Tuesday, June 11, 2019

நோய் தடுக்கும் பொடி வகைகள்! thanks to dinamalar.com



நோய் தடுக்கும் பொடி வகைகள்!

 பதிவு செய்த நாள் : ஜூன் 11, 2019 
Advertisement
 
 
Advertisement
 

 
Advertisement
 நோய் தடுக்கும் பொடி வகைகள்!

உடல் ஆரோக்கியத்திற்கான, பொடி வகைகளை கூறும், சித்த மருத்துவர், வி.ஜமுனா:சீரகம் அதிகமாகவும், உளுந்தம் பருப்பு, கட்டி பெருங்காயம், கொஞ்சமாகவும், லேசாக வறுத்து, அதனுடன், நான்கு மிளகு சேர்த்த, சீரக பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், பசியின்மை பிரச்னை இருக்காது; உடம்பையும் கட்டுகோப்பாக வைக்கும்.கறிவேப்பிலையை அலசி, நிழலில் உலர்த்தி, உளுந்து, கட்டி பெருங்காயம் வறுத்தும், நான்கு மிளகு சேர்த்து பொடிக்கலாம். கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம். மாதவிடாய், முடி உதிர்வு பிரச்னை ஓடியே போகும்; உடம்பும் உறுதியாகும்.தனியா, உளுந்து, கட்டி பெருங்காயம், மிளகு சேர்த்த, நார்ச்சத்து உள்ள பொடி, பசியைத் துாண்டவும், உடல் இளைக்கவும், ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும். தனியா, பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்த பொடி, ஜீரணத்துக்கு நல்லது. தனியா, சீரகம் வறுத்த பொடி, வயிறு உப்புசம், பசியின்மை, குறிப்பாக, அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம்.கொள்ளு, சூடு என்பதால், இந்த பொடியுடன், நெய் சேர்த்து கொள்ளலாம். இது, தொப்பையை குறைக்கும்.எடை குறைய உதவும்; புற்றுநோய், முக்கியமாக, ஆண்களுக்கு வரும், 'புராஸ்டேட்' புற்றுநோயை விரட்டும். மாதவிடாய் பிரச்னை, குழந்தை இல்லாத குறை உள்ளவர்களுக்கு நல்லது; கர்ப்பப்பையை சுத்தம் செய்து, பெண்களுக்கு, 'டி அண்டு சி' செய்த பலனை அளிக்கும்.கருவேப்பிலை பொடியை போலவே முருங்கைக்கீரை பொடியை செய்யலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டைப் பொரியலையும், இந்த பொடியுடன் சேர்த்து சாப்பிட்டால், இரும்பு சத்து, 'டானிக்' சாப்பிட்டதற்கு சமம்.கருவேப்பிலை பொடி போலவே, மணத்தக்காளி பொடி செய்யலாம். வாயில் ஆரம்பித்து, நாக்கு, தொண்டை, உணவுக்குழாயில் உள்ள புண்களை ஆற்றும். மணத்தக்காளி இலையை மென்று, வாயில் புண்ணில் சாறு படும்படி சாப்பிடலாம்.சீரகம், மிளகு, தனியா, சுக்கு, கட்டிப் பெருங்காயம் சேர்த்து பொடித்து, நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். உடம்பு லேசாக, கலகலப்பாக இருக்கும். மாதவிடாய் பிரச்னை சரியாகும்.பூண்டை உரித்து, நல்லெண்ணெயில் வதக்கி, உளுந்து, கட்டிப் பெருங்காயம், மிளகும் சேர்த்த பொடியை சாப்பிட்டால், புற்று நோயை தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்; உடலும், 'சிக்'கென்று இருக்கும்.துவரம் பருப்பு, சீரகம், தனியா, உளுந்தம் பருப்பு வறுத்த பொடியும் சாப்பிடலாம். முடிந்தவரை கடலைப்பருப்பை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment