[New post] நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2 (Post No.7607)
Yahoo/Inbox
- Tamil and Vedas <comment-reply@wordpress.com>To:theproudindian_2000@yahoo.co.inFeb. 23 at 2:04 a.m.
Respond to this post by replying above this line New post on Tamil and Vedas
நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2 (Post No.7607)
by Tamil and VedasWRITTEN BY S NagarajanPost No.7607Date uploaded in London – 23 February 2020Contact – swami_48@yahoo.comPictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.சென்ற கட்டுரையின் தொடர்ச்சி (சென்ற கட்டுரை எண் : 7517 வெளியான தேதி :31-1-2020)திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத பத்திரிகை ஹெல்த்கேர் பிப்ரவ்ரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.புத்தகச் சுருக்கம் : Perfect Digestion by Deepak Chopraநல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2(தீபக் சோப்ரா எழுதியுள்ள ‘பெர்ஃபெக்ட் டைஜெஸ்ஷன்”)ச.நாகராஜன்ஆயுர்வேதம் கூறும் பழைய அறிவுரை ஒன்று உண்டு! அது இது தான் :சரியான உணவுத் திட்டம் இல்லாத மருந்து பயனற்ற ஒன்று; சரியான் உணவுத்திட்டம் இருந்தாலோ மருந்திற்கான அவசியமே இல்லை!(Without proper diet medicine of no use, and with proper diet medicine is of no need!)ஆயுர்வேதம் அடிப்படையான ஆறு சுவைகளைக் கூறுகிறது.அவையாவன :இனிப்பு : ஜீனி, தேன், அரிசி, பாஸ்தா பால், க்ரீம், வெண்ணெய் போன்றவைபுளிப்பு : எலுமிச்சை, சீஸ், யோகர்ட், ப்ளம், வினிகர் போன்றவைஉப்பு : எந்த உப்பு உணவும்உரைப்பு : மிளகாய், மிளகு, இஞ்சி, உரைப்பான பொருள்கள்கசப்பு : சில கீரைகள் (பாகற்காய் உள்ளிட்டவை)துவர்ப்பு : பீன்ஸ், மாதுளை, ஆப்பிள் உள்ளிட்டவைஅறுசுவைகளும் உணவுத்திட்டத்தை சமச்சீராக்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.இந்த ஆறு சுவைகளும் இருக்கும்படியான உணவுத்திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆயுர்வேதத்தின் முதல் அறிவுரை.எந்த உணவை நீக்க வேண்டும்? விடை சுலபமானது. எந்த உணவு உங்களைப் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறதோ, எந்த உணவு உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லையோ, அதை நீக்கி விட வேண்டும்.ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இன்னொரு உத்தி - ஆயில் மசாஜ்.சரியான எண்ணெயைக் காய்ச்சி சற்று சூடான நிலையில் தலையிலிருந்து கால் வரை தேய்த்து மெதுவாக மசாஜ் செய்தல் வேண்டும்.உடலில் 107 மர்ம (ஸ்தான) ங்கள் உள்ளன. இவற்றில் மூன்று முக்கியமானவை.- சிர மர்மம் 2) ஹ்ருதய மர்மம் 3) பஸ்தி மர்மம்.
இவற்றுள் மூன்றாவதாக இருக்கும் மர்மம் தான் உடலின் பல இயக்கங்களுக்கு முக்கியமானதாக அமைகிறது.இந்த மர்மத்தின் அடிப்படையில் தான் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்படும் உத்திகளும் அறிவுரைகளும் உள்ளன.உடலைச் சீராக வைத்துக் கொள்ள சில உடல் பயிற்சிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.யோக முத்ரா, உத்தியான பந்தம், வஜ்ராசனம், பவன முக்தாசனம், புஜங்காசனம் போன்றவற்றை (குரு மூலமாக) கற்றல் வேண்டும்.ஜீரணம் என்பதில் உள்ள முக்கியமான அம்சம் உடல் மற்றும் உணர்ச்சி மீதான கட்டுப்பாடாகும்.நீங்கள் உண்ணும் உணவு மட்டுமல்ல ‘நீங்கள்’ என்பது; உங்கள் உணவு உடலுக்குள் சென்ற பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதும் முக்கியமானது.உணவையும் அது உண்ணும் அனுபவத்தையும் ஒரு அருமையான விஷயமாகக் கருதி அனுபவித்தல் வேண்டும்.வாயு சம்பந்தமான அனைத்து தோஷங்களையும், வியாதிகளையும் தவிர்க்க நீங்கள் உங்கள் உணவு மற்றும் உடல் மீதான முழுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.ஆறு சுவைகளையும் கொண்ட உணவுத் திட்டம் மேலானது.உடலின் இயக்கங்களின் மீது அழுத்தம் (Strain) இருக்கக் கூடாது. அப்படி அழுத்தம் ஏற்படுத்தும் உணவுகளை இனம் கண்டு தவிர்த்தலும், உடலில் அழுத்தம் ஏற்படும் இடங்களைக் காண்பதும் அதைத் தவிர்த்து வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதும் அர்த்தமுள்ளதாகும்.இதைச் செய்தால் பூரண ஆரோக்கியம் கொண்டவர்களாக ஆவீர்க
No comments:
Post a Comment