Friday, January 19, 2018

குழந்தைகளை எப்போதெல்லாம் கட்டியணைத்திருக்கிறீர்கள்?! thanks to vikatan.com

குழந்தைகளை எப்போதெல்லாம் கட்டியணைத்திருக்கிறீர்கள்?!

உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அவர்கள் மனதில் எப்போதும் உற்சாகம் ஊஞ்சலாட வேண்டுமா? அவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்க வேண்டுமா? 
மேலே சொன்னவற்றை விரும்பாத பெற்றோர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால், நம்ம உலக நாயகனின் கட்டிப்பிடி வைத்தியத்தை ஃபாலோ செய்வதுதான் சிறந்த வழி என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். 
கிட்ஸ்
சமையல் லேட்டாகுது; பஸ்ஸை விட்டுவிடுவோமோ; டிரெயினை மிஸ் பண்ணிடுவோமோ என்கிற காலை நேரத்துக்கான பல பிரச்னைகள் நமக்கு இருக்கும். இந்தச் சமயத்தில் பிள்ளைகள் உறக்கத்திலிருந்து எழ மறுத்து அடம்பிடிக்கும். நம் மொத்த கோபத்தையும் அதன் முதுகில் காட்டிவிடுவோம். காலையில் கண் விழிக்கும்போதே, அந்தக் குழந்தை கண் கலங்கியிருப்பது நல்லதா? இதற்குப் பதில், 'கண்ணம்மா' என்றோ, 'தங்கப்பா' என்றோ கொஞ்சி அணைத்தவாறு எழுப்பிப் பாருங்கள். உங்கள் குழந்தையின் நாள் மட்டுமின்றி, உங்கள் நாளும் இனிமையாகத் தொடங்கும். 
பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த... 
ஒரு குழந்தை பிறந்ததும் தாயின் நெஞ்சுமீது படுக்கவைப்பது வெளிநாடுகளில் பல காலமாகக் கடைப்பிடிக்கப்படும் விஷயம். இந்த வழக்கம் தற்போது நம் நாட்டிலும் ஆங்காங்கே பின்பற்றப்படுகிறது. அம்மாவின் வயிற்றிலிருந்து பிரிந்து முதல்முதலாக வெளியுலகுக்கு வரும் குழந்தையை இப்படிச் செய்வதால் கிடைக்கும் நெஞ்சு சூடும் கையணைப்பும் அந்தப் பிஞ்சு பாப்பாவுக்கு உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். இந்த டெக்னிக்கை குழந்தைகள் வளர்ந்த பிறகும் செயல்படுத்தலாம். உங்கள் வீட்டுப் பொடிசுகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அணைத்துப் பாருங்கள். எது நடந்தாலும் நம் அம்மா, அப்பா இருக்கிறார்கள் என்கிற பாதுகாப்பு உணர்வும் மனதைரியமும் குழந்தைகளுக்கு உண்டாகும்.
குழந்தை
சந்தோஷம் தரும்! 
உங்கள் குட்டீஸை அணைக்கும்போது அவர்களுக்குள் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும். மகிழ்ச்சியாக இருக்கிற குழந்தைகள், உலகின் எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாகவே அணுகுவார்கள். இந்த பாசிட்டிவ் அணுகுமுறையே, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் மந்திரம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 
ஸ்டிரெஸ் போகும்! 
ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கும் ஹோம் வொர்க், டியூஷன், டே கேர், வேலை முடிந்து லேட்டாக வரும் அம்மா, கேட்ட டாய்ஸை வாங்கித் தராத அப்பா என்று நிறைய மன அழுத்தங்கள் உண்டு. இவை நமக்குச் சாதாரணமாக தெரியலாம். ஆனால், குழந்தைகளுக்கு ரொம்ம்ம்ம்ப பெருசு. ஸோ, பிள்ளைகள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்... டியூஷன் முடிந்து வந்தவுடன்... நீங்கள் ஆஃபீஸிலிருந்து வீட்டுக்குப் போனவுடன்... டே கேரிலிருந்து பிள்ளையை பிக்அப் பண்ணும்போது... பிள்ளைகள் சோர்வாகவோ, ஸ்டிரெஸ்ஸாகவோ இருந்தால், இறுக அணைத்து கன்னத்துடன் கன்னம்வைத்து அன்பைத் தெரியப்படுத்துங்கள். வார்த்தைகளே இல்லாத இந்த அன்பு, குழந்தைகளின் ஸ்டிரெஸ்ஸை விரட்டிவிடும்
தன்னம்பிக்கை அதிகரிக்கும்! 
சாதாரண கிளாஸ் டெஸ்ட்டில் உங்கள் பிள்ளை ஸ்டார் வாங்கியிருந்தாலும் அணைத்துப் பாராட்டினீர்கள் என்றால், அவர்களின் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அதிகரிக்கும். 
பெற்றோர்
இடைவெளி குறையும்! 
சின்ன வயதிலிருந்தே பிள்ளைகள் பெற்றோரிடம் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொண்டால் போதும். டீன்ஏஜ் பிரச்னைகள் முக்கால்வாசி வரவே வராது. இதற்கு, பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே அவர்களின் மகிழ்ச்சியின்போது அணைத்து, முதுகைத் தட்டிக்கொடுக்க வேண்டும். கஷ்டத்தின்போதும் அணைத்து முதுகைத் தடவிக்கொடுக்க வேண்டும். இவை போதும், பிள்ளைகளுக்கும் உங்களுக்குமான இடைவெளியைத் துரத்துவிடும். 
இனிமையான தூக்கத்துக்கு... 
ஐந்து அல்லது ஆறு வயது வரை சில குழந்தைகள், தாங்கள் கண்ட கார்ட்டூன் விலங்குகளைக் கனவில் கண்டு பயப்படுவார்கள். எனவே, அம்மா/ அப்பா அவர்களை அணைத்தபடி தூங்கவைக்கவும். கெட்ட கனவு பயத்திலிருந்து படிப்படியாக விடுபடுவார்கள்.
எந்தச் சமயத்தில் பிள்ளைகளை அணைக்கவே கூடாது?குழந்தைகளின் தப்பை கண்டுபிடித்துத் தண்டிக்கும் அல்லது கண்டிக்கும்போது அவர்கள் அழத்தான் செய்வார்கள். இந்தச் சமயத்தில் அவர்களை அணைத்துச் சமாதானப்படுத்தாதீர்கள். அதை தங்களுக்குச் சாதகமாக மாற்றுவார்கள். அம்மா/அப்பாதான் தப்பு செய்துவிட்டார்கள், அதனால்தான் நம்மை ஹக் செய்கிறார்கள் என நினைத்துக்கொள்வார்கள். ஸோ, இதுபோன்ற சமயத்தில் மட்டும் நோ ஹக்கிங்

No comments:

Post a Comment