Sunday, March 20, 2016

mom"s advice to son during marriage time from dinamalar 19/3/2016

அம்மாவின், 'அட்வைஸ்!'
என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, அவனுக்கு அவன் தாய் கூறிய அறிவுரை இது... திருமணத்திற்கு தயாராக உள்ள எல்லா ஆண்களுக்கும் இது தேவையான அறிவுரை என்பதால், அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
* மகனே... மறந்தும் கூட என்னை, உன் மனைவியோட ஒப்பிட்டு பார்க்காதே! உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 26 ஆண்டு கால அனுபவம் இருக்கு; ஆனா, உன் மனைவிக்கு, உன்னை மாதிரியே இந்த வாழ்க்கை புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான், அவங்க அம்மாவும், அவளை பார்த்து பார்த்து வளர்த்திருப்பாங்க. இச்சூழ்நிலைக்கு பழக அவளுக்கு நாட்கள் ஆகலாம். அதற்கு பின், அவள், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக இருப்பாள்.
* மனைவியானவள், உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வந்துள்ள தோழி; அவள், உன் அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிப்பது மட்டும் தான் வேலை; ஆனா, உனக்கு, அவளை கவனிப்பது முக்கியம். நீங்க ரெண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் அக்கறை வைத்து, அன்பு செலுத்துவது முக்கியம்.
* உன் வாழ்க்கையின் நல்லது - கெட்டது அனைத்திலும், உடனிருந்து பங்கு கொள்ளப் போகிறவள் மனைவி. அவளை மதிக்க வேண்டும். அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடு.
* பிறந்து, வளர்ந்து மகிழ்ந்திருந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருப்பவள் மனைவி. அவள், இந்த வீட்டில் இயல்பா இருக்க நீ தான் உதவணும். சின்ன சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம். அதை கவனித்து, அவள் பிறந்த வீட்டில் இருப்பதை போல உணர வைக்கணும்.
* காதலிக்க வயசு தடையே இல்ல. எப்பவும் உன் மனைவியை, சந்தோஷமா வச்சுக்கோ... வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டு பேரையும், எப்பவும் இளமையா உணர வைக்கும். உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ, அது போல, நீயும், உன் மனைவியை கவுரவமா மதித்து குடும்பம் நடத்து.
— இப்படி கூறினார். 
திருமணத்திற்கு முன், பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கி வரும் நிலையில், என் உறவினப் பெண்மணி, தன் மகனுக்கு வழங்கிய அறிவுரையை, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அனைத்து ஆண்களும் கடைப்பிடிப்பது, இனிய இல்லறத்திற்கு வழிகோலும்!
— பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்.

No comments:

Post a Comment