Tuesday, June 9, 2020

பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி thanks to dinamalar.com


பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி

 Added : ஜூன் 10, 2020 
Share

Advertisement
 பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி
பழமொழிகள் முன்னோர்களின் அனுபவ மொழி என்பார்கள். ஒரு சிந்தனையை, செதுக்கி எடுத்த சொற்களால் வெளிப்படுத்துவதுதான் அந்த உத்தி. ஆனால் எந்தக் கருத்து வலியுறுத்தத் தோன்றியதோஅதனுடைய உண்மையான அர்த்தத்தை இழந்து திரிந்துவிட்ட பழமொழிகள் உண்டு. அப்படிப்பட்ட சில பழமொழிகளை
பார்ப்போம்.

யானையும், பூனையும்


'ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்'என்பது பழமொழி. வலிமையானவர்கள் ஆணவத்தால் மற்றவர்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்தால் பாதிக்கப்பட்டவர்கள், உங்கள் திமிரை அடக்க எங்களுக்கும்ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள் என்ற அர்த்தத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் உண்மையான அர்த்தம் வேறு.ஆனை என்பதை ஆ - நெய் என்று பிரிக்க வேண்டும். ஆ என்பது பசுவைக் குறிக்கும். பழைய போர்முறையில் ஆநிரை கவர்தல் என்று ஒரு முறை உண்டு. எதிரி நாட்டோடு போர் தொடங்க அந்நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வருவார்கள். ஆ என்றால் பசு; அதன் பாலிலிருந்து கிடைப்பது நெய். சத்தான உணவுக்கு நெய் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. அளவோடு சாப்பிட்டால் சத்து.
அதிகமாகச் சாப்பிட்டால் கொழுப்பு கூடிவிடும், நோய் வரும். அப்போதுவைத்தியர் கொடுக்கும் மருந்துப்பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். பூனை என்பதை பூ - நெய் என்று பிரிக்க வேண்டும். பூவிலிருந்து கிடைப்பது தேன். அது பூ நெய்.ஆனைக்கு ஒரு காலம் வந்தால்பூனைக்கு ஒரு காலம் வரும் என்பதற்கு வேடிக்கையாக வேறு அர்த்தமும் சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் அரசர்கள் உலா வந்தால் அவர்களின் பாதுகாப்புக்கு யானைப்படை வரும். இந்தக் காலத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் பயணம் வந்தால் பூனைப்படை பாதுகாப்புக்கு வருகிறது. ஆக யானைக்கு ஒரு காலம் வந்தது. இப்போது பூனைக்கு ஒரு காலம்
வந்துவிட்டது.'ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்'மற்றவர்களின் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. இது பொருத்தமாக இல்லை. இது கணவன் மனைவி உறவு சம்பந்தப்பட்டது. ஊரான் வீட்டுப் பிள்ளையான ஒரு பெண்ணைத்தான் அவன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவள் கர்ப்பமாகும்போது அவளுக்குநல்ல ஊட்டச் சத்துள்ள உணவைக் கொடுத்துப் பாதுகாத்தால் கர்ப்பத்தில் வளரும் அவனது பிள்ளை நன்றாக உருவாகும். பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுத்தால் பிள்ளை நன்றாக வளரும். அதற்கும் அவளுக்கு ஊட்டச் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். இதுதான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியின் அர்த்தம்.

ஆயிரம் பொய்


'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம்'என்பது பழமொழி. பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தினால் என்றைக்காவது அது தெரியவரும்போது பிரச்னை வரும். அப்படியானால் வேறு பொருள் இருக்க வேண்டும். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதற்கு வலிமையான அடித்தளம் அமைய வேண்டும். சொந்தபந்தங்கள்
பலரிடம் தெரியப்படுத்தி, பலர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து, பலரையும் அழைத்து நடத்துவதுதான் ஆழமான திருமணம். ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதுதான் உண்மையான பொருள்.

கழுதையும் கற்பூர வாசனையும்


'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை' என்பதில் கழுதைக்கும் கற்பூரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சிலருக்குச் சில செயல்களின் மகத்துவம் தெரியவில்லை என்பதை வலியுறுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அதற்கு வேறு பொருட்களான சந்தனம், ஜவ்வாதுபோன்றவற்றைச் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம். கற்பூரம்என்று சொல்லியிருப்பதால் இங்கே கவனிக்க வேண்டிய அர்த்தம் இருக்கிறது.கழு என்பது கோரைப் புல்வகைகளில் ஒருவகை. கழு என்ற கோரைப் புல்லில் தயாராகும் பாய் கற்பூர வாசனையைக் கொடுக்கும். சில நோய்கள் குணமாகுமாம். கழு தைக்க வருமாம் கற்பூர வாசனை என்பதே உண்மையான பழமொழி. கழு என்ற கோரைப்புல்வகை நாளாவட்டத்தில் அருகிவிட்டது.

கல்லைக்கண்டால்


'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'என்ற பழமொழி, நாய் வரும்போது அதைத் துரத்தக் கல் கிடைப்பதில்லை; கல் கிடைக்கும்போது நாய் வருவதில்லை என்ற அர்த்தத்தில் பயன்படுகிறது. ஆனால் அது பொருள் அல்ல.இங்கு கல் என்று சொல்லப்படுவதுதான் சிந்திக்க வேண்டிய சொல். கடவுளுக்கு உரிய சிற்பத்தைபொருத்தமான கல்லைக் கொண்டுதான் செதுக்குவார்கள். பிறகு அதற்குப் பூஜை செய்து உருவேற்றி கோவிலில் பிரதிஷ்டை செய்வார்கள்.இந்தப் பழமொழியில் நாய் என்பது நாயகன் என்று இருக்க வேண்டும். நாயகன் என்றால் கடவுள். பக்தி சிரத்தையோடு வழிபடும்போது அங்கு கல் தெரியாது. கடவுள் சொரூபம் மட்டும்தான் தெரியும். ஈடுபாடு இல்லாமல் வழிபட்டால் சிலைதான் அதாவது கல்தான் தெரியும். பக்தி ஈடுபாட்டின் எல்லை இது. அதுதான் கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்; நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.
இது குறித்துத் திருமூலர் குறிப்பிடும் ஒரு கருத்தைப் பார்ப்போம். ஒரு யானையின் உருவத்தை மரத்தால் செதுக்கலாம். அதை யானையாகப் பார்த்தால் மரம் தெரியாது. வெறும் மரமாகப் பார்த்தால் யானை தெரியாது.'மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தில் மறைந்தது மாமத யானை'இந்தக் கருத்தை அந்தப் பழமொழியோடு பொருத்திப் பார்க்கலாம்.

அரை வைத்தியர்


'ஆயிரம் பேரைக் கொன்றவன்அரை வைத்தியன்'என்ற பழமொழியின் பொருள் வேறு. முன்பெல்லாம் சித்த வைத்தியம்தான். மூலிகைகளை ஆராய்ந்து அவைகளைப் பிடுங்கி மருந்து தயாரிப்பார்கள். எவ்வளவு மூலிகைகள் ஒரு வைத்தியர்அதிகமாக ஆராய்ந்திருக்கிறாரோ அவரே சிறந்த வைத்தியர். 'ஆயிரம் வேரை' என்று கொண்டால் வைத்தியரின் பெருமை புரியும்.

'சிவ பூஜையில் கரடி'


என்ற பழமொழி, ஒரு நல்ல காரியம் நடக்கும்போது, கெட்ட எண்ணம் கொண்ட ஒருவர் ஊடே புகுந்து காரியத்தைக் கெடுத்துவிடுவதைக் குறிப்பதைப் போல் உள்ளது. இதன் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இதற்குள் ஓர் ஆன்மிகச் செய்தி அடங்கியுள்ளது. முன்பெல்லாம் சிவாலயங்களில்பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும். அபிஷேகம் நடக்கும்போதும், அலங்காரம் நடக்கும்போதும், உற்ஸவர் உலாவரும்போதும் இவை இசைக்கப்படும். இப்போதும் தவில், நாதஸ்வரம் இசைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட இசைக்கருவிகளில் ஒன்றுதான் 'கரடிகை' என்பது.
சுவாமிக்கு அலங்காரம் முடிந்து தீபாராதனை காட்டப்படும்போது இந்தக் கருவி இசைக்கப்படும். மற்ற நேரங்களில் வேறு வேறு கவனத்தில்இருந்த பக்தர்கள், இந்த இசையைக் கேட்டவுடன் தீபாராதனையை அனுபவிக்க ஆயத்தமாகிவிடுவார்கள். கரடிகை என்ற வாத்தியம்தான் பழமொழியில் கரடி என்று மாறிவிட்டது. சிவபூஜையில் கரடிகை என்றே சொல்வோம்.இன்னும் இப்படி நிறைய உண்டு.-முனைவர் இளசை சுந்தரம்முன்னாள் வானொலி நிலைய இயக்குனர், மதுரை98430 62817

No comments:

Post a Comment