Wednesday, July 19, 2017

காய்ச்சிய நீரை மறுநாள் பருக கூடாது! thanks to dinamalar.com

காய்ச்சிய நீரை மறுநாள் பருக கூடாது!

ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன்: சாதாரணமான தண்ணீரில் மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்ற தாது பொருட்கள், இயற்கையாகவே கலந்துள்ளன. 'பேக்கேஜ்டு' குடிநீரில், சுத்திகரிப்புக்கு பின், இந்த தாதுப் பொருட்கள் எல்லாம் சேர்க்கப்படுகிறதா என்பது சந்தேகமே. மேலும், சுத்திகரிப்பு இயந்திர கருவியில் தண்ணீரை சுத்தப்படுத்தி கொண்டு 
வர, மூன்று மடங்குதண்ணீர் வீணாகிறது.வீட்டில் கிடைக்கும் ஆழ்துளை கிணறு தண்ணீர் அல்லது குழாய் தண்ணீரை, அப்படியே பருகலாம். ஆழ்துளை கிணறு தண்ணீர் உவர்ப்பாக இருந்தால், செப்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால், அதுவே நன்றாக சுத்திகரித்து விடும். அந்த நீரை மண்பானையில் ஊற்றி வைத்து குடித்தால், அதைவிட சுவையான, பாதுகாப்பான குடிநீர் எதுவுமில்லை. செப்பு பாத்திரம், மண்பானை இரண்டும் உலகிலேயே மிகச்சிறந்த சுத்திகரிப்பு கருவிகள்.அதேபோல், எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து, குடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நோய் பரவும் காலம், மழைக் காலங்களில் மட்டும் நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி பருகினால் போதும். மற்ற நாட்களில் சாதாரண தண்ணீரே போதும். இந்த காய்ச்சிய குடிநீரையும், வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை.அதேநேரம், சென்னை போன்ற பெருநகரங்களில் நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த நீரை அப்படியே குடிக்கலாமா என்பது ஆய்வுக்குரியது. எனவே, அவர்கள், வீட்டிலேயே மூலிகை குடிநீர் தயார் செய்து பருகலாம்.கேரளாவில் பெரும்பாலான இடங்களில், பதிமுகம் குடிநீரை தான், மக்கள் பருகுகின்றனர். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பதிமுகம் மரப்பட்டையை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து கொதிக்க வைத்து பருகலாம்.காய்ச்சும்போது தண்ணீர் ஊதா நிறத்தில் இருக்கும். இதை எல்லா காலத்திலும் எல்லாரும் பருகலாம். பதிமுகம், குடிநீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இதய நோயாளிகள், கொழுப்பு பிரச்னை, இதய அடைப்பு உள்ளோருக்கு, பதிமுகம் நீர் மிகவும் நல்லது.கருங்காலி குடிநீரும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை நீர். கருங்காலி பட்டையுடன் வெட்டிவேர், ரத்த சந்தனம், விளாம் பிசின், கொத்தமல்லி, சீரகம் போன்ற மூலிகைகள் கலந்த கலவை கடைகளில் கிடைக்கிறது. இதை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி பருகுவதால் சளி, இருமல், தோல் மற்றும் ரத்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு, கருங்காலி தண்ணீர் நல்லது.
இதுதவிர, சீரகத்தை லேசாக வறுத்து, தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, இளஞ்சூட்டில் அந்த நீரை பருகலாம். சீரக குடிநீர், செரிமான சுரப்பிகளை துாண்டி, நல்ல பசியை உண்டாக்கும். இந்த நீரைப் பருகுவதால் எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. உடலில் உள்ள வாயுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிறு சார்ந்த நோய்களைப் போக்குவதுடன், நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

No comments:

Post a Comment