Saturday, March 23, 2019

செப்பு பாத்திரம் பயன்படுத்துவது thanks to dinamalar.com



சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : மார் 24, 2019 
Advertisement
சொல்கிறார்கள்
செப்பில் இருக்கு வம்பு!

செப்பு பாத்திரம் பயன்படுத்துவது தொடர்பாக கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.டி.வெங்கடேஷ்வரன், சித்த மருத்துவர் காசி பிச்சை: செப்புத்தாது, உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதால், செப்பு தாது மெல்ல மெல்ல தண்ணீரில் கலக்கும். இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கு தேவையான அதிக ஆற்றலும், வலிமையும் கிடைப்பது உண்மை தான்.ஆனால், அதை சேமித்து வைக்கும் விதத்தில் தான், விஷமாக மாற வாய்ப்பு ஏற்படுகிறது. செப்பு பாத்திரத்தில் தண்ணீர் பட்டு உருவாகும் பச்சை நிற ரசாயனம், விஷத்தன்மை கொண்டது. இந்த பாத்திரத்தில் உள்ள செப்பு, தண்ணீர் அல்லது வாயுவில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து, 'காப்பர் ஆக்சைடை' உண்டாக்குகிறது. இதுவே, பச்சை நிறத்தில் செப்பு பாத்திரத்தில் படியும்; இது, ஒருவகை காளான்.செப்புப் பாத்திரத்தை சுத்தம் செய்ய, சோப்பையோ, பாத்திரம் கழுவும் திரவத்தையோ பயன்படுத்தக் கூடாது. அதை பயன்படுத்தினால், சோப்பில் உள்ள ரசாயனம் பாத்திரத்தில் படியும். இதனால், கெடுதல் தான் அதிகமாகும்.இது தவிர, அகலமான மற்றும் கைகள் தாராளமாக நுழையும் செப்பு பாத்திரத்தை மட்டுமே தண்ணீர் சேமிக்க பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பாத்திரத்தின் அனைத்து பகுதியையும் தேய்த்து சுத்தப்படுத்த முடியும். அதேபோல், குழாய் வைத்த செப்பு குடிநீர் பானையையும் தவிர்க்கலாம். காரணம், குழாய் பதித்த இடத்தில் ரசாயன களிம்பு உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.மேலும், செப்பு பாத்திரத்தை, புளியுடன், சிறிது உப்பு வைத்து தேய்த்து, பின், சாம்பல், எலுமிச்சைச்சாறு சேர்த்து கரகரப்பாக தேய்த்து கழுவ வேண்டும். இல்லையேல், புளி அல்லது சாம்பல் மட்டும் பயன்படுத்தலாம். உப்பை மட்டும் தனியாக பயன்படுத்த கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை, வெயிலில் காய வைக்க வேண்டும்.
குடிநீரை காய்ச்சி ஆறவைத்தோ அல்லது மிதமான சூட்டுடனோ செப்பு பாத்திரத்தில் ஊற்றி, பிறகு குடிக்கலாம். ஆனால், செப்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் நேரடியாக சூடு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், அது எதிர்வினையையே தரும்.
இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ், வேப்பிலை, நெல்லிக்காய், பெருஞ்சீரகம், வெந்தயம் உள்ளிட்ட மூலிகைகளை, தினமும் ஏதேனும் ஒன்றை கலந்து குடிக்கலாம். இது, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுதவிர, செப்பு பாத்திரத்தில் உணவை வைத்து பயன்படுத்த கூடாது; தண்ணீர் ஊற்றி மட்டுமே பயன் படுத்த வேண்டிய உலோகம் இது.

No comments:

Post a Comment