Tuesday, April 28, 2020

தமிழக ரசத்தின் நோய் எதிர்ப்பு: விஞ்ஞானி கணிப்பு thanks to dinamalar.com

தமிழக ரசத்தின் நோய் எதிர்ப்பு: விஞ்ஞானி கணிப்பு

 Updated : ஏப் 27, 2020  Added : ஏப் 27, 2020  கருத்துகள் (59)
Share
224Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
மதுரை: தமிழக உணவுகளில் சேர்க்கப்படும் ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதாக விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கணித்துள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (வி.சி.ஆர்.சி) மூத்த இந்திய துணை இயக்குநராக உள்ள விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கூறியதாவது: இந்தியர்கள் உட்பட தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் பரம்பரை ரீதியாக நன்கு பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்கள், வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான, சக்திவாய்ந்த மரபணுக்களை கொண்டுள்ளனர். 2003ல் சார்ஸ் வைரஸ் வெடித்தபோது, மற்ற நாடுகளில் ஏராளமான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகபிள் டிசைஸஸ் வெளியிட்ட குறிப்பின்படி, ஏப்ரல் 9, 2003 வரை, இந்தியாவில் சார்ஸால் பாதிக்கப்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை. மேலும், கோவிட்-19 மற்றும் SARS CoV-2, வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது.

latest tamil news


சில நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதில் உணவுப் பழக்கமும் ஒரு பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவில், நம் உணவில் ‛ரசம்' சேர்த்து வருகிறோம். அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்ட பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை நுரையீரலை பாதுகாக்கின்றன. இது பல வைரஸ் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது. இந்த ரசம், பல ஆண்டுகளாக நம் உணவில் சேர்க்கப்படுகிறது.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், தமிழகம் மற்றும் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு தான். அதேபோல், தொற்று பாதிப்பு அதிகரிக்க புவியியல் இருப்பிடமும் ஒரு பங்கு வகிக்கிறது. அதாவது, மக்கள்தொகை அடர்த்தியான நகர்ப்புறங்களில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது, மக்கள்தொகை குறைவான நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் குறைவான பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment