Saturday, January 5, 2019

வாழ்க்கை வசமாக.. thanks to dinamalar.com

எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06ஜன
2019 
00:00
இனிக்கும் உறவுகள் என்றும் தொடர...
புத்தாண்டு பிறந்து விட்டது. நம்முடைய குறைகளை களைந்து, சந்தோஷமாக வாழ விரும்புகிறீர்களா...
இதோ சில டிப்ஸ்:* ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தவுடன், 'இது சொந்த வீடா... வாடகை வீடா... வாடகை எவ்வளவு...' என கேட்காதீர்... அவர்களின் பொருளாதார நிலையை அறிய, வீட்டை, கண்களால் ஆராயாதீர்* நீங்க முதலியாரா, கவுண்டரா, கிறிஸ்தவரா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்* காபியோ, டீயோ கொடுத்து உபசரித்தால், 'கொடுங்கள்...' என, அன்போடு கேட்டு, அருந்துங்கள் அல்லது மோரோ, குளிர் பானமோ கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். 'இப்பதானே காபி சாப்பிட்டு வந்தேன்...' என்று அலட்சியப்படுத்தாதீர்* அழைப்பிதழ் கொடுக்க வரும்போது, அவர்களிடமே பெயர் கேட்டு எழுதாதீர்* வீட்டிற்கு வந்தவர், 'வருகிறேன்...' என்று சொல்லி, வெளியே சென்று தெருவில் நடக்கும் வரை அல்லது வாகனம் எடுக்கும் வரை, அவர்களுடன் இருங்கள். மாறாக, கேட்டையோ, கதவையோ உடனே மூடாதீர்* 'உங்க மனைவி, ஏன் வேலைக்கு போறாங்க - போகலை...' என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்* ஒருவரது வீட்டுக்கு சாப்பாட்டு நேரத்தில் செல்லும் போது, 'சாப்பிடுறீங்களா...' என்று கேட்கும் வீட்டில், தண்ணீர் கூட குடிக்காதீர். மாறாக, 'சாப்பிடுங்க...' என்று சொல்கிற வீட்டில் நிச்சயம் சாப்பிடுங்க* 'பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா...' என்று கேட்காதீர். உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கின்றனர், எங்கு வேலை செய்கின்றனர் என்று சொல்லுங்கள். கேட்பவருக்கு பிடித்திருந்தால் சொல்லட்டும்; வற்புறுத்தாதீர்* 'ப்ரெண்டா பேசறேன், உரிமையில் பேசறேன்...' என, பொதுவில் அவர்களுக்கோ, அவர்களின் பிள்ளைகளுக்கோ, 'அட்வைஸ்' செய்யாதீர்* 'உங்களுக்கு என்ன குறைச்சல்... இரண்டு பேரு சம்பளம்... பையன், கை நிறைய சம்பாதிக்கிறான்...' -இப்படி சொல்பவர், நினைக்கிறவர்களிடம் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள் அல்லது உறவுகளை விட்டு விலகி விடுங்கள்* வந்த இடத்தில், உங்கள் புத்திசாலிதனத்தை காட்டாமல், அன்பை காட்டுங்கள். நீங்கள், எங்கெல்லாம் வீடு அல்லது மனை வாங்கி வைத்துள்ளீரோ, அதை பட்டியலிடாதீர். அது, அவர் மனைவிக்கு, மிகுந்த தர்மசங்கடத்தை உருவாக்கும்* வீட்டிற்கு வருவோரிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி, அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் என்று, பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்* வீட்டுக்கு வந்தவர்களிடம், கணவனை அல்லது மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர். அதேபோல், கணவன் அல்லது மனைவி பற்றியோ, விளையாட்டுக்கு சொல்கிறேன் என, கிண்டலடிக்காதீர்* உங்களின் சொந்த மற்றும் குடும்ப விஷயங்களை, ஒன்றிரண்டு நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து, மற்ற நண்பர்களிடம் நாசூக்காகவும், இயல்பாகவும் பழக கற்றுக்கொள்ளுங்கள்* உங்களுக்கு எதெல்லாம் தர்ம சங்கடத்தை உருவாக்குமோ, அதை பிறரிடம், பலர் முன் கேட்காதீர்; பேசாதீர்* தேவையான செய்தி, உங்களுக்கு வந்து சேரும் அல்லது நீங்கள் தகுதியான நபர் என்றால், உங்கள் காதுகளில் அந்த செய்தி, 'பர்சனலாக' கொடுக்கப்படும். உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்து விட்டீர்களா! - ஜோ.ஜெயக்குமார்

No comments:

Post a Comment