Monday, April 20, 2020

விஸ்வநாத் ஆனந்தின் தாரக மந்திரம்..! thanks to dinamalar.com

விஸ்வநாத் ஆனந்தின் தாரக மந்திரம்..!

 Updated : ஏப் 20, 2020  Added : ஏப் 20, 2020  கருத்துகள் (2)
Share




1. புதிய இயல்பை ஏற்று கொள்ளுங்கள்


நீங்கள் தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்று கொள்ள வேண்டும். சில விஷயங்களை அமைதியாக ஏற்று கொள்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. சில நடைமுறையில் மாற்றங்கள் தேவைப்படும். என்னை போன்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆனால் நிறைய பேரில் தொழிலில் அது எளிதானதல்ல.

2. தொடர்ந்து கற்றுகொண்டேயிருப்பது எப்படி?

உங்களுக்குத் தெரிந்த அல்லது உங்களுக்குத் தெரிந்ததாக நினைத்த விஷயங்களுக்கு இடையே முரண்படும்போது, நீங்கள் உங்களை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் , உங்களை கவனித்து ஏதாவது கற்றுக்கொள்ளலாம். கற்றலுக்கான உங்கள் எதிர்ப்பைக் கடந்து செல்லுங்கள். நீங்கள் அதைக் கடந்தவுடன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கும். உண்மையான கற்றல், நீங்கள் கேட்கும் கேள்வியை பொறுத்தது. ஏனெனில் பதில்கள் மிகவும் அணுக கூடியவை. உங்கள் கேள்விகளை மாற்றி கொண்டே இருங்கள். கற்று கொள்ளவும், அனுபவிக்க தயாராக இருந்தால், உங்களுக்கான வேலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். மேலும் தினசரி அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை பார்க்க வேண்டும்

latest tamil news




3. திருப்தியற்ற நிலையை தவிர்ப்பது எப்படி?

என்னை நானே ஊக்குவிக்காமல் இருப்பதில் சில போராட்டங்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு முறையும் விஷயங்கள் சரியாக நடக்கும்போது, தவறாக நடந்த விஷயங்களை நினைவில் வைத்து அவற்றை குறிப்புகளாக வைத்து கொள்ளுங்கள். உலகம் நின்றுவிடாது. மக்கள் விரைவாக பிடித்து விடுவார்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை செய்தால் உங்களுக்கு நீங்களே உதவலாம். பின்னர் ஆர்வம் இயற்கையாக வந்துவிடும். தவறுகள் நிகழ்வதுண்டு. அதை மேம்படுத்துவது முக்கியமானது.

4. மனதை அமைதியாக வைத்திருப்பது எப்படி?

முடிந்தவரை அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். சிறிய மனக்குறிப்புகளை கொண்டிருங்கள். நீங்கள் ஒரு உணர்வை அனுபவிக்கும்போது, கடந்த முறை எவ்வாறு உங்களுக்கு பயன்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக, முன்னரே உற்சாக மிகுதியடைவது உங்கள் கவனத்தை பாதிக்க கூடும்.

5. நல்ல பையனாக இருப்பது எப்படி?

மக்கள் வெற்றிபெற பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இது சட்டப்பூர்வமாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்ய நீங்கள் வசதியாக இருக்க மாட்டீர்கள். எனவே நீங்கள் செய்ய வசதியான விஷயங்களுடன் செல்லுங்கள். நான் அதே பேய்களுடன் மல்யுத்தம் செய்கிறேன். ஆனால் அதை நானே வைத்திருக்க முயற்சிக்கிறேன்.

6. உங்களை நீங்களே ஊக்குவிப்பது எப்படி?

உங்களை எப்படி ஊக்குவிப்பது என்பது மாறிக்கொண்டே இருக்கும், மூளை வெவ்வேறு தூண்டுதல்களுக்கு பதிலளிக்கிறது. இப்போது என்னை மிகப்பெரிய அளவில் இயக்கும் விளையாட்டை மிகவும் ரசிக்கிறேன். உங்கள் மோகத்தை கண்டுபிடியுங்கள். உங்களுக்கும், வரவிருக்கும் இளம் வீரர்களுக்கு எதிராக நான் எவ்வளவு நல்லவன் என்பதை பார்க்க விரும்புகிறேன்.

latest tamil news




7. கோவிட் சகாப்தத்தில் உத்தி

நாம் 8 மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் திரும்பி வந்தாலும் நேற்று நமக்கு தேவையான விஷயங்கள் இன்னும் தேவை. தவறாமல் செய்ய வேண்டிய வேலை என்பது நல்ல வழியில் துவங்குவதாகும். ஒரு வழக்கம் உதவிகரமாக இருக்கும். வேலை செய்ய சில மணி நேரங்களை ஒதுக்குங்கள்.

8. கோபம், இழப்பை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்றைய இழப்பை எண்ணி, நாளைய ஆட்டத்தை இழக்க செய்ய வேண்டாம். விரைவான விளையாட்டுகளில் இதைச் செய்வது மிகவும் கடினம் - நான் குளிர்ந்த நீரைத் தெறிப்பேன்., ஓய்வு எடுத்து கொள்ளுங்கள், நடைப்பயணம் செல்லுங்கள். குழந்தையை வைத்திருந்தால் உங்கள் கவனம் மாறும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உணர்ச்சி ரீதியாக மிகவும் உதவிகரமாக இருக்கும்.

9. மகனுக்கு கூறும் அறிவுரை

அவன் விரும்பும், மிக சிறப்பாக செயல்படும் விஷயங்களைக் குறிப்பிடுவதன் மூலம் நான் தொடங்குவேன். புதிய சூழலிலும், புதிய சூழ்நிலைகளிலும் அதை பயன்படுத்தும்படி கேட்பேன்.மேலும் சிலவற்றை முயற்சி செய்து ரசிக்கும்படி கூறுவேன். ஏனென்றால் அவனுக்கு சில சமயங்களில் செயல்திறன் கவலையாக இருக்கிறது. நீங்கள் அதை ரசிக்கிறீர்களா, இல்லையா என்பதே முக்கியமான விஷயம். எங்கள் குழந்தைகளுக்கு அதை சொல்ல முடியாது என நாங்கள் உணர்கிறோம். ஏனென்றால் பள்ளியை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.

No comments:

Post a Comment