Saturday, February 18, 2017

ஹெல்த்தி லைஃப் @ ஃப்ரீ காஸ்ட்! thanks vikatan.com

ஹெல்த்தி லைஃப் @ ஃப்ரீ காஸ்ட்!

நோயற்ற வாழ்வு என்பது அனைவருக்கும் பிடித்தமான லைக் லிஸ்ட். அதுவும் செலவு இல்லாமல் ஹெல்த்தியாக இருப்பது என்பது மகிழ்ச்சிகுரிய செய்தி. வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, சின்ன சின்ன வாழ்வியல் மாற்றங்கள் செய்வது, சிறிய மெனக்கெடல்கள் இவை எல்லாமே நமக்கான பூஸ்ட்தான்.
இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்...

* குடிநீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். காலை எழுந்ததும், தாமிரப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிக்க வேண்டும். தாமிரப் பாத்திரத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும். கிருமிகள் இருக்காது. தொற்றுக்களும் அண்டாது.

* பிரிஸ்க் வாக்கிங் அதுவும் அரை மணி நேரம் மட்டுமே. காலையோ, மாலையோ அரை மணி நேரம் நடந்தாலே போதும். தொப்பைக் கரைவதுடன் உடலில் உள்ள நோய்களும் கரையும்.

* உதடுகள் மூடி, நன்கு மென்று சாப்பிடப் பழகுங்கள். மெல்லும்போது உதடுகள் திறக்கக் கூடாது. தேவையான உணவைச் சாப்பிடுங்கள். ஆனால், வயிறு நிறைய சாப்பிடக் கூடாது. அரை அல்லது முக்கால் வயிற்றுக்குச் சாப்பிட்டால் போதும்.

* காலை 9 மணிக்குள் காலை உணவும்,  2 மணிக்குள் மதிய உணவும், இரவு 8 மணிக்குள் இரவு உணவும் முடித்திருக்க வேண்டும். இரவு உணவை எளிமையாக்குவது சிறப்பு.

* உங்களது டெய்லி ஃபுட் லிஸ்டில், 40 சதவிகிதம் காய்கறிகள், 40 சதவிகிதம் மாவுசத்துக்கள் அதாவது அரிசி, சிறுதானியம், பயறு, பருப்பு வகைகள், 20 சதவிகிதம் பழங்களாக இருப்பது நல்லது.

* எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட ஸ்டீம் உணவுகள் அதாவது ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதலிடம் கொடுக்கலாம். உதாரணத்துக்கு இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை, நீரால் வேகவைக்கப்பட்ட காய்கறிகறிகள் சாப்பிடலாம்.

* வாரம் இருமுறை இளஞ்சூடான நீருடன் எலுமிச்சை சாறும், தேனும் கலந்து குடித்துவர உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும்.

* குட்டி குட்டியாக நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை. தயிருக்குப் பதிலாக மோர். டீ, காபிக்குப் பதிலாக பால் சேர்காத கருப்பட்டி காபி, மூலிகை டீ என மாற்றிக் கொள்ளலாம்.

நாள்தோறும் 10 நிமிடங்களுக்கு வஜ்ராசன நிலையில் உட்காரவும். அதாவது, கால்களை மடக்கி, பாதங்களை 'V' போல விரித்துவைத்து அதன்மேல் நிமிர்ந்த நிலையில் உட்காருவதே வஜ்ராசனம். கண்களை மூடி, அமைதியாக 10 நிமிடங்கள் உட்கார்ந்தாலே போதும். மாதவிலக்குப் பிரச்னை, வயிறு தொடர்பான பிரச்னைகள் விலகும்.

* சமமான, தடிமனான மெத்தையில் படுக்கலாம் அல்லது தரையில் படுக்கலாம். ஆனால், தலையணை மெல்லியதாக இருப்பது நல்லது. படுக்கும்போது இடதுபுறமாகப் படுக்க வேண்டும்.

நொறுக்குத் தீனி சாப்பிட்ட பின், வாய் கொப்பளித்துவிட்டால் கிரேவிங் (நொறுக்குத் தீனி சாப்பிடும் மோகம்) உணர்வு தடுக்கப்படும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளித்துவிட்டால் பற்சிதைவு வராமல் தடுக்கப்படும். துர்நாற்றப் பிரச்னையையும் தவிர்க்கலாம்.

காலை, இரவு என இருமுறை பல் துலக்குவது நல்லது. கேரட், முள்ளங்கி, தேங்காய், கரும்பு, சோம்பு ஆகியவற்றைப் பற்களால் நன்றாக மென்று விழுங்குவது பற்களுக்கான சிறந்த பயிற்சி. மேலும், இவை பற்களை வலுப்படுத்தும்.

No comments:

Post a Comment