Saturday, May 26, 2018

thanks to one india.com

சென்னை: உத்திராயணம் பிறந்துவிட்டாலே விவாகம், உபநயனம் போன்ற முகூர்த்தங்கள் கலைகட்டிவிடும். அதிலும் மாசி மாததில் நிறைய உபநயனங்களை காணமுடியும். மாசி பூணல் பாசி படரும் என்பது பழமொழி. இன்று மாசி ஞாயிற்றுக்கிழமை அனேக திருமண மண்டபங்களில் உபநயனம் தான் நடந்துக்கொண்டிருக்கிறது. குருகுலவாசம்: குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம் போனால்தான் அடக்கம் வரும். ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம்தான். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாஸம் என்று ஒரு ஆசார்யனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு விட்டார்கள். உபநயனம்: 'உபநயனம்' என்றால் 'ஸமீபத்தில் அழைத்துப் போகிறது'. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான்.இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம் உபநயனம் என்பது இவ்விரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகின்றது. 'உப' என்றால் பிரம்மத்திற்கு அருகில் என்பது பொருள். 'நயனம்' என்றால் குரு சிஷ்யனை அழைத்துச் செல்லுதல் என்பது பொருள். பராஹ்ம்னர்கள் 8 வயதிர்க்குள்ளும், க்ஷத்ரியர்கள் 12 வயதிர்க்குள்ளும், வைஷ்யர்கள் 16 வயதிர்க்குள்ளும், காமம் மனதிற்குள் புகுமுன் உபநயன தீக்ஷை பெற வேண்டும் என்பது வழக்கம். உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல் போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று சொல்லுகிறோம். உபநயனத்தில் குரு சிஷ்யனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்க்கச் சொல்லி ஆசீர்வதிப்பதாவது "இக் கல்லைப் போல் வலிமை கொண்ட உடலும், உறுதி படைத்த நெஞ்சம் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்து போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். நீ பிராமச்சாரியாகிவிட்டாய்.சந்தியாவந்தனத்தையும், மற்ற கடமைகளையும் தவறாமல் செய்யவேண்டும். அறியாமையினின்று விழித்தெழு" என்பது போல் ஆகும். உபநயனம் பண்ண வேண்டிய வயதை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறியிருப்பது: உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும். அதாவது பிறந்து ஏழு வயசு இரண்டு மாசம் ஆனவுடன் பண்ண வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆட்டோ பிடிக்க போன தாய், மகள் சடங்குக்கு பத்திரிகை தர சென்ற தந்தை.. தூத்துக்குடியின் துயர பலிகள் இடுப்புக்கு கீழே துப்பாக்கி சூடு, மேல இரும்பு ராடு... ஒரு வழக்கறிஞரின் அதிரடி ரிப்போர்ட்! காடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல் Featured Posts க்ஷத்ரியர்கள் பன்னிரெண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம். உபநயனமும் உத்திராயணமும்: ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸூரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும். இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல என்று மகா பெரியவர் உபநயனம் செய்யும் காலம் பற்றி கூறியிருக்கிறார். வாமன மூர்த்திக்கு சூரிய பகவான் உபநயனம் செய்வித்தல்: மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம். காயத்ரி ஜெபம்: காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமகக் கொண்டது. எனவே சூரியனை வணங்குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும். காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்க்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும். சம்ஸ்க்காரத்தில் ஸந்த்யாவந்தனம் பிரம்ம யஞத்தின் கீழ் சொல்லப்பட்ட நித்யகர்மாவாகும். (சம்ஸ்க்காரம் எண் 21). ஸந்த்யாவந்தனம் அதிகாலை மற்றும் அந்தியில் சூரியனில் வசிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை குறித்து செய்யும் நித்ய கர்மாவாகும். காயத்ரி தியான முறையும், தண்ணீரால் செய்யபடும் அர்க்யமும் இந்த கர்மாவில் செயல் முறை மையமாக உள்ளன. சந்தியாவந்தனம் எப்படி செய்யவேண்டும்: சந்தியாவந்தனம் (அ) சந்த்யோபாசனை முறைப்படி குருவிடமோ/ சாஸ்த்ரிகளிடமோ உபநயன தின முதல் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஸ்வரத்துடன் கூடிய வேத மந்த்ரங்கள் அடங்கியுள்ளது. அதன் பிறகு பெரியோர்களிடமோ அல்லது வேறு ஊடகங்கள் மூலமாகவோ கற்று கொள்ளலாம். "காணாமல் கோணாமல் கண்டு கொடு" என கூறுவார்கள். அதாவது காலை சந்தியாவந்தனம் சூரியன் உதிக்கும் முன் (காணாமல்) சாவித்ரிதேவியை மதியம் உச்சிப்பொழுதில் (சூரியன் கோணாமல்) காயத்ரி தேவியை தியானிப்பது சாயங்காலத்தில் உட்கார்ந்து கொண்டு நட்சத்திரத்தை பார்க்கும் வரையிலும் சந்தியா தேவியை பூஜையை செய்தல் வேண்டும். பசுகொட்டிலிலும்,நதி கரையிலும், கோவில் அருகிலும் சந்தியாவந்தனம் செய்வது பன்மடங்கு பலனை தர வல்லது. வீட்டிலும் (கொல்லை) சுத்தமான சூரிய ஒளி வரும் இடத்தில் சந்தியாவந்தனம் செய்யலாம். அப்படியும் இடம் இல்லை எனில் வீட்டில் உள்ள கடவுள் சன்னிதானதில் செய்யலாம்.

Read more at: https://tamil.oneindia.com/astrology/news/upanayanam-samaskara-young-brahmin-boy-invested-sacred-thread-initiated-holiest-gayathri-manthra-313217.html

No comments:

Post a Comment