Saturday, January 12, 2019

முன்னோர் சொல்லி வைத்த உண்மைகள் thanks to dinamalar.com

முன்னோர் சொல்லி வைத்த உண்மைகள்

எழுத்தின் அளவு:

Advertisement

பதிவு செய்த நாள்

13ஜன
2019 
00:00

சித்திரை 1, ஆடி 1, ஐப்பசி 1 மற்றும் தை 1... இவற்றை எல்லாம் விழாவாக கொண்டாடுவது, ஏதோ ஒரு சடங்கு, பழக்கம் என, நினைத்து கொண்டுள்ளோம். ஆனால், இதற்குள் மிகப்பெரிய அறிவியலை வைத்துள்ளனர், நம் முன்னோர்.
'சூரியன் உதிக்கும் திசை கிழக்கு...'ன்னு, சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தர்றோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கிறபோது, சோதித்து இருக்கிறோமா என்றால், கண்டிப்பாக இல்லை.
நம் அறிவியலை அழித்து, முட்டாள்தனமான கல்வியை, வெள்ளையர்கள் புகுத்தி விட்டனர் என்பதற்கு, இதுவும் ஒரு சான்று. ஆம்... சூரியன், ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே, சரியாக கிழக்கே உதிக்கும். பின், கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நின்று, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும். அதன்பின், மறுபடியும் ஒருநாள், கிழக்கே உதிக்கும். அப்புறம் தென் கிழக்கு நோக்கி நகரும்.
கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென் கிழக்குன்னு போய், மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம், சரியாக ஒரு ஆண்டு.
சரி... இதுக்கும், தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான், சித்திரை 1 - தமிழ் புத்தாண்டு. அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான், ஆடி 1 - ஆடி பிறப்பு. மறுபடியும் கிழக்கு நோக்கி வரும்போது, ஐப்பசி 1 - தீபாவளி. மீண்டும் சரியாக தென் கிழக்கு, தை 1 - பொங்கல்.
வானியல் மாற்றங்களையும், அதை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்திருந்த நம் முன்னோர், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான், திருவிழாவாக கொண்டாடினர்.
அடுத்த தலைமுறைக்கு, நம் பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல், அதில் மறைந்துள்ள அறிவியலையும் எடுத்து சேர்ப்போம்.
ஏ.எஸ்.கோவிந்தராஜன்

No comments:

Post a Comment