Saturday, August 18, 2018

ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் (Post No.5334) Yahoo / Inbox thanks to tamil and vedas

ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் (Post No.5334)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    18 Aug at 12:31 AM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் (Post No.5334)

    by Tamil and Vedas
    Written by London swaminathan
    Date: 18 August 2018

    Time uploaded in London – 7-30 AM  (British Summer Time)

    Post No. 5334

    Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


    ‘ஆடை இல்லாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது பழமொழி. இதற்கு சரியான உதாரணம் ஒரு பிரபல பேச்சாளரின் வாழ்வில் நடந்தது. நிர்வாணமாக மக்கள் உலவும் காலனிகள் அமெரிக்காவில் (nudist colony) உண்டு. அங்கு அவரை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். முதலில் அவர் வரவே மாட்டேன் என்று மறுத்தார். பின்னர் அவர்கள் வற்புறுத்தவே, சம்மதித்தார்.

    நிர்வாண காலனிக்குள் வழக்கமான கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு நுழைந்தார். அவருக்கு மகத்தான வரவேற்பு! ஆனால் வரவேற்ற எல்லோரும் பிறந்த மேனியில் (naked) இருந்தனர். ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு, பார்வையை ஆகாயத்தில் நிறுத்திய வண்ணம் நுழைந்தார். அனைவரும் அவரை குசலம் விசாரித்துவிட்டு உங்களுக்கு மாடியில் அறை ஒதுக்கி இருக்கிறோம். டின்னர் பெல் ( Dinner Bell = இரவு சாப்பாட்டுக்கான மணி) அடித்தவுடன் கீழே வந்தால் போதும் என்றனர். அவருக்கும் மெத்த மகிழ்ச்சி. சொற்பொழிவில் சொல்ல வேண்டிய விஷயங்களை மனத்தில் உருப்போட்டுக்கொண்டு மாடி ஏறினார்.


    அறையில் ஒன்றுமே இல்லை. அதுவும் பிறந்தமேனிக்கு-- திறந்தமேனிக்கு-- ஒன்றுமே இல்லாமல் இருந்தது. அவர் திருதிருவென விழித்தார். ஓஹோ! நாமும் உடையை மாற்றிக்கொண்டு-- கழட்டிக்கொண்டு-- அவர்கள் சொரூபத்தில் தரிசனம் தர இந்த ஏற்பாடு போலும் என்று எண்ணி, அனைத்து உடைகளையும் கழட்டிவிட்டு, முகத்தைக் கழுவி, வாசனைத் திரவியங்களை அடித்துக்கொண்டு காத்திருந்தார். ‘டின்னர் பெல்’ அடித்தது. அவருக்கோ நல்ல பசி. ஆஹா! முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் உரையாற்றுவோம் என்று ஆவலுடன் படி இறங்கி வந்தார்! இடி போலப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

    எல்லோரும் ‘டிப் டாப்’பாக உடை அணிந்து காட்சி தந்தனர்; அவரை வரவேற்க காத்திருந்தனர். இவரோ நாணிக் குறுகி, கையினால் “அதை” மறைத்துக் கொண்டு ஓடினார் மாடிக்கு!

    நாம் ஒன்று நினைக்க தெய்வப் பிறவிகள் வேறு ஒன்று நினைக்கிறது!
    xxxx
    குதிரை எங்கே? ஆடைகள் பற்றிய மேலும் ஒரு சங்கதி!

    ஆர்கைல் நகரப்  பிரபு (Duke of Argyll)  ஒரு தியேட்டருக்கு நாடகம் பார்க்கச் சென்றிருந்தார். பிரபுக்கள் முத்லிய பிரமுகர்களுக்கான தனியான இருக்கைப் பகுதியில் ( Private Box) அமர்ந்தார். பொது மக்கள் வர முடியாத பகுதி. அதற்குள் ஒருவர் திடீரென்று நுழைந்தார். அவர் காலில் பூட்ஸும், குதிரை ரேஸ் ஓட்டுவோர் அணியும் கால் காப்பும் (Spurs) இருந்தது. அதை ஒரு நொடியில் நோட்டம் விட்ட பிரபு எழுந்து நின்று சகல மரியாதைகளுடன் வணக்கம் செலுத்தினார்.

    உள்ளே நுழைந்த குதிரை வீரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
    ஐயன்மீர்! என்னைப் போன்ற எளியேனுக்கு இப்படி ஸர்வ மரியாதைகளையும் செலுத்துவதன் கருத்து யாதோ? என்று வினவினன்.

    அது சரி! கிடக்கட்டும்! குதிரை எங்கே? அதைக் கொண்டு வரவில்லையா? என்றார்.

    முறையற்ற ஆடைகளுடன் வந்தவனுக்கு மூக்கு உடை கிடைத்தது!

    xxx

    உடுப்பு பற்றிய மேலும் ஒரு சங்கதி! பெயின் ட் வாசனை அடிக்கிறதே!

    உலக மஹா யுத்த காலத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்று இருந்த வழக்கறிஞர்- தொழிலதிபர்- ப்ளாய்ட் ஆட்லம் (Floyd Odlum) ஆவார். அவரை ஒரு குடும்பம் விருந்துக்கு அழைத்து இருந்தது. அவர் மனைவியுடன் புறப்படும் முன் திடீரென்று ஒரு யோஜனை பிறந்தது.

    ‘அடியே! என்னிடம் ஒரே பூட்ஸ் ஜோடிதா ன் இருக்கிறது. அதுவோ கண்
    ண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் உளது. வீட்டில் சாமான் அறையில் வைத்திருக்கும் கருப்பு பெயின் ட் டப்பாவைக் (Black Paint Tin) கொண்டுவோ. வேகமாக கலரை மாற்றி விடுகிறேன்.
    அவள் சொன்னாள்: என் பிராண நாதா! நல்ல ஐடியா! இதோ வருகிறேன் என்று சொல்லி காற்றினும் கடுகிச் சென்று பெயின்ட் டின்னைக் கொணர்ந்தாள்; சாயப்பூச்சு இனிதே நிறைவேற- ‘கையும் கையும் கலந்திடவே ஜாலியாகவே’- என்று பாடிக்கொண்டு விருந்துக்கு அழைத்த வீட்டுக்கு ஏகினர்.

    அந்த வீட்டில் அருமையான விருந்து சமைத்து இருந்ததால் அறுசுவை விருந்து மணம் கமழ்ந்தது. இவர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் பெயின் ட் மணம் பரவியது.

    விருந்தாளி அம்மாவுக்கு ஒரே சந்தேகம்! இவ்வளவு நேரம் நல்ல வாசனை; இப்போது என்ன நிகழ்ந்ததோ!

    ‘டேய் சார்லி! சாமான் அறைக்கு ஓடிப்போய் பார்; ஒருவேளை நாம் யாராவது பெயின் ட் டப்பாவை தவறாக இடறி கொட்டிப் போயிருக்கும்.

    உடனே அவள் மகன் சார்லியும் போய்ப் பார்த்துவிட்டு அம்மா! எல்லாம் (Air Tight) டைட்டாக மூடிக் கிடக்கு; வேறு எங்கோ இருந்துதான் வாசனை (smell) வருகிறது என்றான்.

    அந்த இரவு முழுதும் சம்பாஷணை (Conversation) அனைத்தும் பெயின்ட் பற்றித்தான்! ஓட்லமும் அவரது மனைவியும் ‘கப்புச் சிப்பு’ என்று இருந்தனர்; பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட பெருமுயற்சி செய்தனர்.

    திருடனுக்குத் தேள் கொட்டினால் கத்தவா 

No comments:

Post a Comment