Saturday, August 18, 2018

ஆலயம் என்பது வீடாகும் thanks to varamalar in dinamalar.com

ஆலயம் என்பது வீடாகும்
Advertisement

பதிவு செய்த நாள்

19ஆக
2018 
00:00
வீடு சுத்தமாக இருந்தால், மனம் நன்றாக இருக்கும். துாசி, அழுக்குடன் கூடிய வீட்டில் இருப்பது புது புது வியாதிகளை ஏற்படுத்தும். ஷெல்ப் மற்றும் வால்ஹேங்கிங் போன்றவற்றில் இருக்கும் துாசியால் ஜலதோஷம் மற்றும் ஆஸ்துமா ஏற்படும். 
வீடு கட்டும் போதே, சமையலறையில், 'சிங்க்' வைப்பது வழக்கம் தான் என்றாலும், பாத்திரம் கழுவ, தனி இடம் ஒதுக்குவது நல்லது. 
கிரைண்டர், மிக்சியை கிச்சன் மேடையிலேயே வைத்தால், இடத்தை அடைக்கும். அதற்கு தனியாக மேடை அமைக்க வேண்டும்.
பிரிஜ், கம்ப்யூட்டர் ஒயர்கள் பிளக் பாயின்ட் மற்றும் 'டிவி' வயர்கள் எக்ஸ்டிராவா இருந்தா, ஆங்காங்கு தொங்காமல், சுவரோடு பதிய வைக்கவும். 
குளியல் மற்றும் கழிப்பறையில் வென்டிலேட்டரோ, எக்சாஸ்ட் பேனோ இருப்பது அவசியம். இதனால், துர்நாற்றம் வெளியேறி விடும்.
நடக்க இடம் இல்லாமல் வீட்டினுள் அடைசலை போட்டு வைக்காதீர்; சுவற்றில் ஒன்றிரண்டு பிரேம் போட்டோக்களை மட்டும் வைக்கவும்.
சாப்பிட்டு முடித்ததும் டைனிங் டேபிளை சுத்தமாக துடைக்க வேண்டும். 
சமையலறை மேடையில் உள்ள பொருட்களை மாதம் ஒருமுறை எடுத்து துடைத்தாலே, கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் எலி தொல்லை இருக்காது.
கரண்டி, டம்ளர், தட்டு எல்லாவற்றையும் கிடைத்த இடத்தில் வைக்காமல், அதற்கென உள்ள ஸ்டாண்டில் தனித்தனியாக அடுக்கி வையுங்கள். 
சமைத்து முடித்ததும் சமையல் மேடையை துடையுங்கள்.
ஹால், டைனிங் ஹால், பெட்ரூம், ஸ்டெடி ரூம்களில் தனித்தனியாக குப்பை கூடைகளை வைக்கவும். சமையலறை கழிவுக்கு தனி குப்பை கூடையை வைத்தால் மக்கும் குப்பை - மக்காத குப்பையை பிரித்தெடுக்கலாம்.
கழிப்பறையை தினமும் கழுவி சுத்தம் செய்தால், துர்நாற்றமடிக்காது.
வாஷ்பேசின் டவலையும், பெட்ஷீட்டையும் மூன்று நாளைக்கு ஒருமுறை மாற்றவும்.
நாய், பூனை வளர்ப்போர், அதற்கான இடத்தை தனியா ஒதுக்குங்க. நாய்க்கு முறையா தடுப்பூசி போட்டால், நமக்கு அலர்ஜியோ, நோய் தொற்றோ ஏற்படாது.
சோபா, கார்பெட், மிதியடியை, வாரத்தில் ஒரு தடவையும், ஜன்னல் கிரில், ஏ.சி., இரண்டு வாரத்திற்கு ஒருமுறையும், லைட், பேன், பாத்ரூம் கண்ணாடி, சோப் ஸ்டாண்ட், திரைச்சீலையை மாதம் ஒருமுறையும் சுத்தம் செய்யவும்.

ஆ.ஆதித்யநாதன்

No comments:

Post a Comment