[New post] ஒரு கதை- ‘மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை!’ (Post No.5329)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    16 Aug at 5:12 AM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ஒரு கதை- ‘மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை!’ (Post No.5329)

    by Tamil and Vedas
    Written  by London swaminathan
    Date: 16 August 2018

    Time uploaded in London –12-11 (British Summer Time)

    Post No. 5329


    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை- நறுந்தொகைஅதிவீரராம பாண்டியன்

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல் - குறள் 559

    நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

    இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையும் தொக்கு - குறள்
    தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.
    திருவாரூரில் மனுநீதிச் சோழன் என்பவன் அரசாண்டு வந்தான். இவனது கதை பெரிய புராணத்திலும் , சிலப்பதிகாரத்திலும், பழமொழியிலும் உள்ளது. அவனது மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி நூறு மைல் (100 mph) வேகத்தில் தேரை ஓட்டிச் சென்றான். அபோது துள்ளிக் குதித்து வந்த ஒரு பசு மாட்டின் கன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தக் காலத்தில் போக்குவரத்து போலீஸோ சிக்னல் லைட்டோ (No Traffic Police or Signal light) கிடையாது. ஆனால் அரண்மனை வாசலில் எமர்ஜென்ஸி பெல் (Emergency alarm bell)  உண்டு. யாருக்காவது துயரம் என்றால் உடனே ஓடிப் போய் காலிங் பெல்லை (Calling Bell) அமுக்கினால் அரசின் வேலைக்காரர்கள் அல்லது மன்னர் அல்லது அமைச்சரே நேரே வந்து மனுவை வாங்கிக் கொள்வார். இதை ஒரு பசு மாடும் தினமும் கவனித்து வந்தது. அந்தப் பசு மாட்டின் கன்று ட் ரா ஃபிக் ஆக்ஸிடெண்டில் (Traffic accident) இறந்தவுடன் அந்த வண்டி ‘ஸ்டாப்’ பண்ணாமல் போனவுடன் ஓடி வந்து அரண்மனையின் ‘காலிங் பெல்’லை அடித்தது. அந்த பெல்லின் பெயர் ஆராய்ச்சி மணி. மன்னன் இதுவரை அந்த சப்தத்தைக் கேட்டதே இல்லை. அது துருப்பிடித்து போயிருந்தாலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் (good working condition) இருந்தது!

    மன்னர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வாயிலுக்கு ஓடி வந்து பார்த்தால் ஒரு பசு மாடு நின்று கொண்டிருந்தது. “ஓஹோ, ஏதோ ஒரு மிஸ்டேக் (mistake)கில் கொம்பு கயிற்றில் மாட்டிக் கொண்டு அடித்தி ருக்கும் அதனால் என்ன, ஒரு கட்டு அகத்திக் கீரை வாங்கிப் போடு! அது போய்விடும்” என்று ஒரு மந்திரி சொன்னார். இப்படி விவாதம் நடக்கையில் அரசு நியமித்த 007 ஜேம்ஸ்பாண்டு   (007  James  Bond) ஓடி வந்து உளவுத் தகவல் சொன்னான்.
    “மன்னர் மன்னா! உன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றான். அதன் தாய்  இங்கே  வந்து உன் முன்னால் நிற்கிறது என்றான். பசுவின் காதிலும் அது விழுந்தவுடன் எல்லோரையும் பின் தொடர்ந்து வருமாறு அது ‘சிக்னல்’ (Signal) கொடுத்து விட்டு, ஆம்புலனஸ் கார் சப்தம் போடுவது போல ‘நீனா நீனா நீனா’, ‘உய்ந் உய்ந் உய்ந்’ என்று ஓலமிட்டுக் கொண்டே (accident spot) ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தது.

    மன்னனுகுக்கு வருத்தமும் கோபமும் ; என்ன செய்யலாம் என்றான்? உடனே  ஒரு திராவிட அமைச்சர் கேஸை (case) யாருக்கும் தெரியாமல் அமுக்கிவிடலாம் என்றார். அதற்குள் ஒரு பிராஹ்மணன் நூறு தங்க பசுங் கன்றுகள் செய்து பிராஹ்மணாளு க்குத் தந்தால் போதும். அதுதான் பிராயச் சித்தம் என்றார். ஒரு புத்திசாலி அமைச்சர், மநு நீதி சாஸ்திரத்தில் சொன்ன தண்டனையைச் சொன்னவுடன், “அப்படித்தான் செய்யவேண்டும்; ‘பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்; கொண்டா என் மகனை என்றான். மன்னன்; ஏறினான் தேரில்;  70 மைல் ஸ்பீடில் (70 mph) போய் மகனைக் கொன்றான்; தேவர்கள் பூமாரி பெய்தனர்.
    உன் நேர்மையை மெச்சினோம்; பசுவின் கன்றுக்கும் உன் மகனுக்கும் உயிர்ப் பிச்சை தந்தோம் என்று சொல்ல இருவரும் உயிர் பெற்று நடந்தனர்.
    மன்னா! நேர்மையாக நாட்சி நடந்தால் அங்கே பயிர் செய்யாமலேயே தானியங்கள் விளையுமென்று வள்ளுவன் தமிழ் வேதம் செப்புவதை நீ அறியாயோ? காளிதாஸன்  ரகுவம்ஸ காவியத்தின் ஐந்தாவது அத்திய,,,யத்தில் ரகு என்ற மன்னன் கௌத்ஸ முனிவருக்கு 14 கோடிப் பொன்னை குபேரனிடம் வாங்கிக் கொடுத்ததை அறியாயோ? ரகு படை எடுக்க, முதல் நாள் இரவில் ஆயுத ரதத்தை தயார் செய்தவுடன் குபேரனே பயந்து போய் இரவோடிரவாக 14 கோடிக்கும் மேல் அவன் கஜானாவில் கொட்டி நிரப்பினானே. அது போல உன் நாட்டிலும் தன, தான்யம் செழிக்கும் என்று தேவர்கள் சொன்னார்கள்:
    சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
    காலை கழிந்ததன் பின்றையும்- மேலைக்
    கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
    முறைமைக்கு முப்பிளமை யில் – பழமொழி