Sunday, January 13, 2019

வாரம் ஒரு முறைபொங்கல் சாப்பிடுவதுநல்லது!வெண்பொங்கல், thanks to dinamalar.com


Advertisement
 சொல்கிறார்கள்
வாரம் ஒரு முறைபொங்கல் சாப்பிடுவதுநல்லது!வெண்பொங்கல், இந்தியா முழுவதும் சாப்பிடப்படும், ஓர் சமச்சீரான ஆரோக்கியமான உணவு; சிறந்த காலை சிற்றுண்டியும்கூட. அரிசி - 'கார்போ ஹைட்ரேட்' பாசிப்பருப்பு - 'புரோட்டின்' மிளகு, சீரகம், பெருங்காயம் - 'மைக்ரோ நியூட்ரியன்ஸ்' முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை - இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்து, தாவர எண்ணெய், பசுநெய் - நல்ல கொழுப்பு என, ஒரே உணவின் மூலமே, அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கின்றன. நன்கு வேக வைத்த பொங்கல், மிகவும் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது. 'வெண் பொங்கலானது, நம் உடலைக் குளிர்விக்கும் ஓர் உணவு' என, யோகக் குறிப்புகள் கூறுகின்றன. வயிற்றுப் புண்ணை ஆற்றும், குடலை சுத்தப்படுத்தும், நெஞ்செரிச்சலை சரி செய்யும், பாலுாட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க வைக்கும், வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். வயிற்று உப்புசம், வயிற்று வலியைச் சரிசெய்யும், மூட்டு வலி, ஒற்றைத் தலை வலி உள்ளிட்டவை வராமல் தடுக்கும்.புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள், உடலில் தங்காமல் நீக்கும். குறிப்பாக, பெண்களுக்கு சினைப்பை புற்று நோயை உண்டாக்கும், 'செல்'களை அழிக்கும். காலையில் வெண்பொங்கல் சாப்பிடுவதால், உடலுக்கு சக்தி கிடைக்கும், தசைகள் வலுப்பெறும், குடல் பகுதியை அரிக்காமல் காக்கும்.உணவில் உள்ள விஷத்தை முறிக்கும், ரத்த சோகை வராமல் தடுக்கும், முடி நன்கு வளர உதவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், ஞாபக மறதியை சரிசெய்யும். மூளையில் உள்ள செல்கள் மற்றும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவும். குளிர்காலத்தில் பொங்கல் சாப்பிட்டால், பனி, குளிரால் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்தை மிருதுவாக்கும்; இருமலையும் சரிசெய்யும்.சர்க்கரை நோயாளிகளும், வெண்பொங்கலை சாப்பிடலாம். அரிசியுடன் பருப்பும் சேர்க்கப்படுவதால், அது ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். தவிர, சீக்கிரம் பசிக்கும் தன்மையை தடுத்து, பசியின்மையை உண்டாக்கும். அதேபோல், சர்க்கரைப்பொங்கல், நாம் அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு முக்கிய உணவு. இதில் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் முந்திரியே, இந்த தனிச் சிறப்புக்குக் காரணம். உணவுக்கு வாசனை மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது ஏலக்காய். வயது முதிர்ச்சியை தாமதப்படுத்தும், மூட்டுத் தேய்மானம் வராமல் தடுக்கும், ஊளைச்சதை, நீர் அதிகம் உள்ள உடல்வாகு உடையவர்களுக்கு கழிவின் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை, ஏலக்காய்க்கு உண்டு. எனவே ஆண்டுக்கு ஒருமுறை அல்ல; வாரம் ஒரு முறை பொங்கல் உண்பது அவசியம்!மருத்துவர், எஸ்.டி. வெங்கடேஸ்வரன்:

No comments:

Post a Comment