Friday, July 27, 2018

வெந்நீரில் குளித்தால் உடல் சோர்வடையும் thanks to dinamalar.com

வெந்நீரில் குளித்தால் உடல் சோர்வடையும்!நீர் சிகிச்சை குறித்து கூறும், இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர், யோ.தீபா: நீர் சிகிச்சையில் குளிர்ந்த நீர், சுடுநீர், வெதுவெதுப்பான நீர் போன்றவை பயன்படுத்தப்படும். குளிர்ந்த மற்றும் சூடான நீரால் சிகிச்சை அளிக்கும் போது, நரம்புகள் துாண்டப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான, 'ஹார்மோன்கள்' துாண்டப்படும். இதனால், மன அழுத்தம் விலகுவதுடன், செரிமான சக்தி அதிகரிக்கும்.நீர் சிகிச்சையை சரியான நேரத்தில், சரியான விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். உதாரணமாக, உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன், சாதாரண நீரை அருந்துவதால், வயிற்றில் அமிலம் சுரந்து, நன்றாக பசியெடுக்கும்; எளிதில் உணவு செரிமானமாகும். இதேபோல், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து, வெந்நீர் குடிப்பதால், மிக எளிதாக உணவு செரிமானமாகும்.உடல் பருமனாக உள்ளவர்கள், உணவு உண்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன் வெந்நீர் குடித்தால், அமிலம் சுரப்பது குறைந்துவிடும். அதனால், அதிகமாக உணவு உண்ண முடியாமல் போவதால், சிறப்பாகப் பலனளிக்கும். தினந்தோறும் சராசரியாக 2 - 3 லி., நீர் அருந்த வேண்டும்.காலையில் கண் விழித்ததும், இரண்டு டம்ளர் நீர் அருந்துவது, மூளை சிறப்பாக செயல்படவும், சிந்தனை வளமாக அமையவும் உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், சூடான நீரைக் குடிப்பதால், பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.நீர் சிகிச்சையில் எனிமா, பெருங்குடல் நீர் சிகிச்சை போன்ற உள் சிகிச்சைகளும்; குளியல், ஷவர்பாத், பட்டி போடுதல், ஒத்தடம், ஆவி பிடித்தல் போன்ற வெளி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தசை நார் வீக்கம், தசை இறுகுதல், தசைப்பிடிப்பு, படபடப்பு போன்ற பிரச்னைகளுக்கு வெந்நீரில், 'ஷவர் பாத்' எடுத்தால் நிவாரணம் கிடைக்கும்; குறிப்பாக, வலிகள் நீங்கும்.தலை தவிர, முழு உடலையும் நீரில் மூழ்க வைத்து, 'அண்டர் வாட்டர் மசாஜ்' செய்வதால், ரத்த ஓட்டம் சீராகும்; மூட்டு, முடக்கு வாதம், தசை இறுக்கம் நீங்கி இலகுவாகும். இடுப்பு மூழ்கும் அளவு நீரை ஊற்றி, 'இடுப்புக் குளியல்' செய்வதால், இனப்பெருக்க உறுப்புகள் துாண்டப்பட்டு, பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, 'மெனோபாஸ் சிண்ட் ரோம்' சரியாகும். சிறுநீர்த் தொற்று, 'புரோஸ்டேட்' வீக்கம் மற்றும் ஆண்மைக்குறை போன்றவற்றை சரிசெய்யவும் உதவும்.முதுகுத்தண்டு வளைந்தவர்களுக்கு, 'தண்டுவடக் குளியல்' பலன் தரும். வேறுபட்ட வெப்பநிலையில் கை மற்றும் பாதக் குளியல் செய்வதால், ஒற்றை தலைவலி, பதற்றத்தால் வரும் தலைவலி, குதிகால் வலி, ஆஸ்துமா பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.தொடர்ந்து வெந்நீரில் குளிப்பதால் உடல் சோர்வடையும். குளிர் காலத்தில், வெது வெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. ஆனால், தொடர்ந்து செய்யக் கூடாது; சாதாரண நீரில் குளிப்பதே, உடல் நலனுக்கு ஏற்றது.

No comments:

Post a Comment