Saturday, February 22, 2020

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 4 (Post No.7603) thanks to tamil and vedas


ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 4 (Post No.7603)

by Tamil and Vedas
WRITTEN BY S NAGARAJAN                     
Post No.7603
Date uploaded in London – – 22 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில: tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு டாக்டரின் கவிதை!
ஹரித்வாரில் பூரண்ஜி (ஸ்வாமி ராமா என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர் தான்!) ஸ்வாமியை மிஸ்டர் குதாதத் (Mr Khudadad) என்பவரிடம் அழைத்துச் சென்றார். குதாதத் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். பின்னால் இவர் டாக்டர் பட்டம் பெற்றார்.
அவரைச் சந்தித்த பின்  ஸ்வாமி ராமா கூறினார்; “ஏன், இவர்களையெல்லாம் என்னிடம் அழைத்து வருகிறீர்கள்? அவர்கள் ஏற்கனவே ராமாவின் ஃபாஷனில் வந்து விட்டவர்கள்! அவர்களுக்கு கற்பிக்க ராமாவிடம் ஒன்றுமே இல்லை”
டாக்டர் குதாதத்திடம் அவர் கூறினார் : “ உங்கள் பெயரை ராமாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. குதா (கடவுள் என்று பொருள்) தத் (கொடுக்கப்படது) என்பது குதா என்று இருந்தாலேயே போதுமே!”
உடனடியாக குதாதத் பதில் கூறினார் இப்படி; :கண்கள் உள்ளவர்களுக்கு இது; மற்றவர்களுக்கு அது (“For those who have eyes this, for others that)
இதைக் கேட்டதும் ஸ்வாமி ராமாவிற்கு ஒரே சந்தோஷம்.பெரிய புன்னகை ஒன்றை அவர் மிளிர விட்டார்.
பேட்டியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த குதாதத்  உடனேயே கவிதை ஒன்றை இயற்றினார்:
:ஓ, ஸ்வாமி ராமா! உங்கள் புன்னகை எவ்வளவு மர்மம் பொருந்தியதாக இருக்கிறது!
வாழ்வின் ரகசியம் அதில் உருவெடுக்கிறது”
(O, Swami Rama! How mysterious is thy smile,
The secret of life is manifest therein)
இந்த இருவரிப் பாடலில் ஸ்வாமி ராமதீர்த்தரின் முழு வாழ்க்கையுமே அடங்கி விட்டது!
முதலைகளுக்கு அஞ்சாத ராமதீர்த்தர்!
1905ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.
ஸ்வாமி ராமா கிஷன்கர் மாநில விடுதியில் (Kishangarh State house) தங்கியிருந்தார். பூரண் சிங்கும் அங்கு வந்து சேர்ந்தார்.
மிகவும் பிரசித்தி பெற்ற புஷ்கர் ஏரிக்கரையில் அது அமைந்திருந்தது. அந்த ஏரியோ ஏராளமான முதலைகள் நிறைந்த ஏரியாகும்.
ஸ்வாமி ராமா தன் கையில் ஒரு சிறிய மூங்கில் தடியை வைத்திருந்தார்.
பூரண் சிங்கிடம் அந்தத் தடியைக் காண்பித்த ஸ்வாமி ராமா, “இந்த மூங்கில் தடியை நீங்கள் பார்க்கவில்லையே! இது பிரமாதமானது. இது தான் ராமாவின் மந்திரக் கோல். முதலைகளை இது விரட்டி விடும். அது மட்டுமல்ல, ராமாவின் பென்சில், பேப்பர் எல்லாவற்றையும் இதில் வைத்து விடலாம்.
(ஸ்வாமி மூங்கிலின் உள்பக்கம் காலியாக இருப்பதையும் அதில் அவரது பேப்பர், பென்சில் இருப்பதையும் காண்பித்தார்). இது தான் ராமாவின் அனைத்துமே! ராமா தனது உடைமைகளை இப்படிச் சுருக்கிக் கொண்டு விட்டார்” என்று கூறிச் சிரித்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com
மேலும் அவர் தொடர்ந்து கூறினார்;” ஒருவனின் பயணப் பெட்டி இப்படிச் சுருங்கி விட்டதென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ராஜா தான்! இந்த காலியிடத்திற்குள் அவன் தேவைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் அது பிரமாதம்”!
ஸ்வாமி ராமாவிற்கு ஒரு அறைக்குள் உட்கார்ந்திருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காது. “ராமாவிற்கு அறை என்றாலே பிடிக்காது. ஏனெனில் அது கல்லறை போல இருக்கிறது” என்பார் அவர்.
சூரிய வெளிச்சம் உள்ள மாடியில் தான் அவர் அமர்வார்!
முதலைகளை அண்ட விடாத மூங்கில் கம்பு!
ஒரு நாள் பூரண் சிங்கையும் புஷ்கர் ஏரியில் குளிக்க வருமாறு ஸ்வாமி ராமா அழைத்தார். முதலைகள் நிறைந்த அந்த ஏரியில்  ராமா திரும்பி வரவேண்டுமே என்ற பாதி பயத்துடனும் தனது உயிர் நிலைத்திருக்க வேண்டுமே என்ற முழு பயத்துடனும் பூரண் சிங் இறங்கினார். பூரண் சிங்கிற்கு நீந்தத் தெரியாது.
முதலில் இறங்கிய ராமா, “ ராமா முதலில் போன பின் பின்னால் நீங்கள் நின்றவாறே அவருக்குப் பின்னால் குளித்தால் போதும் என்று பூரண் சிங்கிடம் சொன்னார்.
முதலைகளுக்கு சரியான இரண்டு மாமிச பிண்டங்கள் வருகிறது என்றால் எப்படி இருக்கும்?
இரண்டு விரல்களால் மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரில் அமுங்கினார் ஸ்வாமி ராமா. tamilandvedas.com, swamiindology.blogspot.com
தனது மந்திரக்கோலை தனக்கு முன்னே நீரில அவர் மிதக்க விட்டார். ஏதோ அந்த மந்திரக்கோலை முதலைகள் தாண்டக்கூடாது என்று அவர் உத்தரவு போட்டது போல இருந்தது.
பின்னர் அவர் நீரிலிருந்து எழுந்து, “பூரண்ஜி! போகலாம், இதற்கு மேல் நெடுநேரம் நாம் இங்கிருப்பதை முதலைகள் விரும்பவில்லை என்று கூறி விட்டு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். இருவரும் கரைக்கு விரைந்தனர்.
தனது மந்திரக்கோலை ஸ்வாமி ராமா மறக்கவில்லை. ஞாபகமாக அதைக் கையில் எடுத்துக் கொண்ட அவர், “நல்ல அருமையான ஆள், இவன்! ராமாவிற்கு மிகவும் சிரத்தையாக இவன் சேவை செய்கிறான் என்றார்.
தண்ணீரைக் கண்டு அஞ்சாத நீச்சல்காரர் ஸ்வாமி ராமா!
ஆனால் அந்த ஜலத்திலேயே அவர் சமாதி நிகழும் என்று யார் தான் நினைத்தார்கள்?

No comments:

Post a Comment