Monday, May 21, 2018

5 விஷயங்களைகடைபிடித்தால்கட்டுடல் உறுதி! thanks dinamalar.com

5 விஷயங்களைகடைபிடித்தால்கட்டுடல் உறுதி!
உடல் எடை குறைப்புக்கு, உணவு பழக்கங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறும், சென்னை, அரசு ஓமந்துாரார் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சத்துணவு நிபுணர், டாக்டர் மீனாட்சி: உடல் எடையை குறைப்பதை பொறுத்தவரை, நம் உணவு பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தாலே போதும்; அதற்கென, தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

உணவு, அளவு, சாப்பிடும் நேரம், மென்று சாப்பிடும் விதம், சமைக்கும் பாத்திரம் போன்ற ஐந்து விஷயங்கள் தான், எடையை குறைக்கவும், கூட்டவும் அடிப்படை காரணமாக இருக்கின்றன.
மாவுச்சத்து, 50 சதவீதம், நார்ச்சத்து, 20 சதவீதம், மீதி, புரதச்சத்து உள்ள உணவுகளை, ஒன்றாக சாப்பிட வேண்டும். ஸ்பூனால் தான் சாப்பிட வேண்டும்; கையால் சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். 'டிவி' பார்த்தபடியே சாப்பிட்டால், அளவில் கட்டுப்பாடு இருக்காது.

நேரத்தை பொறுத்தவரை, காலையில், 90 சதவீதம், மதியம், 80 சதவீதம், இரவு, 70 சதவீதம் என, குறைத்து சாப்பிட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், காலை உணவை தவிர்க்கவே கூடாது. இரவில், 7:30 மணிக்குள் சாப்பிட்டு, 9:30 மணிக்குள் படுத்து விட வேண்டும்.
உணவை மென்று சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம், 20 நிமிடங்களாவது, நன்கு மென்று சாப்பிட்டால், சத்துக்கள் கிடைப்பதோடு, எளிதில் ஜீரணமாகும். ஐந்தாவதாக, உணவை குக்கரில் சமைக்காமல், வடித்து சாப்பிட வேண்டும்; அதில் தான் சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.
இந்த ஐந்து விஷயங்களையும் நாம் சரியாக கடைப்பிடித்தால், எடை கூடவும் செய்யாது; குறையவும் செய்யாது; 'பிட்'டாக இருக்கலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புவோர், காலை உணவாக, ஒரேயொரு இட்லியும், மதியம் ஒரு கை அளவு சாப்பாடு, இரண்டு மடங்கு காய்கறியும், இரவு, கொள்ளு தோசை அல்லது ஒரேயொரு சப்பாத்தி சாப்பிடலாம்.மதிய உணவு இடைவேளையில் பசித்தால், நொறுக்குத்தீனி சாப்பிடாமல், வெள்ளரிக்காய், இஞ்சி, புதினா, கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து, மிக்சியில் அரைத்த ஜூஸ் குடிக்கலாம்; அதிக நார்ச்சத்து உள்ள ஜூஸ் இது. ஜூஸ் செய்ய முடியாதவர்கள், நட்ஸ் வகைகளையும், சுண்டலையும் சாப்பிடலாம்.

சராசரியாக பெண்கள், 55 கிலோவும், ஆண்கள், 60 கிலோவும் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ப சிலர், எடை மாறுபடலாம். உடல் எடை அதிகமாகி, உணவை கட்டுப்படுத்த முடியவில்லை; உடற்பயிற்சியும் செய்ய முடியவில்லை என்பவர்கள், தாமாகவே, லேகியம், மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது; மருத்துவர்களை தான் அணுக வேண்டும். பொது மருத்துவம் பார்ப்பவர்களுக்கு இது குறித்த அறிதல் குறைவு. எனவே, நியூட்ரிஷியன் அல்லது தகுந்த துறை வல்லுனர்களிடமே செல்ல வேண்டும்

No comments:

Post a Comment