Saturday, March 23, 2019

மீண்டும் வரவே வராது! thanks to dinamalar.com

கள்

மீண்டும் வரவே வராது!

 பதிவு செய்த நாள் : மார் 23, 2019 

Advertisement
 மீண்டும் வரவே வராது!
பேன் தொல்லையில்இருந்து விடுபட, எளிமையான தீர்வுகளை கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: பள்ளி பிள்ளைகளுக்கு, பேன் தொல்லை அதிகம் வந்தாலும், பெரியவர்கள், சிறு குழந்தைகள் கூட, இந்த தொல்லைக்கு தப்புவது இல்லை. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, தொற்றிக்கொள்ள கூடியது இது; அதேபோல், சீக்கிரமே பெருகவும் கூடியது.ஒரேயொரு பேன் மட்டும், ஒரு மாதத்தில், 300 முட்டை - ஈறுகளை இடுகிறது. இவை, ரத்தத்தை உணவாக உறிஞ்சும். முக்கியமாக, எப்போதும் தலையை சொறிந்தபடி இருக்கும் மிக மோசமான பழக்கமும், இதனால் ஏற்படுகிறது.பேன் மற்றும் ஈரு வராமல் தடுக்க, வாரம் இருமுறை தலைக்கு குளித்து, அழுக்கின்றி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தலை வறண்டு போகாமல், எண்ணெய் பதம் இருக்கும்படி பார்த்து கொள்ளலாம். நெருக்கமான சிறிய பல் சீப்பில், அவ்வப்போது சீவி பராமரிக்கலாம். தலை துவட்டும் துண்டு, சீப்பு, தலையணை போன்ற வற்றை, தனியாக பயன்படுத்தலாம்.முடக்கத்தான் இலை அல்லது சீதாப்பழ விதையை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயம் வைத்து, தலை அலசலாம். வேப்பெண்ணெய் உடன், தேங்காய் எண்ணெயை கலந்து, தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்த பின் குளிக்கலாம். இப்படி தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு தேய்த்து குளிக்க, நீண்ட நாட்களாக இருந்த ஈரு மற்றும் பேன் தொல்லை குறையும்.கறுப்பு அல்லிக்கிழங்கு, சிறுநாகப்பூவை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து, தலைக்கு தடவினால், பேன் தொல்லை நீங்கும்; மீண்டும் வரவே வராது! வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பேன் ஒழியும்.வேப்பிலை மற்றும் துளசி இலைகளை, தலையணையின் மீது பரப்பி, அதன் மேல் ஒரு துணியை வைத்து படுக்கலாம். வசம்புடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து, முடியை அலசினால், பேன் தொல்லை குறையும்.அரை டீஸ்பூன் வேப்பிலைத் துாள், அரை டீஸ்பூன் கடுக்காய்த் துாள், இரண்டு டீஸ்பூன் வெந்தயத் துாள், இரண்டு டீஸ்பூன் பயத்தமாவு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து தலையை அலசினால், பேன் தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment