Sunday, January 14, 2018

காற்றாழை, துளசி வீட்டில் அவசியம்! thanks to dinamalar.com

Advertisement
சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : ஜன 15, 2018 
Advertisement
சொல்கிறார்கள்

காற்றாழை, துளசி வீட்டில் அவசியம்!
இயற்கை வாழ்வியல் நிபுணர், நாச்சாள்: அன்றைய வீடுகளை, தங்களுக்கு தேவையான இடத்தில் கட்டடத்துடன், மரம், செடி, மூலிகை என அனைத்துக்கும் சேர்த்தே திட்டமிட்டு அமைத்தனர்.இன்று வீட்டை எவ்வளவு பெரிதாக கட்ட முடியுமோ கட்டி, சதுர அடி கூட வீணாகாமங், வீட்டை சுற்று சிமெண்ட் பூசி விடுகின்றனர்; மழை நீரும் இதனால் நிலத்தில் இறங்குவதில்லை.இன்று நமக்கு நோய் வர முக்கிய காரணமே, நம்மை சுற்றி மரங்களும் செடிகளும், மண்றும் இல்லாததால் தான். வீட்டை சுற்றி இவை இருந்தால், அதனால் ஏற்படும் உயிர் சுழற்சியோடு, பல நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.அன்றாடம், நேரமின்றி உழைக்கும் பெண்களுக்கு, தேவையான சில மூலிகைகளை கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டும்.தொட்டதுக்கெல்லாம் மருந்து, மாத்திரை என்றால், உடல் சோர்வடைவது மட்டுமல்ல, உறுப்பு கோளாறு, உறுப்பை அகற்றுவது என, நம்மையே நாம் துன்புறுத்தும் நிலை ஏற்படும்.இன்ணு 40-45 வயதை கடந்த பெண்கள் பலர் பித்தப்பை, கருப்பை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது.பெரிய பராமரிப்பு என ஏதும் இல்லாத கற்றாழையும், துளசியும் வேலைக்கு போகும் பெண்களின் வீடுகளில், கட்டாயம் இருக்க வேண்டும்.கற்றாழையை மாதம் இருமுறை உட்கொள்வதுடன், தினமும் முகம், கண் வளையம், கழுத்து, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் பேசுவதன் மூலம் உடல் பொழிவும் அழகும் அதிகரிக்கும். தினமும், அலைச்சல், டென்ஷன், உழைப்பு, மனச்சோர்வு ஆகியவற்றால் உடலில் ஏற்படும் உஷ்ணத்தையும், கற்றாழை குறைத்து என்றும் பொலிவுடன் நம்மை காக்கும்.மழைக்காலங்களில் தினமும், துளசி இலைகளை ஒன்று அல்லது இரண்டு என்ற விகிதத்தில் சாப்பிட்டு வந்தால், தலைவலி, நெஞ்செரிச்சல், தொண்டைப்புண், சரும நோய் அண்டாது.கற்றாழை, துளசி செடி வைக்க, பெரிதாக இடம் தேவையில்லை. கற்றாழையை தேவைக்கேற்றவாறு சிறிது சிறிதாக உடைத்து, அதன் ஜெல்லை, முகம், தலை, உடலில் தடவி ஊற வைத்து குளித்தால், சருமம் பொலிவு பெறும். அந்த ஜெல்லை எடுத்து நீரில் நன்றாக அலசி, மோருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் உஷ்ணம் குறையும்; குடல் புண் ஆறும்.அவ்வப்போது நீர் ஊற்றுவதை தவிர, கற்றாழைக்கென தனியாக எந்த பராமரிப்பும் தேவையில்லை. இது தவிர துளசி, திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, கற்பூரவல்லி, வெற்றிலை உள்ளிட்ட மூலிகைகளை வீட்டுத் தோட்டத்தின் மூலமே, வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்க்கலாம்.இதனால் நேரம் செலவாகாமல், வீட்டுத் தோட்டமும் சாத்தியமாகும்; உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

No comments:

Post a Comment