Monday, February 10, 2020

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் thanks to vikatan.com


ஒரு சிட்டிகை பெருங்காயமும், மருத்துவ பலன்களும்!

LG பெருங்காயம்
LG பெருங்காயம்
அஜீரணத்துக்கு அருமருந்து பெருங்காயம். வாய்வை ஏற்படுத்தும் வாழை, பருப்புகள், கடலைகள், பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சமைக்கும்போது தவறாமல் பெருங்காயத்தை உணவில் சேர்க்க வேண்டும்
1910-ம் ஆண்டு அமெரிக்காவில் ஸ்பானிஷ் ஃப்ளு எனும் நோய் பல்லாயிரக்கணக்கான மக்களை வாட்டி வதைத்தது. அப்போது 'பெருங்காயம்' அந்த நோயை ஏற்படுத்தும் வைரஸுக்கு எதிராக செயல்படுவதைக் கண்டு, அதைத் தங்கள் கழுத்தில் தாயத்து போன்று அணிந்து திரிந்தனர் அமெரிக்கர்கள். பெருங்காயத்தைக் 'கடவுளின் அமிர்தம்' என்றே கொண்டாடினர்.
பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...
* அஜீரணத்துக்கு அருமருந்து பெருங்காயம். வாய்வை ஏற்படுத்தும் வாழை, பருப்புகள், கடலைகள், பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சமைக்கும்போது தவறாமல் பெருங்காயத்தை உணவில் சேர்க்க வேண்டும்.
* ஆஸ்துமா, வறட்டு இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளில் இருந்து விடுபட, தலைவலியைப் போக்க, முகப்பருக்களைக் குறைக்க, ரத்த அழுத்த அளவை சீராக்க எனப் பெருங்காயம் மருத்துவ ரீதியாக பேருதவி செய்கிறது.
* மிகவும் பழமையான மருந்தான பெருங்காயம் பெண்களுக்கு அதிசிறந்த மருந்தாக திகழ்கிறது. சீரற்ற மாதவிடாய்ப் பிரச்னை மற்றும் அதுசார்ந்த வலியைப் பெருங்காயம் சரிசெய்கிறது. சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.
ஒரு சிட்டிகை பெருங்காயமும், மருத்துவ பலன்களும்!
பெருங்காயத்தை எப்படிப் பார்த்து வாங்கலாம்...
நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் / பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துதான் வாங்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் பேக்கில் ISO முத்திரைகொண்ட ஹாலோகிராம் சீல் (Hologram Seal) பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் பெருங்காயத்தின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்கிறது. பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுபுகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவ குணத்தையும் பாதுகாக்கலாம்.
தரமான பெருங்காயத்தை எங்கு பெறுவது?
உயர்தர பெருங்காயத்தை உற்பத்தி செய்யும் கலையை, 1894-ஆம் ஆண்டு முதல் செய்துவருகிறது எங்களின் லால்ஜி கோது & கோ (LG) நிறுவனம். 125 ஆண்டுகால பாரம்பரியம்கொண்ட எல்.ஜி-யை ஒரு பிராண்ட் என்பதைவிட, நிறுவனர் லால்ஜி கோது எனும் வியாபார மேதையின் தொலைநோக்குப் பார்வை என்றே சொல்லலாம். தென்னிந்திய சமையலின் மிகமுக்கிய அங்கமாக விளங்கும் பெருங்காயக் கட்டிகளை, குழம்பில் நேரடியாக அல்லது எண்ணெயில் வறுத்து பொடிசெய்து நாம் உபயோகித்து வருகிறோம். 1976-இல் முதன்முறையாக பெருங்காயத் தூளை அறிமுகம் செய்தார் LG நிறுவனத்தின் அஜித் மெர்ச்சண்ட். அதுவரை சந்தையில் பெருங்காயம் கட்டிகளாவே விற்பனை செய்யப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு சிட்டிகை பெருங்காயமும், மருத்துவ பலன்களும்!
இன்று எங்களின் லால்ஜி கோது & கோ நிறுவனம் பெருங்காயத்தைக் கட்டிகள் மற்றும் தூள் வடிவில் வழங்கிவருகிறது. பெருங்காயக் கட்டிகளை 50, 100, 200, 500 என கிராம் கணக்கிலும், பொடிப் பெருங்காயத்தை 50, 100, 200, 500 கிராம் அளவிலும் பேக் செய்து உலகம் முழுக்க விற்பனை செய்துவருகிறோம்.
தரத்தில் குறையேதுமில்லாமல் தலைமுறை தலைமுறையாக உணவின் ஒவ்வொரு பிடியிலும், ஒரு சிட்டிகை அன்பைச் சேர்க்கிறது எல்.ஜி பெருங்காயம்!

No comments:

Post a Comment