Saturday, February 15, 2020

ஆலய அதிசயம்! thanks to dinamalar.com

எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16பிப்
2020
00:00
'மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குங்குமமும் - விபூதியும், காந்த சக்தி மிக்கது...' என்கிறார், இங்கிலாந்து அறிஞர், சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.
இவர், ஒருமுறை, மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கே, அம்மன் சன்னிதியில் குங்குமமும் அடுத்து, சுந்தரேஸ்வரர் சன்னிதியில், விபூதியும் தந்தனர். இந்திய மக்கள், இதை ஏன் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர் என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டது.
உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்த சக்தி வெளிப்பட்டதை உணர்ந்து, 'இது, என் வாழ்வில் கண்ட அதிசயம்...' என, தன்னுடைய,
'தி இன்னர் லைப்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதைவிட அதிசயம் ஒன்றும் உள்ளதாம். சில ஆண்டுகளுக்கு பிறகு, அதே, விபூதி - குங்குமத்தை பரிசோதனை செய்த போதும், முன்பு கண்ட அதே அளவு காந்த சக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். 'இப்படி ஒரு அதிசயத்தை, எந்த நாட்டிலும் நான் கண்டதில்லை...' என்று, எழுதியுள்ளார்.
நாமோ, மீனாட்சி கோவில் குங்குமத்தை நெற்றியில் இட்ட பின், துாண்களில் கொட்டி பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனியாவது, குங்குமத்தை வாங்கி, பூஜையறையில் வைத்து, அன்னையின் அருட்கடாட்சம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க செய்வோம்!

No comments:

Post a Comment