Monday, May 21, 2018

கோதுமையை தவிர்ப்பது அவசியம் by டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன் thanks to dinamalar.com

சொல்கிறார்கள்

 
Advertisement
  சொல்கிறார்கள்
கோதுமையை தவிர்ப்பது அவசியம்!கோதுமையால் ஏற்படும் பாதிப்பு குறித்து கூறும், டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்: ஒரு காலத்தில், சர்க்கரையை கட்டுக்குள் வைக்க கோதுமை உணவு சாப்பிட வேண்டும் என்ற கருத்து இருந்தது. உண்மையில், அரிசியை விட கோதுமையால் தான், அதிக வியாதிகள் வருகின்றன.ஏனெனில், தற்போது கிடைக்கும் கோதுமை அனைத்தும், ரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட கோதுமை தான். இந்த வகையான கோதுமைகளை, 'ஹைபிரிடைசேஷன்' செய்வதால் அதன் புரதச்சத்து, வடிவமைப்பை மாற்றி அமைக்கிறது.இவற்றை நம் உடலில் உள்ள செல்களால் கண்டறிய முடியவில்லை. இதனால் தான், 'குளூட்டன் அலர்ஜி' எனப்படும் கோதுமை ஒவ்வாமை, இன்று அதிகமானவரை ஆட்டுவிக்கிறது. 'ஆட்டோ இம்யூன் டிசார்டர்' ஏற்பட இந்தக் கோதுமை முக்கிய காரணம்.'ஆட்டோ இம்யூன் டிசார்டர்' என்பது, நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியானது, வெளியிலிருந்து வரும் கிருமிகளை எதிர்த்து அழிப்பதற்கு பதிலாக, தனக்குள் இருக்கும் திசுக்களை அழித்துக் கொள்வது. இந்த எதிர்ப்பு, மூட்டில் நிகழ்ந்தால், முடக்குவாதத்தை ஏற்படுத்தும். இதுபோல் வரக்கூடிய பல நோய்களுக்கு, கோதுமை ஒரு காரணம்.இது தவிர, கோதுமையில், 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் வரும். கோதுமை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். கோதுமை சாப்பிட்ட பின் பரிசோதித்துப் பார்த்தாலே, இதை புரிந்து கொள்ளலாம்.தொடர்ந்து ஒருவர் கோதுமை சாப்பிட்டு வந்தால், உடல் உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு படரும். குறிப்பாக, வயிற்றுப் பகுதியைச் சுற்றிலும் கொழுப்பு படரும். ரத்தத்தில், எல்.டி.எல்., எனும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கலாம். இதய நோய், மூட்டு மற்றும் முழங்கால் வலி, அமிலத்தன்மை கூடி, நெஞ்சு எரிச்சல் வரலாம்.கோதுமை என்பது வெறும் சப்பாத்தி மட்டுமல்ல. பிரெட், பூரி, கோதுமை ரவை, பரோட்டா, ஆட்டா நுாடுல்ஸ், கேக், பிஸ்கட்ஸ், பாஸ்தா, பிட்ஸா, பன், பர்கர், வெஜ் ரோல், ஸ்பிரிங் ரோல் என, பல்வேறு வடிவங்களில் நம்மை சூழ்ந்துள்ளது. இது போன்ற உணவுகளை தவிர்த்தாலே, சர்க்கரை நோயிலிருந்து தப்பலாம்; வருங்காலத்தில் சர்க்கரை நோய் வராமலும் காக்கலாம்; நெஞ்சு எரிச்சல், மூட்டு வலி, குடல் நோய்கள் வருவதையும் தடுக்கலாம்.மைதா எந்த அளவுக்கு கெடுதலோ, அதே அளவுக்கு கோதுமையும் கெடுதல் என்பதை உணர வேண்டும். நம் மண்ணில் விளையும் தானிய வகைகளே ஏற்ற உணவு என்பதை நினைவில் கொண்டு, கோதுமையின் அடிமைத் தளத்தில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்; பல வகையான அரிசி களை உணவாக்கி உண்டு, ஆரோக்கியமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment