Tuesday, November 20, 2018

அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும் thanks to tamil and vedas.com

ரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்! (Post No.5670)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    20 Nov at 9:58 AM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்! (Post No.5670)

    by Tamil and Vedas
    Written by S Nagarajan
    Date: 17 November 2018
    GMT Time uploaded in London –7-09 am
    Post No. 5670
    Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
    அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்!
    ச.நாகராஜன்
    1
    அப்பர் தனது பாடல்களில் நூற்றுக்கணக்கான இரகசியங்களைப் போகிற போக்கில் தெரிவித்துக் கொண்டே இருப்பார்.
    அதை ஊன்றிக் கவனித்து அறிய வேண்டியது நமது கடமை.
    ஐந்தாம் திருமுறையில் பொதுப் பாடலாக அமையும் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்.
    நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                               ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. 
    ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.
    இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் பிறந்து இறந்து விட்டனர்.
    அதே போல ஆறு கோடி நாராயணர்கள் அவதரித்து மறைந்து விட்டனர்.
    இந்திரனைப் பற்றிச் சொல்லப் போனாலோ, கங்கை ஆற்றின் மணலை எண்ண முடியுமா? அதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு எண்ணிக்கை வருகிறதோ, அந்த அளவு தோன்றி மறைந்து விட்டனர்.
    ஆனால் ஈறு இல்லாதன் - முடிவே இல்லாதவன் - ஈசன் ஒருவனே என்பதை அறியுங்கள்.
    Picture posted by Lalgudi Veda
    2
    பிரம்மாவின் ஆயுள் என்ன என்பதை வேதம் கூறுகிறது.
    ஒரு மனித வருடம் - ஒரு தேவ அஹோராத்ரம் (அதாவது தேவரின் ஒரு பகலும் இரவும்)
    360 தேவ அஹோராத்ரம் - 1 தேவ வருடம்
    12000 தேவ வருடம் - ஒரு சதுர் யுகம்
    ஒரு சதுர் யுகம் - ஒரு கிருதயுகம், ஒரு த்ரேதா யுகம், ஒரு த்வாபர யுகம், ஒரு கலியுகம் கொண்டது.
        ஒரு கலியுகம் - 4,32,000 மனித வருடங்கள்
    ஒரு த்வாபர யுகம் - 8,64,000 மனித வருடங்கள்
    ஒரு த்ரேதா யுகம் - 1,296,000 மனித வருடங்கள்
    ஒரு கிருத யுகம் - 1,728,000 மனித வருடங்கள்
    ஆக ஒரு சதுர் யுகம் - 4,320,000 மனித வருடங்கள்
    71 சதுர் யுகம் - ஒரு மன்வந்தரம்
    14 மன்வந்தரம்  ஒரு கல்பம்
    2 கல்பம் - பிரம்மாவின் ஒரு பகல் ஒரு அஹோராத்ரம்
    360 நாட்கள் - ஒரு பிரம்ம வருடம்
    100  பிரம்ம வருடம் பிரம்மாவின் ஆயுள்
    *
    சிவ புராணத்தில் (7.4 TIME CALCULATION) பிரம்மாவின் ஆயுள் பற்றி இப்படி கூறப்படுகிறது.
    பிரம்மாவின் ஒரு வருடம் = 1000 கல்பங்கள்
    ஒரு பிரம்ம யுகம் என்பது அப்படிப்பட்ட 8000 வருடங்கள் கொண்டது.
    ஒரு பிரம்ம சவனம் என்பது அப்படிப்பட்ட 1000 யுகங்களைக் கொண்டது.
    பிரம்மாவின் ஆயுள் அப்படிப்பட்ட 3000 சவனங்களைக் கொண்டது.
    இப்படிப்பட்ட பிரம்மாவின் ஆயுளுக்குள் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் வந்து போகின்றனர்!
    பிரம்மாவின் முழு ஆயுள் விஷ்ணுவிற்கு ஒரு நாள்.
    விஷ்ணுவின் முழு ஆயுளும் ருத்ரனுக்கு ஒரு நாள்.
    ருத்ரனின் முழு ஆயுளும் சிவனுக்கு ஒரு நாள்.
    சிவனின் ஆயுள் காலத்தில் ஐந்து லட்சத்து நான்காயிரம் ருத்ரர்கள் வந்து போகின்றனர்.
    முழு விவரங்களுக்கு சிவ புராணத்தை கீழ்க்கண்ட தளத்தில் பார்க்கலாம்.
    ஆக, அம்மாடியோவ் என்று இருக்கிறது கணக்கு!

    3
    பிரம்ம வைவர்த்த புராணத்தில்  கிருஷ்ண ஜன்ம காண்டத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது.
    இந்திரனுக்கு எங்கும் இல்லாத ஒரு அரண்மனை அமைக்க ஆசை. விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு அப்படி ஒரு அழகிய அரண்மனையை அமைக்கப் பணித்தான். விஸ்வகர்மாவும் தன் திறமையை எல்லாம் காட்டி ஒரு நகரையே அமைத்தான். ஆனால் இந்திரன் திருப்தியுறவில்லை. இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகக் கூறிக் கொண்டே இருந்தான்.
    சோர்ந்து போன விஸ்வகர்மா பிரம்மாவிடம் முறையிட நாளை உன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என்று அருளினார்.
    அடுத்த நாள் காலை இந்திரனின் வாசலில் ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் வந்து சேர்ந்தான். அவனை வரவழைத்த இந்திரன் அவன் வந்த் நோக்கத்தைக் கேட்கவே, “நீங்கள் ஒரு அழகிய நகரை நிர்மாணிப்பதாகக் கேள்விப்பட்டேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் அது முடிய? இதுவரை எந்த இந்திரனும் செய்யாத ஒரு அரிய காரியத்தை ஆரம்பித்திருக்கிறாயே!”  என்றான்.
    இந்திரன் சிரித்தான்.
    “இது வரை எத்தனை இந்திரர்களை நீ பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டான்.
    அதற்கு அந்த பிராம்மண பையன் ஒவ்வொருவரின் ஆயுளையும் விவரமாக எடுத்துரைக்க ஆரம்பித்தான்.
     “கணக்கிலடங்கா எத்தனை உலகங்கள். நீர்க்குமிழிகள் போல உடைந்து உடைந்து எத்தனை பிரபஞ்சங்கள். எத்தனை பிரம்மாக்கள். எத்தனை இந்திரர்கள்“ என்று விவரமாக ஒரு சொற்பொழிவையே ஆற்றிச் சிரித்தான்.
    அப்போது அங்கு எறும்புகளின் அணிவகுப்பு ஒன்று சென்றது. அந்த எறும்புகளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.
    “எதற்குச் சிரிக்கிறாய்?” என்று இந்திரன் கேட்டான்.
    “இதோ, போகின்றனவே, கணக்கிலடங்கா எறும்புகள். இவை அனைத்துமே ஒரு காலத்தில் இந்திரர்களாக இருந்தவர்களே. புண்ணியம் போன பின் அந்த இந்திரர்கள் இதோ, இந்த எறும்பாக ஊர்கின்றனர்” என்றான்.
    இதைக் கேட்ட இந்திரன் திடுக்கிட்டு பூரண ஞானத்தை அடைந்தான். கர்வ பங்கம் அடைந்தான்.
    கர்மத்தினாலேயே ஒருவன் நல்ல பதவியை அடைகிறான் என்றும் அதே கர்மத்தினாலேயே அவன் கீழ் நிலையையும் அடைகிறான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.
    எறும்புகளின் அணிவகுப்பு (The Parade of Ants)!
    இதைப் படித்தால் எல்லையற்ற பிரபஞ்சத்தின் முடிவற்ற காலம் என்பது பற்றி அறிய முடியும்.
    *
    அப்பர்  பிரான் இந்தக் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணி வியந்தார்.
    அந்தமில்லா - ஈறு ஒன்று இல்லா - பிரானின் பெருமை அவரை விக்கித்தது. உடனே, தனக்குத் தெரிந்த கால இரகசியத்தை உள்ளடக்கி, ஈறு இல்லா ஈசனைப் போற்றிப் பாடினார் :

    நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                                ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.ஈசனின் வயது என்ன - ஈறு இல்லை - என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.அப்பர் பிரானின் பாடல்கள் ஆழ்ந்த ரகசியங்களை விளக்குபவை; பொருளாழம் கொண்டவை.தேவாரம் படிப்போம்; இரகசியம் அறிவோம்!!

No comments:

Post a Comment