Tuesday, April 28, 2020

'ஆயுஷ் குடிநீர்' : இந்த நான்கு பொருட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! thanks to dinamalar.com

செய்தி 

இந்தியா

'ஆயுஷ் குடிநீர்' : இந்த நான்கு பொருட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

 Up
 6
புதுடில்லி: மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி, இலவங்கப் பட்டை, சுக்கு, மிளகு ஆகியவை சேர்த்த 'ஆயுஷ் குடிநீரை' உருவாக்கியுள்ளது. பவுடர் மற்றும் மாத்திரை வடிவில் கிடைக்கும் இதற்கு பிரதமர் மோடியும் ஒப்புதல் தந்துள்ளார்.

துளசி நான்கு பங்கு, சுக்கு இரண்டு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, மிளகு ஒரு பங்கு என்ற வீதத்தில் சேர்த்து இந்த மூலிகைப் பொடியை ஆயுஷ் அமைச்சகம் தயாரித்துள்ளது. 'கொரோனா வைரஸ் பரவும் சமயத்தில், நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தயாரித்துள்ள இந்த மூலக்கூறை, பயன்படுத்தி மூலிகை பொடியை தயாரிக்க ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருந்து நிறுவனங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.' என ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

latest tamil news


துளசி, சுக்கு, இலவங்கப்பட்டை, மிளகு ஆகிய நான்கு பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஆயுஷ் குடிநீர் பொடியை தயாரிக்கலாம் என்றும் அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 150 மில்லி கொதிக்க வைத்த நீரில், இப்பொடியை 3 கிராம் அளவு கலந்து தினசரி காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம். சுவைக்காக வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். நோயெதிர்ப்பு சக்தி பெருகும் என்கின்றனர். ஞாயிறன்று மன் கி பாத் வானொலி உரையில் மோடி, ஆயுஷ் சுகாதார அமைப்பின் பயன்பாட்டினை வலியுறுத்தினார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் உலக முழுவதும் மக்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகா மீது கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

No comments:

Post a Comment