Date: 9 FEBRUARY 2017
Time uploaded in London:- 20-45
Post No. 3622
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
நாராயணா என்னும் நாமத்தின் சிறப்பை எப்படிக் கண்டுகொண்டார் என்பதை திருமங்கை ஆழ்வார் விளக்கும் விதமே தனி அழகு! அவர் சொல்லுவதை பெரிய திருமொழியில் படித்து ரசிக்க வேண்டும்.
குலம் தரும்; செல்வம் தந்திடும்; அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும்; நீள் விசும்பு அருளும்;
அருளொடு பெரு நிலம் அளிக்கும்;
வலம் தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
நாராயணா என்னும் நாமத்தின் மூலம் என்ன , என்ன கிடைக்கும்?
உயர்ந்த மேன்மை (குலம்)
செல்வம்
துயர்களைத் துடைக்கும்
நிலம் தரும்
பகவானின் அருளைத் தரும்
சுவர்கம்- வீடுபேறு தரும்
பலம் தரும்
தாயினும் மிஞ்சிய அன்பும் தரும்
இவ்வளவு சிறப்புடைய சொல், நாமம் நாராயணா என்பதைக் கண்டுவிட்டேன்.

இதை கம்பன் பாடலுடனும் அபிராமி பட்டர் பாடலுடனும் ஒப்பிடலாம்:
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும்; தெய்வ வடிவும் தரும்- நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லனவெல்லாம் தரும் அனபர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
--அபிராமி அந்தாதி
கம்பன் இதையே இராம நாமத்தினால் கிடைக்கும் என்பான்:-
பால காண்டத்தில் கம்பன் :-
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

ஊமை கண்ட கனவு!
திருமங்கை ஆழ்வாரின் பத்து பாடல்களில் ஒரு பாடல்தான் “குலம் தரும்”…………….. ஏனைய பாடல்களில் அவர் கூறும் நல்ல வாசகங்கள்:
சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்
பொருள்: நனமையே பெற வேண்டும் என்று எண்ணி அதனைப் பெற நல் வினை செய்யாமல் தீவினையே செய்து பெண்களின் அழகையே நாடிக் கழித்த நாட்கள் ஊமை கண்ட கனவினைப் போல வீணாயின.
தஞ்சை கோயில், குடந்தை கோயில் ஆகியனவற்றைப் பாடிவிட்டு பத்தாவது பாடலை அவர் முடிக்கும் அழகே தனி அழகுதான்!
துஞ்சும் போது அழைமின்; துயர்வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லினும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு
-திவ்வியப் பிரபந்தம், பெரிய திருமொழி, பெரிய திருமந்திரத்தின் மகிமை
--subham--
No comments:
Post a Comment