Monday, April 27, 2020

மனிதனின் முப்பது கடமைகள்! thanks to tamil and vedas


மனிதனின் முப்பது கடமைகள்! (Post No.7887)

by Tamil and Vedas
WRITTEN BY S NAGARAJAN                     
Post No.7887
Date uploaded in London – – 27 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures
ச.நாகராஜன்
நாரதர் கூறிய 30 கடமைகள்
தர்மபுத்திரருக்கு ஒரு முறை தர்ம சம்பந்தமான சில சந்தேகங்கள் எழுந்தன. தனது சந்தேகங்களைத் தீர்க்க வல்லவரான நாரதைரை அவர் தரிசித்தார்.
நாரதரிடம் தனது சந்தேகங்களைக் கேட்க அவர் ஒவ்வொன்றாக விளக்குகிறார்.
பாகவதத்தில் ஏழாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாம் அத்தியாயத்தில் பல்வேறு தர்மங்கள் நாரதரால் விளக்கப்படுகின்றன.
தர்ம ரகசியத்தை எனக்கு விளக்கி அருள்வீராக என்று யுதிஷ்டிரர் கேட்க நாரதர் விளக்கும் ஒரு பகுதியாக மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாய் அனுஷ்டிக்க வேண்டிய முப்பது கடமைகள் விளக்கப்படுகிறது.
அந்த முப்பது கடமைகளாவன:-
1) அனைத்துப் பிராணிகளுக்கும் இதம் செய்வதாகிய ஸத்யம்
2) பிறர் துக்கம் கொண்டு பொறுக்காமல் இருக்கும் தயை
3) உபவாசம் முதலிய தவம்
4) பொறுமை
5) விவேகம்
6) உள்ளே இருக்கும் இந்திரியமான மனத்தை அடக்குதல்
7) வெளி இந்திரியங்களை, அதாவது புலன்களை, அடக்குதல்
8) மனோ வாக்கு காயங்களால் மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்காமை
9) தகாத காலங்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ளாமை
10) லோபம் இல்லாமை
11) முறைப்படி மந்திர ஜபம் செய்தல்
12) மனோ வாக்கு காயங்கள் ஒன்றாக இருத்தல்
13) தெய்வாதீனமாய் ஏற்பட்டிருக்கும் அன்னம் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றிருத்தல்
14) எல்லாவற்றையும் பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று சமமாய்ப் பார்க்கும் பெரியோர்களைப் பணிதல்
15) ப்ரவிருத்தி கர்மங்களிலிருந்து மீளுதல்
16) பயனற்ற காரியங்களைச் செய்யலாகாது என்று நிரூபித்து நிர்ணயித்தல்
17) வீண்பேச்சுப் பேசாமல் மிதமாகப் பேசுதல்
18) தேகத்தைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் சொருபத்தை ஆராய்தல்
19) பிராணிகளுக்கு உரியபடி அன்னம் முதலியவற்றைக் கொடுத்தல்
20) அனைத்து பூதங்களிலும் ஆத்மாவும் பரமாத்மாவும்
அமைந்திருக்கின்றார்கள் என்ற நினைவு கொண்டிருத்தல்
21) அனைத்து பூதங்களும் தன்னைப் போன்றவை என்றும், பரப்ரம்ம சொரூபங்கள் என்றும் பாவித்தல்
22) மனிதரிடத்தில் அந்த நினைவு எப்போதும் மாறாது நிறைந்திருத்தல்
23) பெரியோர்கள், “நமக்கு இவனே கதி” என்று பாவித்து வணங்கும் பகவானுடைய குணங்களைக் கேட்டல்
24) பகவானுடைய நாமங்களைக் கீர்த்தனை செய்தல்
25) அவனது சொரூப ரூப குண விபூதிகளை நினைத்தல்
26) அவன் பாதங்களைப் பணிதல்
27) அர்க்யம் , பாத்யம் முதலியன கொடுத்து அவனை ஆராதித்தல்
28) அவனை வணங்குதல்
29) அவனுக்கு எல்லாவிதத்திலும் அநுகூலனாய் இருத்தல்
30) அவனிடத்தில் ஆத்ம சமர்ப்பணம் செய்தல்
இந்த முப்பதும் மனிதர்கள் அனைவரும் சாதாரணமாக அனுஷ்டிக்க வேண்டிய மேலான தர்மம் என்று நாரதர் யுதிஷ்டிரருக்கு விளக்கி அருளுகிறார்.
*
Truthfulness, compassion, austerity and cleanliness [with the vidhi]; tolerance, discrimination, composure and continence, nonviolence, celibacy, generosity and study of the scriptures, sincerity, contentment and to serve the holy souls [in yama and niyama]; gradually cutting with that what is unnecessary and to be of gravity in avoidance of empty talk, self-search, to share food and drink with all beings and to consider everyone first of all a part of God, oh Pândava; to listen and to sing as also to remember Him who is the shelter of all the great souls, to attend, to worship and to propitiate, to be a servant, to be a friend and to be of surrender [in bhâgavata dharma]; to possess all the thirty characteristics as described constitutes the supreme of dharma that pleases Him, the Soul of All, oh King [compare B.G. 12: 13-20].
*
இன்னொரு ஆங்கில மொழிபெயர்ப்பு : செய்தவர் :
 An Unknown Servant
Thirty Items of Man’s Duty
Truth,
Compassion,
Austerities,
Purity,
Endurance,
Discrimination between right and wrong,
Control over the mind and senses,
Non-violence,
Practice of Brahamacharya,
Renunciation of prohibitory acts and of part of one’s earning for charity,
Study of the Vedas and practices of Japa and Kirtana of the Divine Name,
Contentment,
Service of saints who regard all as equal,
Gradual withdrawal from worldly enjoyments,
Reflection on the failure of man’s egoistic efforts,
Introspection,
Meditation on the Self,
Equitable distribution among creatures of food-grains and other necessary things,
Looking upon all beings and especially men as the Self or as the Deity,
Hearing,
Loud chanting and constant remembrance of the Name and virtues of Bhagavan Sri Krishna,
The Supreme refuge of saints,
Offering of Service,
Adoration and salutations to Him,
Cultivation of the servant or friendly sentiment towards Him,
And surrender of the Self to Him,
All these are the highest Dharma of men.
Observance if these thirty items of Dharma propitiates God, the soul of the Universe.
*
நாத்திகம் பற்றி பாகவதம்!
கடவுளை நினைக்காமல் அவனிடமிருந்து தள்ளி இருக்கும் மனிதனுக்கு என்ன நடக்கும் ?
இப்படி விதேஹ மன்னனான ஜனகன் கேட்க அவன் முன்னே கூடி இருந்த ஸாதுக்களில் ஒருவர் இப்படி பதில் அளிக்கிறார் :- (அதாவது ஒரு நாத்திகனுக்கு என்ன நடக்கும் என்பதே ஜனக மன்னனின் கேள்வி!)
தர்ம சூட்சுமத்தை அறியாத மூடர்கள் வணக்கமின்றித் தங்களைத் தாங்களே புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு ‘நமக்கு என்ன நேருமோ’ என்ற சந்தேகமே இல்லாமல், ‘நமக்கு ஒரு கெடுதியும் இல்லை’ என்ற பெரிய நம்பிக்கை உடையவர்களாகி பிராணிகளுக்குத் தீங்கை இழைக்கின்றனர்.
அந்தப் பிராணிகள் மேலுலகம் சென்ற பின்னர் தங்களுக்குத் தீங்கை இழைத்த துரோகிகள் அங்கு வரும் போது அவர்களுக்குத் தீங்கைச் செய்கின்றன. மேலும் அந்த மூடர்கள் பிறருடைய தேகங்களில் வெறுப்பு கொண்டு அபிசாரம் முதலிய கொடிய செயல்களைச் செய்கின்றனர். அந்த வெறுப்பானது தங்களுக்கும் பிறர்க்கும் அந்தராத்மாவாய் இருக்கும் துக்கங்களைப் போக்கும் பரம புருஷனிடத்திலேயே போய்ச் சேரும் என்பதால் அவர்கள் அவனையே வெறுத்தவர்கள் ஆகிறார்கள்.
மேலும் அவர்கள் பிள்ளை பெண்டிர் போன்ற  இணைப்பைக் கொண்டதும்  பிணம் போன்றதுமாகிய தேகத்தில் சிநேகம் கொண்டு அதில் வேரூன்றப் பெற்று நரகத்தில் விழுகிறார்கள்.
வாசுதேவனை நினைப்பவர்கள் நல்ல கதியை அடைய அப்படி இறைவன் நினைப்பு இல்லாதவர்கள் தீய கதியையே அடைகின்றனர்.
இந்த விடையால் ஜனகன் தெளிவு பெறுகிறான்.
****
இப்படி ஏராளமான கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக ஜனகன் பெரும் மகான்களின் முன் வைக்க அவனுக்கு உரிய விடைகள் கிடைக்கின்றன.
பாகவதம் தரும் ஏராளமான அற்புத விளக்கங்களை பதினொன்றாம் ஸ்கந்தம் நான்காம் அத்தியாயத்தில் காணலாம்.
****

No comments:

Post a Comment