Saturday, March 9, 2019

காலை எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது thanks to dinamalar.com

காலை எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?


காலையில் வெகுநேரம் உறங்கி விட்டு அவசர அவசரமாக எழும்புவதும், உடனடியாக வேலைக்கு கிளம்புவதும் எல்லோரும் செய்யக்கூடிய தவறு. ஒரு நாளின் துவக்கமே அமைதியாக தொடங்க வேண்டாமா? எனவே மெதுவாக துயில் எழுங்கள். சென்ற நாளில் நடந்த எல்லா கவலைகளையும் குழப்பங்களையும் மறந்து விடுங்கள். புதிதாக துவங்க இருக்கும் நாள் குறித்து திட்டமிடுங்கள். நீங்கள் கண் விழித்ததும் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இனிய சூழலைப் பாருங்கள். அது உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாகக் கூட இருக்கலாம்.
காலை
எழுந்ததும் சோம்பல் முறிப்பது நல்லது தான். ஆனால் அதை மெதுவாகச் செய்வது நல்லது. ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானத்தில் இருப்பது நல்லது. இது உங்களின் சுவாசத்துக்கு இதயத்துக்கும் நல்லது. பின்னர் கைகால்களை சுழற்றி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். அதற்கு முன்னர் 2 குவளை குளிர்ந்த நீர் அருந்த வேண்டும். இதனால் உங்களின் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கும்.
அதிகாலை காற்றை சுவாசியுங்கள். சூரிய ஒளியினை பெற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு பல வியாதிகளை வரமால் தடுக்கும். பட்சிகளின் குரலினை கவனியுங்கள். இவை உங்களின் மனதுக்கு புத்துணர்ச்சி ஊட்டும். காலையிலேயே சமுக வலைத்தளங்களில் நேரம் போக்குவது வீணானது. அதற்கு பதில் நல்ல புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை படித்து பயன்பெறலாம். வேண்டுமானால் உங்களின் நண்பர்களுக்கு காலை வாழ்த்தினை சிறிது நேரம் அனுப்பலாம். இது உறவுகள் மேம்பட உதவும்.
அதிகாலை
2 அல்லது 3 நிமிடத்துக்கு மேல் பல்லை விலக்காதீர்கள். குளிர்ந்த நீரிலேயே குளியுங்கள். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, சிறிது நேர உடற்பயிற்சி, கொஞ்ச நேரம் படிப்பு என்று உங்கள் காலை தொடர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக உணரலாம். அதுமட்டுமில்லை வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் முதல் உணவு தான் உங்களின் அன்றைய தினத்தினை வழிநடத்துகிறது. எனவே காலை உணவை தவிர்க்கவே தவிர்க்காதீர்கள். 

No comments:

Post a Comment