமா பாடல் வரி இது...'எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது, என் அழுகை நின்றது...' இதுவன்றோ, ஆரோக்கிய மன நிலை! முடிந்த வரை, மற்றவர்களுடன், இனிய, மகிழ்ச்சியான செய்திகளை, பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, நம் வியாதியைப் பற்றி பேசி, பிறரை துன்புறுத்தக் கூடாது.
'கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு...' என்று, ஒருவர் பதறினால், 'அது ஒண்ணுமில்லை, சின்ன விபத்து; அது கிடக்குது விடுங்க. உங்க பையன் வேலை என்னாச்சு...' என்று, விஷயத்தை திசை திருப்ப வேண்டும்.
'சே... எவ்வளவு வலி, வேதனையிலும், நம் பிரச்னை பற்றி, அக்கறைபடுகிறாரே...' என்று, அவர்கள் உள்ளுக்குள் நெகிழ வேண்டும்.
'நான், என்ன தவறு செய்தேனோ, இப்படியொரு வியாதியில் மாட்டி கொண்டேன்; இது, மற்றவர்களுக்கு வரக் கூடாது. நான், இந்த மருத்துவமனையில் போய் மாட்டி கொண்டேனே... இப்படி அநியாயமாய், 'பில்' தீட்டி விட்டனரே...' என்கிற கோணத்தில், வியாதி புராணம் பாடலாம்; தவறில்லை. 
மாறாக, கேட்கிறவர்களிடம் எல்லாம், அப்போது தான், முதல் முறை சொல்வது போல், நூற்றி ஓராவது முறையும், புராணம் பாட வேண்டியதில்லை.
வியாதி பற்றியே பேசும் வியாதிக்கு, நிவாரணம் சொல்லி விட்டேன்; ஜீரணித்து ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

Thursday, January 12, 2017

thanks to Nakeeran

 ண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும்; ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் தேதியை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை "மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனி பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை- தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர். அன்றைய தினம் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில்  அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே' என்பதை வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மா வைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந் தராதித்யே ஹிரண்மய புருஷ' எனப் புகழ்கிறது.

உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் சூரியன் அருட்கடல் என்பதை வேதம், "ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்' என்றும்; இதய நோயை நீக்குபவர் என்பதை "ஹ்ருத்ரோகம் மம சூர்ய ஹரிமாணம் ச நாசய' என்றும் குறிப்பிடுகிறது. இவரே மழை பெய்யக் காரணம் என்பதை வேதத்தில் "யாபி ராதித்யஸத்பதி ரஸ்மிபிஸ் தாபி:' எனக் கூறுப்படுகிறது. இதையே கீதாசார்ய னும், "ஆதித்யஜாஜாயதே வ்ருஷ்டி' என்று கூறுகிறார்.

இத்தகைய சிறப்புமிக்க சூரிய பகவானைப் போற்றும் சூரிய நமஸ்கார மந்திரங்கள் யஜுர் வேதத்தில் 32 அனுவாகங்களாக உள்ளன. ரிக்வேதம் இவரைப் பற்றி "மஹா ஸௌரம்' என்ற ஒரு துதியை வெளியிடுகிறது. சாமவேதம் சூரியனை "சுக்ரியம்' என்ற ஒப்பற்ற துதியால் போற்றுகிறது.
சூரிய தேவனது பெருமையைக் கூறும் "அசதி உபநிஷத்' என்ற உபநிடதத்தை ஜெபிப்பவர்கட்கு கண்நோய் ஏற்படாது என்றும்; இந்த கிரந்தத்தை ஜெபம் செய்வதால் எத்தகைய பயங்கரமான நோய் ஏற்பட்டிருந் தாலும் அதைப் போக்கிவிடலாம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாண்டவர்கள் விராட நகரத்தில் அஞ்ஞாத வாசம் செய்தபோது, கீசகனால் துன்புறுத்தப்பட்ட திரௌபதி சூரியனை வேண்டி தன்னைக் காப்பாற்றுமாறு துதித்தாள். அப்போது சூரியன் தனது தூதனை அனுப்பி கீசகனை விரட்டியதாக பாரதம் கூறுகிறது. மேலும் மகாபாரதத்தில் சூரியனுக்கு சித்திரை முதலான மாதங்களிலும் பன்னிரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. அவையாவன: மித்ரன், ரவி, சூரியன், பானு, சுகன், பூஷ்ணன், ஹிரண்ய கர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன் என்பதாகும்.

பெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் வைதவ் யம் (விதவைக் கோலம்) அடைய மாட்டார்கள் என்று கூறுகிறது. விதவைப் பெண்களை கஷ்டங் களினின்று காப்பவன் என்று சூரிய சஹஸ்ரநாமம் போற்றுகிறது.

சூரிய பகவானது கருணையை விளக்க சௌர புராணத்தில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஒரு காட்டில் தன் மனைவி, மக்களுடன் ஏழை ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள் அவனுக்கு காட்டில் எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை. அன்று மாலை வரை தண்ணீர்கூட அருந்தாத அம்மனிதன் சூரியனை நோக்கி தற்செயலாகத் தன் குறையைக் கூறி புலம்பிவிட்டு தரையில் மயங்கி வீழ்ந்தான். இரவு முழுவதும் அவ்விதம் மயக்கத்தில் கிடந்தான். கண் விழித்து பார்த்தபோது அவ்வழியே வந்த அரசன் ஒருவனது பாதுகாப்பில் இருப்பதைக் கண்டான். 



தற்செயலாக இம்மனிதனைப் பார்த்த அரசன் அவனைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி,  அவனது ஏழ்மை நிலை பற்றி அறிந்ததும் 

அவனைப் பெரும் செல்வந்தனாகவும் ஆக்கிவிட்டான். இவையனைத்துக்கும் காரணம் அம்மனிதன் அன்ன ஆகாரமின்றி இருந்த தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகும். எனவே பானுவார விரதம் இருந்து சூரியனை வழிபட்டதால் இப்பேறு கிடைத்தது என்று சௌரபுராணம் கூறுகிறது. 

மேலும் ராமாயணத்தில் வரும் சுக்ரீவன்  என்ற வானரனும், பாரதத்தில் வரும் கர்ணனும் சூரிய புத்திரர்கள் ஆவார்கள். வாலகில்யர்கள் எனப்படும் 60,000 முனிவர்கள் சூரியனது சீடர்கள் ஆவர். இவர்கள் மிகச்சிறிய வடிவம் உடையவர்கள். தண்டி, பிங்களன் என்பவர்கள் இவரது முக்கிய ஏவலர்களாகும். 

சூரிய பகவானை சிவாகமங்களும், அபிதான சிந்தாமணி, சூரிய உபநிஷத் போன்ற நூல்களும், ஜோதிட நூல்களும் புகழ்கின்றன. சூரியன் இல்லையேல் இவ்வுலகில் ஒளியும் உயிரினங் களும் இல்லை என்பதை மகாநாராயண உபநிஷத், "க்ருணி ஸூர்ய ஆதித்யோ ப்ரபாவாத்யக்ஷரம்' என்று கூறுகிறது.

சூரியனை மேல்நாட்டார் அப்பல்லோ என்கின்றனர். இவருக்கு உரிய சமித்து எருக்கு ஆகும். சீர்காழிக்கருகில் உள்ள திருவெண்காட் டில் சிலப்பதிகாரம் புகழும் சூரியகுண்டம் உள்ளது. திருக்கண்டியூரில் மாசி மாதமும்; திருவேதிக்குடி, திருநாவலூரில் பங்குனி மாதமும்; சித்திரை மாதம் குடந்தைக் காரோணம் என்று புகழப்படும் நாகேசுவரன் கோவிலிலும் சூரிய பூஜை சிறப்பாக நடக்கிறது. அன்று கதிரவன் இத்தலங்களில் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

தை மாதம் முதல் தேதியான மகர சங்கராந்தி தினத்தன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்பட்டு தீர்த்தம் கொடுக்கிறார்கள் பூஜை செய்வோர். மன்னார்குடி என்ற வைணவத் தலத்தில் சங்கராந்தி முதல் "ஸங்க்ரமண உத்ஸவம்' சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. மகர சங்கராந்தியன்றுதான் மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்தது. சபரிமலையில் ஐயப்பனுக்குக்குரிய "மகரஜோதி தரிசனம்' காண்பதும் இந்த புண்ணிய தினத் தன்றேயாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்ராயண புண்ணிய காலத்தில் இறக்கும் ஜீவன்கள் நற்கதி அடைவதாகக் கூறப்படுகிறது. உத்தராயணத்தில் இறந்த உயிர்கள் முக்தி பெறுவதைப் பற்றி விவரிக்கும் பகவத்கீதை (அக்னிர் ஜோதிர் அஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்' என்று கூறுகிறது. மகாபாரதமும் மிகச்சிறந்த யோகியான பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலம் வந்தபின்பே தன் உயிரை விட்டார் என்றும் சிறப்பாக விவரிக்கிறது. 

இத்தகைய பவித்ரமான உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் மகர சங்கராந்தி தினத்தன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து, கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாக!

நன்றி திருவிழா! thanks to Dinamalar



ஒரு ஆண்டை, உத்ராயணம், தட்சிணாயணம் என பிரிப்பர். "உத்ரம்' என்றால் வடக்கு. சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் காலம் இது. "தட்சிணம்' என்றால் தெற்கு. தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து காட்சி தருகிறார். சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் காலம் இது.
உத்ராயணமும், தட்சிணாயணமும் இணைந்த 12 மாத காலம், தேவர்களுக்கு ஒருநாள். இதில், உத்ராயணம் பகல் பொழுது; தட்சிணாயணம் இரவுப்பொழுது. வடக்கு நோக்கி சூரியன் பயணிக்கும் உத்ராயண காலம் தை மாதம் துவங்கும். இந்த மாதத்தில் தேவர்கள் விழித்துக் கொள்வர் என்பது ஐதீகம். நாம் கொடுக்கும் யாக பலனை (அவிர்பாகம்) ஏற்று, நமக்கு பாதுகாப்பு தருவர். இக்காலத்தில் வரும் தை அமாவாசை முக்கியமானது.
தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரை தேவர்கள் உறங்கும் வேளை. தேவர்கள் உறங்குவதால், நம் முன்னோர் பிதுர்லோகத்தில் இருந்து இறங்கி வந்து நம்மைப் பாதுகாப்பர். அவர்களை வரவேற்கும் நன்னாளே ஆடி அமாவாசை.
நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு வரும், இந்நாளில் தர்ப்பணம் செய்து, முன்னோரை வரவேற்க வேண்டும். ஏனெனில், அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில், நமக்காக செய்த தியாகங்கள் பல. தாயும், தந்தையும் காலமாகி விட்டால் நம் மனம் வேதனைப்படுகிறது. அவர்கள் நமக்காக பட்ட கஷ்டங்களை எண்ணி கண்ணீர் வடிக்கின்றோம். படிப்பு, திருமணம், பிற்கால வாழ்வுக்கான சொத்து சேர்த்தல் என, ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் நமக்காகவே செலவழித்தனர்.
இதே போல, தாத்தா, பாட்டி நம் சிறுவயதில், அருகில் படுக்க வைத்து, குட்டி குட்டி கதைகளைச் சொல்லி நம் அறிவு மேம்பாட்டுக்கு உதவி, நம் மனதில் ஆன்மிக விதையை விதைத்தனர். அது மட்டுமல்ல... நம் முப்பாட்டனார் மற்றும் பாட்டி காலத்து உலக நடப்பைச் சொல்லி, அந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்க மாட்டோமா என, ஏங்க வைத்தனர். அக்கால சமுதாய அமைப்பு பற்றி நமக்கு புரிய வைத்தனர்.
இறந்து போன நம் முன்னோர்களை இந்நாளில் நினைவு கொள்வதன் மூலம், அவர்கள் நம்மோடு வாழ்ந்த அந்த இனிய நாட்களை அசைபோட வைக்கின்றனர்.
இவர்களுக்காக நாம் செய்யப்போவது... ஒரு பிடி எள், தண்ணீர் எடுத்து தர்ப்பணம் செய்தால் போதும். அவர்கள் உள்ளம் குளிர்ந்து போவர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நம் வசம் இருந்தால், அவற்றை அந்நாளில் எடுத்து பூஜை செய்யலாம். அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளைப் படைத்து, அவர்களை ஒத்த வயதினருக்கு கொடுத்தால், அவர்களே நேரில் பெற்றுச் செல்வதாக ஐதீகம்.
ராமபிரான் வழிபட்ட பிதுர்லிங்கங் களைக் கொண்ட முக்தீஸ்வரர் கோவில், திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டம் கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் உள்ளது. இங்குள்ள அரசலாற்றில் தர்ப்பணம் செய்வது மிகவும் <சிறந்தது. அமாவாசை மட்டுமின்றி, பிற நாட்களிலும் இங்கு தர்ப்பணம் செய்யலாம்.
ஆடி அமாவாசை நன்னாளை, ஒரு நன்றி கூறும் விழாவாக எண்ணி, நம் முன்னோருக்கு அஞ்சலி செய்வோம்

Friday, January 6, 2017

(06/01/2017) வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி! நலம் நல்லது-44 #DailyHealthDose thanks to vikatan.com

வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி! நலம் நல்லது-44 #DailyHealthDose

`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். 
வாதம் பித்தம் கபம்
`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான் 
`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
 
- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார். 
வாதம், பித்தம், கபம் 
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும். 
பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும். 
கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.
கீரை
தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!
* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும். 
* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும். 
மிளகு
* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. 
* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். 
எலுமிச்சை
சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது. 
வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும். 

Last updated : 20:18 (06/01/2017) அதிகாலை படித்தால் என்னவெல்லாம் பலன்? thanks to vikatan.com

அதிகாலை படித்தால் என்னவெல்லாம் பலன்?!

அதிகாலையில் பாடம் படிக்கும் குழந்தைகள்
''திகாலை என்பது, குழந்தைகள் படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம். அந்நேரம் படிப்பதால் பாடங்களை எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்'' எனக் கூறும் கிராமியக் கலை பயிற்சியாளரான மாதேஸ்வரன், அதற்கான காரணங்களை விளக்குகிறார்.

''பள்ளி, ட்யூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் என காலையில் இருந்து அடுத்தடுத்த கல்வி நேரத்தை கடந்துவந்து சோர்வான, இறுக்கமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சரியாக படிக்க முடியாது. அதனால் மாலை நேரங்களில் எழுத்து வேலைகள் இருந்தால் அப்போது அதனை குழந்தைகளைச் செய்யவைக்கலாம். பின்னர், அவர்களின் உடம்புக்கு ஓய்வு தேவைப்படும். அதுதான், உயர்ந்த தியான நிலையான தூக்கம்.

தூங்கி எழுந்ததும், குழந்தைகளின் மனமும் உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் முழுமையான, புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும். முந்தைய நாள் பிரச்னைகள், கவலைகள் மறந்துபோயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும் அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். நினைவில் நிற்கும்.

இரவில் குழந்தைகள் விரைவாக தூங்கச் செல்லும்போது, காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவார்கள். அப்படி எழுந்து காலையில் 5 - 7.30 மணி வரை அவர்கள் படிப்பது மிகுந்த பலன் தரும். அப்படிப் படிக்கும்போது அறைக்குள், வீட்டுக்குள் முடங்கிப் படிப்பதைவிட, கிராமப்புற மாணவர்கள் வீட்டுத் திண்ணையிலும், நகர்ப்புற மாணவர்கள் பால்கனி, மொட்டைமாடியிலும் என, வெளிக்காற்று ஸ்பரிசம் பெற்றுக்கொண்டே படிக்கும்போது கிடைக்கும் புத்துணர்வு, பாடங்களை விரைவில் மனனம் செய்யவைக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                            படிக்கும் சிறுவன்

‘அறிவுக்கு மேற்கு, வெளிச்சத்துக்கு கிழக்கு, பயணத்துக்கு வடக்கு, முடிவுக்கு தெற்கு’ எனச் சொல்வார்கள். அதன்படி பார்க்கும்போது, மேற்கு திசை நோக்கி அமர்ந்து படிப்பது, நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். கவனச்சிதறல் இன்றி படிக்க முடியும். இன்றைக்கும் கிராமப்புறப் பகுதி பாடசாலைகளில் ஆசிரியர் கிழக்கு நோக்கி அமர்ந்தும், மாணவர்கள் மேற்கு நோக்கி அமர்ந்தும்தான் படிப்பார்கள்'' என்கிறார்  மாதேஸ்வரன்.

''10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 8 - 10 மணிநேரம் தூங்க வேண்டும். அவர்கள் அதிகாலை 5.30 - 6 மணிபோல எழுந்து, அதன் பின்னர் படிப்பதே சிறந்தது. 10 டாக்டர் கோபாலகிருஷ்ணன்வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 4.30 - 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் எழுந்து படிக்கலாம்'' எனக் கூறும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், காலை நேரம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார்.

''அதிகாலை நேரம் இரைச்சல், ஆள் நடமாட்டம் என எந்தவித வெளிப்புற தொந்தரவும் இன்றி  சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும். குழந்தைகளுக்கு முந்தைய நாள் நினைவுகள் மறந்து, உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் வேலைகளைத் தொடங்கும். மூளை வேகமாக இயங்கும். மேலும் அதிகாலை நேரம் ஆக்ஸிடோசின் (Oxytocin), சிரோடோனின் (Serotonin), டோபமைன் (Dopamine) உள்ளிட்ட பயனுள்ள ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்வதுடன், நல்ல மன அமைதியையும், நல்ல நினைவாற்றலையும் கொடுக்கும். அதனால் அதிகாலை நேரம் படிப்பதால், மிகுந்த பலன் கிடைக்கும். 

அதிகாலை நேரம் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, ஜுஸ், பால், சத்துமாவு கஞ்சி என ஏதாவது ஒரு திரவ உணவு சாப்பிட்டுவிட்டு படிக்க அமரலாம்'' என்றார் டாக்டர். 

Thursday, January 5, 2017

மகரிஷிகளின் வாக்கு-20170113 - ஏகாதசி விரதம் - நன்றி: குமுதம் ஜோதிடம்


ஸ்ரீமன் நாராயணீயம் - Sriman Narayaneeyam (Dasakam 8, Sloka 13) is a Very powerful sloka that has been recommended by Sankaracharya for curing cancer.

This sloka from Narayaneeyam (Dasakam 8, Sloka 13) is a Very powerful sloka that has been recommended by Sankaracharya for curing cancer.

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥

Asmin paraathman nanu paadmakalpe
Thvamithamutthaapitha padmayonihi I
Anantha bhoomaa mama roga raashim,
Nirundhi vaathaalaya vaasa vishno. II

அஸ்மின் பராத்மன் நனு பாத்3மகல்பே
த்வமித2முத்தா2பித பத்3மயோநி: |
அனந்த பூ4மா மம ரோக3 ராஶிம்
நிருந்தி4 வாதாலய வாஸ விஷ்ணோ ||




கோபம் என்ற பிசாசு! thanks to varamalar

கோபம் என்ற பிசாசு!

Advertisement


எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01ஜன
2017 
00:00

ஒரு சமயம், கண்ணன், பலராமன் மற்றும் யாதவ குல வழி தோன்றலான சாத்யகி ஆகிய மூவரும் குதிரையில் ஏறி, பயணம் புறப்பட்டனர். இருள் சூழும் நேரத்தில் அடர்ந்திருந்த காட்டுப் பகுதியை அடைந்தவர்கள், 'இருட்டும் நேரத்தில் இதற்கு மேல் பயணம் செய்ய வேண்டாம்...' என, நினைத்து, அக்காட்டிலேயே தங்க தீர்மானித்தனர்.
குதிரைகளின் சேணங்களை அவிழ்த்து, அவைகளை அங்கிருந்த மரங்களில் கட்டி முடிப்பதற்குள், இரவின் முதல் யாமம் கடந்து விட்டது. அதனால், மூன்று யாமங்கள் தூங்கி, விடியற்காலையில் புறப்படலாம் என, முடிவு செய்தனர். பின், 'தூங்கும் போது குதிரைகளை யாராவது திருடி விட்டால் என்ன செய்வது...' என நினைத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு யாமம் காவல் காப்பதென்றும், அந்நேரத்தில், மற்ற இருவரும் தூங்குவதென்றும் முடிவு செய்தனர்.
முதலில், சாத்யகி காவல் காக்க, மற்ற இருவரும் தூங்கினர். சிறிது நேரத்தில் பெரும் பிசாசு ஒன்று தோன்றி, 'தூங்கும் இருவரையும், தின்னப் போகிறேன்; அதற்கு நீ அனுமதித்தால், உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்...' என்றது!
சாத்யகி பயப்படாமல், 'பிசாசே... வாயை மூடி, பேசாமல் போய்விடு; இல்லை என்றால், உன் கதையை முடித்து விடுவேன்...' என்று மிரட்டினார்.
'என் ஒரு பிடிக்கு தாங்க மாட்டாய்... என்னை மிரட்டுகிறாயா...' என்றபடி, சாத்யகி மீது பாய்ந்தது, பிசாசு.
உடனே, சாத்யகிக்கு கடுமையான கோபம் வர, பிசாசுடன் கட்டிப் புரண்டார். சாத்யகியின் கோபம் அதிகரிக்க அதிகரிக்க, பிசாசின் பலம் கூடிக் கொண்டே போனது. இதனால், சாத்யகியின் உடலெங்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன. அடுத்த யாமம் நெருங்கும் நேரம், பிசாசு, 'பளிச்' சென்று மறைந்தது.
பலராமரை எழுப்பி, தூங்கப் போனார் சாத்யகி. சற்று நேரத்தில், மறுபடியும் பிசாசு வந்தது. சாத்யகியை போலவே, பலராமரும், பிசாசுடன் சண்டை போட்டார். பலராமருக்கு கோபம் அதிகரிக்க, பிசாசுக்கு பலம் கூட, பலராமருக்கு உடலெங்கும் காயம்.
இந்நிலையில், அடுத்த யாமம் நெருங்க, பிசாசு மறைந்தது. பலராமர் கண்ணனை எழுப்பி, காவலுக்கு அனுபினார். கண்ணன் காவல் காத்த போது, வழக்கம் போல் பிசாசு வந்தது.
'நீயாவது நான் சொல்வதைக் கேள்; இவர்கள் இருவரையும் எனக்கு உணவாக விட்டு விட்டு, ஓடிப் போய் விடு...' என்றது!
கோபிக்கவில்லை, கண்ணன். மாறாக, 'நல்லவேளை... நீ வந்தாய். தனியா அமர்ந்திருக்கிறோமே என நினைத்தேன். இப்போது உன்னுடன் சண்டை போடுவதன் மூலம் பொழுதும் கழியும்; சோம்பலும் இருக்காது...' என்று கூறி சிரித்தார்.
கோபத்துடன் கண்ணன் மீது பாய்ந்தது, பிசாசு. அது, கோபத்தோடு எகிற எகிற, கண்ணன் சிரித்தபடியே, 'ஆகா... நீ எவ்வளவு பெரிய வீரன்; என்ன அருமையாக சண்டையிடுகிறாய்...' என்று சொல்லச் சொல்ல, பிசாசின் வடிவமும், பலமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சிறு புழு போன்று ஆகிவிட்டது.
அதை, துணியின் ஓரத்தில் முடிந்து வைத்தார், கண்ணன். பொழுது விடிந்ததும், சாத்யகியும், பலராமரும் இரவில் பிசாசுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை சொல்லி, உடலில் ஏற்பட்ட காயங்களை காட்டினர். அப்போது, தான் துணியில் முடிந்து வைத்திருந்த சிறு புழுவை எடுத்து வெளியில் விட்டு, 'நீங்கள் இரவில் சண்டையிட்டதாக கூறிய பிசாசு இதுதான்; இதன் பெயர்: கோபம். நாம் கோபத்தை காட்டக் காட்ட, இது வளர்ந்து கொண்டே போகும்; கோபப்படாமல் இருந்தால், இதுவும் பலமிழந்து, செயலற்று போய் விடும். நாம் கோபத்தை அடக்கும் போது, எதிராளி பலமிழப்பான்...' என விவரிக்க, சாத்யகியும், பலராமரும், தங்கள் தவறை உணர்ந்தனர்.
இப்புத்தாண்டு முதல் நாமும், நம் கோபத்தை கைவிட்டு, எல்லாரையும் அன்பினால், வசப்படுத்துவோம்!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!
சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன்?
அதிகாலையில், சூரிய நமஸ்காரம் செய்வதால், நம் முட்டிகள் வலுவடைகிறது. மேலும், சூரிய கதிர்களிடமிருந்து கிடைக்கும் விட்டமின், 'டி' நம் தோலுக்கு கிடைப்பதால், தோல் நோய்கள் அண்டுவதில்லை. அத்துடன், சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம், காச நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

Wednesday, January 4, 2017

குரல் முக்கியமா... குரல்வளை ரொம்ப முக்கியம்! நலம் நல்லது-43 #DailyHealthDose thanks vikatan.com

குரல் முக்கியமா... குரல்வளை ரொம்ப முக்கியம்! நலம் நல்லது-43 #DailyHealthDose

பிறந்த கணத்தில் அழுகையில் ஆரம்பித்து, `அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலைகொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, அது பாடலாக உற்சாகமாக வெளிப்படுகிறது. 
குரல்வளை
12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும். 13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆதிக்கம் தொடங்கி, குட்டி மீசை துளிர்க்கும்போது, குரல் உடையத் தொடங்கி வலுப்பெறும். அப்போதுதான் ஆணின் குரல் நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, `ஆடம்ஸ் ஆப்பிள்’ தொண்டையில் தெரியும். பெண்களுக்கு, இந்தக் குரல் நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை. அதனால்தான் 30 வருடங்கள் கழிந்தும் `காற்றில் எந்தன் கீதம்...’ என எஸ்.ஜானகி பாடினால், முந்தைய சிலாகிப்பு அப்படியே தொற்றிக்கொள்கிறது. 
ஆண், 17-18 வயதை எட்டிய பிறகும் கொஞ்சம் பெண்மை கலந்த குரலில் பேசினால், அது `ப்யூபர்போனியா' (Puberphonia) என்னும் கோளாறு என்கிறது நவீன மருத்துவம். குரல் நாண்களை இழுக்கும் அறுவைசிகிச்சையுடன், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஸ்பீச் தெரப்பியும் எடுத்துக்கொண்டால் ஆண் குரல் வந்துவிடும். 
குரல், குரல்வளை பாதுகாக்க வழிமுறைகள்...
* குரல்வளை, வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், தொற்றும் நோய்க்கூட்டம் எளிதாகக் குரலைச் சிதைத்துவிடுகிறது. அதோடு, தொண்டைத்தொற்றுகள் குரல்வளையைப் பாதித்து, அதன் உட்சதையை வீங்கவைத்துவிடும். உணவை விழுங்கும்போது, வலி உண்டாகும். சத்தமாகப் பேசும்போது வலி கூடும். வெந்நீரில் உப்புப்போட்டு, காலை, மாலை வாய் கொப்பளித்து அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்த திரிபலா பொடி போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்கும். கூடவே பாலில் மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு கலந்து சூடாகக் குடித்தால், குரல்வளை அழற்சி மறையும். 
* சிறுவயதிலேயே தொண்டையில் குடியேறும் கிருமி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus). நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது, அந்தக் கிருமிக்கூட்டம் மெதுவாக டான்சில் வீக்கம் (Tonsillitis), அடினாய்டு வீக்கம் (Adenoiditis) என உண்டாக்கி, பின்னர் மூட்டுவலியை உண்டாக்கி, மெள்ள மெள்ள ரத்தத்தில் கலந்து, இதயத்தின் வால்வுகளில் குடியேறி அதன் செயல்திறனை அழிப்பது எனப் பல பிரச்னைகளுக்குக் காரணம் ஆகின்றன. மொத்தத்தில் இந்த நோய் தொடங்குவது குரல்வளையில்தான்.
நள்ளிரவில் ஐஸ்க்ரீம், தொண்டை, கன்னக் கதுப்புகளில் ஒட்டிக்கொள்ளூம் சாக்லேட் போன்றவற்றை மென்று திரியும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதும் வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்தக் கிருமியின் தாக்கத்தைக் குறைக்க, கற்பூரவல்லிச் சாறும் தேனும் கலந்து சுரசம் செய்து கொடுக்கலாம். மிளகைப் பொடித்து, தேனில் குழைத்து, மிதமான வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வாக கடற்சங்கை பஸ்பம் ஆக்கி, மருந்தாகக் கொடுப்பார்கள். இந்த மருந்தை 3-4 சிட்டிகை நெய்யில் கலந்து கொடுக்க, ஆரம்பகட்ட டான்சில் வீக்கத்தை அடியோடு விரட்டலாம். குழந்தைக்குக் கூடுதல் தேவையான கால்சியம் சத்தையும் சேர்த்துத் தந்து, டான்சில் வீக்கத்தையும் வீழ்த்தும் இந்தச் சங்கு பஸ்பம், சிறந்த குரல்வளை காப்பான். 
* டான்சில் வீக்கமா? வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் தடவி, லேசாகச் சூடுபடுத்தி, அந்தச் சூட்டுடன் துணியைப் பிழிந்து, பூண்டுச்சாறு எடுக்க வேண்டும். இதோடு, சுத்தமான தேனை பூண்டுச் சாற்றுடன் சம அளவு கலந்து வைத்துக்கொள்ளவும். சுத்தமான பஞ்சில் இந்தப் பூண்டுத் தேனைத் தொட்டு டான்சில் வீக்கத்தில் மென்மையாகத் தடவிவர, வீக்கம் மெள்ள மெள்ளக் கரையும். குழந்தைகளுக்கு விஷயத்தைப் புரியவைத்து மெதுவாகத் தடவ வேண்டும். இல்லையென்றால், அந்தச் சாற்றை மூன்று சொட்டுகள் விழுங்கச் செய்தால்கூடப் போதும். 
* தொடர் அஜீரணம், இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல் போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ, குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டுக்கும் எளிய மருந்து அதிமதுரம். இது, வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆற்றல்கொண்டது. வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பையும் குறைக்கக்கூடியது. அந்த அமிலம் உண்டாக்கும் வறட்டு இருமலுக்கும், அதிமதுரம் மிகச் சிறந்த கை மருந்து. அரை டீஸ்பூன் அளவு அதிமதுரத்தை தேனில் குழைத்துச் சாப்பிடலாம் அல்லது அரை டம்ளர் பாலில் கலந்து காய்ச்சியும் குடிக்கலாம். 
* குரலை முறையற்றுப் பயன்படுத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல் நாண்களுக்கு ஆபத்து. இப்படிச் செய்வது, குரல் நாண்களில் சிறு சிறு கட்டிகளை உண்டாக்கிவிடும். உரத்தக் குரலில் பேசும் ஆசிரியர்கள், பாடகர், பேச்சாளர்களுக்கு அந்தக் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு முதல் மருந்து மௌனம். மாதத்தில் இரண்டு நாட்கள் மௌன விரதம் இருந்தாலே அந்தக் கட்டிகள் காணாமல் போய்விடும். சரியாகாதபட்சத்தில், ஆடாதொடை இலையும் இரண்டு மிளகும் சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்கள், இரண்டு வேளை சாப்பிட்டால், குரல் நாண்களில் வீக்கம் குறையும். 
* 95 சதவிகிதக் குரல்வளைப் புற்று, புகைப் பழக்கத்தால் மட்டுமே வருகிறது. எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. 
* குரல் வளத்தைப் பாதுகாக்க: எப்போதும் தொண்டையை ஈரமாக வைத்திருங்கள்; ஐஸ்க்ரீமைத் தவிர்ப்பது நலம்; பிராணாயாமப் பயிற்சி மிக அவசியம்; அதிகமாக இனிப்பு, காரம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; பனங்கற்கண்டு, மிளகு, பால் கூட்டணி... குளிர்காலத்திலும் குரலைப் பாதுகாக்கும். 
இயற்கை நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை, சேதாரம் இல்லாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமைதானே!