எனக்கு முகவரி என் மகன் தான்!
Advertisement

பெங்களூரில், கடந்த, மார்ச், ௮ல், சர்வதேச மகளிர் தின விழாவில், மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரை சேர்ந்த, 32 வயது ஆண் இன்ஜினியர், ஆதித்யா திவாரிக்கு, 'உலகின் மிகச் சிறந்த அம்மா' விருது வழங்கப்பட்டது.
இதுபற்றி அவர்: உறவினர்களின் பிறந்த நாட்களின் போது, அனாதை இல்லங்களுக்கு சென்று, உணவளிப்பது வழக்கம். ஒரு முறை, என் தந்தையின் பிறந்த நாளுக்காக, புனே நகரில், அனாதை குழந்தைகள் இல்லம் ஒன்றுக்கு சென்றேன். ஓரமாக கிடந்த கட்டிலில், 1 வயது ஆண் குழந்தை, கவனிப்பார் இன்றி படுத்திருந்ததை கண்டேன். அங்கிருந்த காப்பாளரிடம் கேட்ட போது, 'அந்த குழந்தைக்கு பைத்தியம்; விரைவில் செத்து விடும்' என்றார்.
எனக்கு மனம் கனத்தது.அந்த குழந்தையைப் பார்ப்பதற்காகவே, அடிக்கடி, அந்த அனாதை இல்லத்திற்கு சென்றேன். என் மீது சந்தேகம் கொண்ட நிர்வாகத்தினர், குழந்தையை வேறு இல்லத்திற்கு மாற்றி விட்டனர். அங்கும் சென்று, அந்த குழந்தையை பார்த்தேன். அப்போது தான், அந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை. சிறப்பு குழந்தையான அதை, யாரும் தத்தெடுக்க முன்வரவில்லை என்பதை அறிந்தேன்; தத்தெடுக்க முடிவு செய்தேன்.
அப்போது எனக்கு, 26 வயது; திருமணம் ஆகவில்லை; தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கவில்லை. 'திருமணம் ஆகாத ஆண், தத்தெடுக்க முடியாது' என, சட்டம் சொன்னது. அதை எதிர்த்து, ஜனாதிபதி, பிரதமருக்கு மனுக்கள் அனுப்பினேன். ஒரு கட்டத்தில், 'தனி ஆணும், குழந்தையை தத்தெடுக்கலாம்' என, சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின், அந்த குழந்தைக்கு, 'அவ்னீஷ்' என பெயரிட்டு, என் வீட்டுக்கு எடுத்து வந்தேன். என் பெற்றோரும், அவ்னீஷை, தன் பேரன் போலவே, அன்பாக பார்த்துக் கொண்டனர்.இதயத்தில் ஓட்டை, தைராய்டு பிரச்னை, கால் மூட்டியில் தொந்தரவு, அட்ரினலின் சுரப்பியில் கோளாறு, ஆண் உறுப்பில் சிக்கல் என, ஏராளமான உடல் குறைபாடுடன் இருந்த அவனை, சராசரிக்கும் சிறப்பான ஆண் குழந்தையாக மாற்றி விட்டேன்.எனக்கு, 2017ல் திருமணம் நடந்தது. அப்போதும் என் மடியில், அவ்னீஷ் அமர்ந்திருந்தான். மகனுடன் திருமணம் ஆன நபர், நானாகத் தான் இருப்பேன். என் மனைவிக்கும், அவ்னீஷ் என்றால் உயிர். அவனுக்கு இப்போது, 6 வயதாகிறது. என்னை சில நேரம், அப்பா என்பான்; பல நேரம், அம்மா என்று தான் அழைப்பான்.அவன் தான் எனக்கு முகவரி. சிறப்பு குழந்தையை வளர்ப்பது எப்படி என்பது குறித்து, அவனால் தான், இப்போது, உலகம் முழுவதும் சென்று, உரையாற்றுகிறேன். பலரும் என்னை பாராட்டுகின்றனர். எனக்கு புகழ் கிடைக்க, என் மகன் அவ்னீஷ் தான் காரணம்!

No comments:
Post a Comment