Friday, July 13, 2018

வாழிய வேதம் நான்கும்’- கம்பன் பாடல் நயம் thanks to tamil and vedas

‘வாழிய வேதம் நான்கும்’- கம்பன் பாடல் நயம் (Post No.5206)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jul. 11 at 12:35 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ‘வாழிய வேதம் நான்கும்’- கம்பன் பாடல் நயம் (Post No.5206)

    by Tamil and Vedas
    Written by London swaminathan

    Date: 11 JULY 2018

    Time uploaded in London – 7-34 am  (British Summer Time)

    Post No. 5206

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

    கம்ப ராமாயணத்தை இரண்டாவது முறை படித்து வருகிறேன். முதல் முறை படித்து முடித்தது 2004 ஆம் ஆண்டில்! இப்பொழுது ஞாயிறு தோறும் லண்டன் அன்பர்களுடன் மீண்டும் ஸ்கைப் SKYPE CLASS வகுப்பில் படிப்பதால் தொட்டனைத்தூறும் மணற்கேணி போல புதிய சிந்தனை எழுகிறது.

    ஒரே பாடலில் கம்பன் பல விஷயங்களைச் சொல்கிறான்:

    வாழிய வேதம்!
    வாழிய மநு ஸ்ம்ருதி!
    வாழிய பிராஹ்மணர்!

    அவன் சொல்ல வந்தது இருட்டிப் போச்சு; அதாவது இருள் சூழ்ந்து விட்டது; அதாவது இரவு வந்து விட்டது. அதைச் சொல்லும் போது தனது அரிய பெரிய கருத்துக்களை மல்லிகைப் பூப்போல தெளித்து மணம் பரப்புகிறான்

    பிராஹ்மணர்களை  -- Sorry, Sorry ஸாரி, ஸாரி-- அந்தக் கால ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன் கபிலன்’ போன்ற—‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ த்ருண தூமாக்னி-- போன்ற பிராஹ்மணர்களை- பூலோக தேவர்கள் -- பூ சுரர் என்று அழைப்பர். அதைக் கம்பன் இந்தப் பாடலில் ‘தெய்வ வேதியர்’ என்று போற்றுகிறான்.
    முதலில் பாடலைப் பாருங்கள்

    வாழிய வேதம் நான்கும் மனுமுறை வந்த நூலும்
    வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
    ஆழி அம் கமலக் கையான் ஆகிய பரமன் என்னா
    ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்
    --யுத்த காண்டம், நாகபாசப் படலம், கம்ப  ராமாயணம்

    பொருள்
    “என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு வேதங்கள், மனு தர்ம சாத்திரம் முதலிய அறநூல்கள், யாகங்கள், சத்தியம், தெய்வத் தன்மை பெற்ற அந்தணர்கள் அடைய விரும்பும்பேறு அனைத்தும் சக்கரம் ஏந்திய செந்தாமரை போன்ற கைகளை உடைய அந்தத் திருமாலின் உருவமே என்று உணராத மூடர்களின் மனத்தைப் போலத் திசைகள் யாவும் இருண்டு விட்டன.”

    மாலையில் சூரியன் மறைந்தது; இரவு வந்து விட்டது- இதுதான் அவன் சொல்ல வந்த விஷயம்; அந்த இருள் எப்படி இருந்தது என்றால் நாஸ்தீக மூடர்களின் மனதைப் போல இருண்டு இருந்ததாம்!

    நாஸ்தீக மூடர்களுக்கு என்ன புரியாது, என்ன தெரியாது?

    நாலு வேதம்= மநு ஸ்ம்ருதி= சத்தியம்= யாகம்= தெய்வீக பிராமணனர்களின் நோக்கம்= திருமால் ----
    என்பதை அறியாதவன் மூடன்; முட்டாள்.
    ஆக இரவு வந்து விட்டது என்று வெறுமனே விளம்பாமல் தனது நம்பிக்கை முழுவதையும், உண்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிட்டான் கம்பன்.

    சுருக்கமாகச் சொன்னல் கடவுள்தான் வேதம், அறநூல்கள், அதைப் போற்றும் உண்மைப் பிராஹ்மணர்.

    என்றும் வாழும் வேதம் என்பதில் இன்னொரு தாத்பர்யமும் உண்டு! வேத மந்திரமோ ஸம்ஸ்க்ருதமோ என்றும் அழியாது; இதற்கு என்ன சான்று?

    ஸம்ஸ்க்ருதம் கலக்காமல் ஐந்து நிமிஷம் கூட ஒருவரும் தமிழ் பேச இயலாது. ஒருவேளை ஆங்கிலச் சொற்களைப் போட்டு நிரப்பினால் அதுவும் ஸம்ஸ்க்ருதமே! ஏனெனில் ஆங்கில-ஸம்ஸ்க்ருதத் தொடர்பு உலகமே ஏற்றுக் கொண்ட உண்மை!

    கம்பன் வாழ்க; தமிழ் வாழ்க; வேதம் வாழ்க!

No comments:

Post a Comment