Tuesday, May 29, 2018

குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மீட்கும், சேலம், மனோரக் ஷா மனநல மருத்துவ மையத்தின் இயக்குனர் thanks to dinamalar.com

சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : மே 29, 2018 
Advertisement
 
Advertisement
 
 
Advertisement
 சொல்கிறார்கள்
பாதிப்பை உணர்ந்து நிறுத்தினால் முழுமையாக மீளலாம்!குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மீட்கும், சேலம், மனோரக் ஷா மனநல மருத்துவ மையத்தின் இயக்குனர், டாக்டர் எஸ்.மோகன வெங்கடாசலபதி: இன்று, 'பார்ட்டி' என்ற பெயரில், சமுதாய கலாசாரத்தின் அங்கமாகவே, குடிப்பழக்கம் மாறி விட்டது.ஆல்கஹாலிசம் என்பது, மூளையில் தீர்மானிக்கப்படுகிற மரபணு சம்பந்தப்பட்ட நோய்; நம் பரம்பரையில் யாருக்காவது குடிப்பழக்கம் இருந்து, நாமும் பாட்டிலைத் தொட்டால், 90 சதவீதம் அடிமையாக வாய்ப்புஇருக்கிறது.'பீர் சாப்பிட்டால் பிரச்னை இல்லை; ஹாட் எனப்படும் விஸ்கி, பிராந்தி சாப்பிட்டால் மட்டுமே ஆபத்து' என்ற தவறான கருத்து, மக்களிடையே நிலவுகிறது. இரண்டுக்கும், 'பர்சன்டேஜ்' மட்டுமே மாறுபடும். மற்றபடி ஆல்கஹால் என்பது, ஆல்கஹால் தான்.தலை முதல் கால் வரை அத்தனை உறுப்புகளையும், ஆல்கஹால் பாதிக்கும். நீண்ட காலமாகத் தொடர்ந்து குடிப்போருக்கு, கல்லீரல் சுருக்கம் ஏற்படும். இது தவிர கண் பார்வை, இதயம், நரம்பு மண்டலம் அனைத்தும் பாதிக்கப்படும்.மேலும், மனைவியை சந்தேகப்படுவதில் ஆரம்பித்து, தனியாகப் பேசுதல், தானாகச் சிரித்தல், காதில் மாயக் குரல் கேட்பது, தற்கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுவது, காமவெறி போன்றவை ஏற்படும். இப்படி நடந்து கொள்வோர் மன நோயாளிகள் அல்ல; குடி நோயாளிகள் என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.குடியை நிறுத்த பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, தானே நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே, முழுமையாக மீண்டு வர முடியும்.குடிபோதையில் இருந்து மீட்க, முதல் இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்கு, 'டீடாக்சிபிகேஷன்' என்ற விஷம் நீக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இது, உடலில் உள்ள ஆல்கஹாலை வெளியில் எடுத்துவிடும். அவர்களுக்குத் தேவையான வைட்டமின், சத்துகளை உணவாகவும், ஊசி மருந்துகளாகவும் கொடுத்து, உடலுக்குத் தெம்பு கூட்டப்படும்.பேச்சு வழி மருத்துவம், சைக்கோதெரபி, கவுன்சிலிங் என, அவர்கள் மனதை மாற்ற முயற்சி எடுக்கப்படும். உழைப்பு, குடும்பத்தின் அருமை, யதார்த்தத்தை உணர்த்தும் விதமாக, அவர்கள் உணராத சில அம்சங்களை சுட்டிக்காட்டி, வெறுமையை நீக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.குடிக்கும் எண்ணம் வராமல் இருக்க, மருந்துகள், குடித்தால் எதிர்விளைவு ஏற்படும் மாத்திரைகள், தொடர்ந்து கொடுக்கப்படும். இது தவிர, ஆன்மிகம், யோகா சொல்லிக் கொடுத்து, உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உள்ளத்தைப் பாதுகாக்க, சில கலைகளை சொல்லிக் கொடுத்தும் போதையின் பாதையில் இருந்து மீட்டெடுக்கலாம்.தொடர்புக்கு: 9445204410.

No comments:

Post a Comment