Wednesday, April 29, 2020

பசி வர இதை செய்யுங்க! thanks to dinamalar.com


பசி வர இதை செய்யுங்க!

 பதிவு செய்த நாள் : ஏப் 30, 2020 
tisement
 பசி வர  இதை செய்யுங்க!
கோடை காலத்தில் சரியாக வயிறு பசிக்காது. தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். பசித்து சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லது. அதற்கு என்ன செய்யலாம் என, டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்: இப்போது நாமெல்லாம், பசிக்கிறதோ இல்லையோ, மணிக்கணக்கு வைத்து சாப்பிடுகிறோம். கோடை காலத்தில் சரியாக பசிக்காது. எனினும், எதையாவது சாப்பிட்டு விடுகிறோம்.
இதனால், வயிற்றில் உள்ள உணவு கெட்டு, கெட்ட வாயுவை உற்பத்தி செய்யும்.பசி இன்றி சாப்பிடக் கூடாது. பசியை வரவழைக்க, கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:l சிறிதளவு இஞ்சியை அரைத்து, சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இந்துப்பூ கலந்து, பானமாக, காலை அல்லது இரவு நேரங்களில் குடிக்கலாம்; சில நாட்களிலேயே நன்கு பசி எடுக்கும்l வெந்நீர் குடித்து வந்தால், பசியின்மை என்ற பிரச்னையே இருக்காது. அதை பழக்கமாக கொண்டிருந்தால், பசியில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரை ஸ்பூன் சுக்கு பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
மேலும், சுக்கு, மிளகு, திப்பிலியை பொடி செய்து, தண்ணீர், வெந்நீர், தேன் கலந்து சாப்பிட, பசி பறந்து வரும்l இஞ்சி, ஏலக்காயை தண்ணீரில் தட்டி போட்டு, நன்றாக கொதிக்க வைத்து, தேநீர் போல பருகலாம். வெறும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர, பசி ஏற்படும். l மிளகுப் பொடியுடன், நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிட, பசி ஓடி வரும்l பட்டை, ஏலக்காய், தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து, முதல் நாள் இரவே, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து, அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், பசி எடுக்கும். இப்படி, ஒரு டம்ளர் குடிக்கலாம்இல்லையேல், இந்த பொருட்களை பொடி செய்து, அந்த பொடியை தண்ணீரில் முதல் நாளில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து குடிக்கலாம்; இதனாலும், பசி நன்றாக வரும்l மாதுளம் பழச்சாறுடன், சிறிதளவு இந்துப்பூ, தேன் கலந்து குடிக்கலாம். இல்லையேல், கால் ஸ்பூன் பெருங்காயத் துாளுடன், தலா, கால் ஸ்பூன் சீரகம், இந்துப்பூ, கடுகை பொடி செய்து கலந்து, சிறிதளவு இஞ்சி சேர்த்து, தண்ணீரில் கலந்து குடிக்க, பசி அதிகம் ஏற்படும்.சாப்பிட்ட சாப்பாடு, சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால், அதை சரி செய்ய, ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிதளவு ஓமத்தை போட்டு, கொதிக்க வைத்து குடிக்கலாம். சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில், செரிமானத்திற்கான ரசாயனங்கள் உள்ளன. அதனால், வெறும் சோம்புவை வாயில் போட்டு மென்று, உமிழ்நீரை விழுங்கி, சிறிதளவு தண்ணீர் குடித்தால், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகி விடும்!

No comments:

Post a Comment